Wednesday 25 September 2013

அதிசயம் ஆனால்அற்புதம் நாகலிங்கப் பூ

அதிசயம் ஆனால்அற்புதம் நாகலிங்கப் பூ
ஆன்மீக அதிசயம்
ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு. என்ன மர்மக்கதை போல இருக்கிறதா. நான் இது வரை சொன்னது ஒரு பூவைப் பற்றி
இதன் பெயர் நாகலிங்கப் பூ,.
அறிவியல் அதிசயம்
இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.
தன்மை
மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூ பார்க்கப் படுகிறது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.
மருத்துவத்திலும் அதிசயமே
ஆன்மீகம் மற்றும் அறிவியலில் இதன் அதிசியங்களைப் பார்த்துவிட்டோம். இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குளிர் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.
காணப்படும் இடங்கள்
இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.
PROGITHAM , JATHAGAM PARKA, THIRUMANA PORUTHAM ,

JATHAGAM KANIKKA,   NUMEROLOGY,  GEMOLOGY
G.V. MANIKANDA SHARMA
1/267, MMDA Colony, J J Negar Mogappair East
Chennai – 600 037 , Tamil Nadu – India
Cell : +91 9962225358 9444226039

No comments:

Post a Comment