Friday 16 August 2013

ஆதிசங்கரர் அருளிய சௌந்தரிய லஹரி 11 To 20,




சௌந்தரிய லஹரி
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது.
11. சந்தான(குழந்தை) பாக்கியம் பெற
ஞானம் உண்டாக- பீஜம்  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: ஸம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஸ்சத்வாரிம்ஸத்-வஸுதல-கலாஸ்ர-த்ரிவலய-
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:
தேவி இருக்கும் சக்கரம் (தமிழ்)
சிவகோணம் முன் பகர்வது ஒரு நாலு சத்திநெறி செறி கோணம் அத்தொடு ஒரு மருவுகோள் நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு நவில் கோணம் உற்றதுவும் வலயமாய் இவரா நிரைத்த தளம் இருநாலும் எட்டு இணையும் எழிலாய வட்ட மொடு சதுரமாய் உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என் உமை பாதம் உற்ற சிறு வரைகளே.
பொருள்: நான்கு சிவசக்கரங்களாலும், சிவசக்கரங்களிலிருந்து வேறுபட்ட சக்தி சக்கரங்கள் ஐந்தினாலும் ஒன்பதாய் உள்ளதும், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவ ங்களுடன் கூடியதுமான உன் இருப்பிடமான ஸ்ரீ சக்கரத்தின் கோணங்கள் எட்டுத் தளம், பதினாறு தளம், மூன்று மேகலை வட்டங்கள், மூன்று பிரகாரக் கோடுகள் ஆகிய வற்றுடன் கூடி நாற்பத்து நான்கு கோணங்களாக அமைந்துள்ளன.
ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் புத்திர சந்ததி இல்லாதவர்களுக்கு ஸத்புத்ர  லாபம் உண்டாகும்.
12. கவிதை உண்டாக, ஊமைத்தனம் நீங்கி நல்ல  கல்வி, அறிவு உண்டாக பீஜம் ஓம் ஓம் ஐம் ஐம் ஸௌ: ஸௌ:
த்வதீயம் ஸெளந்தர்யம் துஹிநகிரிகந்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி-ப்ரப்ருதய:
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலநா யாந்தி மநஸா
தபோபிர்-துஷ்ப்ராபாமபி கிரிஸ-ஸாயுஜ்யபதவீம்
தேவியின் திருவழகு வியந்தது (தமிழ்)
ஆதி சுந்தரி வடிவினை அயன்முதல் புலவோர்
ஏது கண்டு அளவிடுவது தமை இகழ் இமையோர்
மாதர், இங்கு, இவள் மகிழ்நரோடு உறைகுவம் எனின் ஓர்
பேதை கொங்கைகள் பெறுகுவம் என மறுகுவரால்!
பொருள்: பனிமலையரசனின் புதல்வியே! உன் உடலழகை வர்ணிப்பதற்கு கவிதையில் வல்லவர்களாலும், பிரம்மா போன்றவர்களாலும் கூட இயலாது. அழகுக்கு சரியான உவமை கூற எப்படியெல்லாமோ முயன்று பார்த்தும் அவர்களால் முடியவில்லை. அழகில் சிறந்த தேவர் உலக மகளிரும் பரமசிவனின் கண்களை கொண்டுதான்  அதைப் பார்க்க முடியும் என்று நினைத்து அடைதற்கரிதான பரமசிவ ஸாயுஞ்ய பதவியை மானசீகமாய் அடைகிறார்கள்.
ஜபமுறையும் பலனும்
முதலில் ஒரு பாத்திரம் நிறைய ஜலம் எடுத்து, அந்த ஜலத்தில் ஒரு நீள்வட்டத்தில் நாற்கோணம் எழுதி, அதன் நடுவே ஸெள: ஸெள: என்று எழுதி, அந்த ஜலத்தின் முன் 45  நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து, பின் அந்த ஜலத்தை அருந்தச் செய்தால் ஊமையும் பேசுவான். படித்தவன் பேச்சில் வல்லவனாவான். கவிதையும் புனைவான்.
13. நல்ல மனைவி அமைய, ஸ்த்ரீ வச்யம்.
பீஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம் ஸாத்யம் க்லீம் க்லீம் க்லீம்
நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித-மநுதாவந்தி ஸதஸ:
கலத்வேணீபந்தா: குசகலஸ-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத் த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:
தேவியின் கருணை வியந்தது (தமிழ்)
அறக்கிழவன் மனிதன் விரகு இல்லாக் கொச்சை அழகு இருந்த ஊரில் இருந்து அறியானேனும் உறக்கருணை கொழிக்கும், உனது அமுதவாரி ஊடு அணுகின் அவனை, அரமகளிர் எல்லாம் நறைக்குழலும் சரிந்திட, உத்தரீயம் சோர நாண் அழிய, வளைசிதற, உடுத்த ஆடை புரத்துவிழ, மயலொடும் பின்தொடர்வர் என்றால் பொற்கொடி, நின்புதுமை எவர் புகழவல்லார்!
பொருள்: அம்பிகையே! உன் கடைக்கண் பார்வையில் விழுந்த ஒருவனை, அவன் முதியவனாகவோ, குரூபியாகவோ, சிற்றின்பக் கேளிக்கைகளில் விருப்பமற்றவனாக வோ இருப்பினும், நூற்றுக்கணக்கான அழகிய இளம் மகளிர் வெட்கத்தை விட்டு ஆசையோடு அவனைப் பின் தொடர்ந்து ஓடிவருவார்கள்.
ஜபமுறையும் பலனும்
6 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தார்மீக முறையில் தாம் விரும்பும் பெண்ணை  அடைவதற்கு ஏற்பட்ட தடைகள் நீங்கி அந்த ஸ்த்ரீ லாபம் ஏற்படும். (அதர்ம வழியில் முயற்சித்தால் விபரீத பலன்தான் கிடைக்கும்)
14. பில்லி, சூனியம் விலக, பசி, பிணி நீங்க தேஹ  ஆரோக்யம் பெற - பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் - ஐம் ஸ்ரீம் - ஐம் ஸ்ரீம் - ஐம் ஸ்ரீம் - ஐம் ஸ்ரீம் சௌ க்லீம் ஐம்
க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுத்ஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ-தநிலே
திவி த்விஷ் ஷட்த்ரிம்ஸந்-மநஸி சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபுரி தவ பாதாம்புஜ-யுகம்
தேவியின் பாதாரவிந்தம் உறையும் இடம் (தமிழ்)
பணை, பார், புனல், கனலி, வளி, வான் மனத்தில் அறு பதில் நால் ஒழித்தது முன் அடைவிலே இணை நால் ஒழித்தது, இருகதிர் ஏற உற்றது மூ இணை போயது எட்டினோடு கதிர்கள் நால் அணையா நிரைத்தது உறுகதிர்நால் அடுத்ததன் அளவாய் இலக்கம் அறுவகையினால் உணரா உரைத்த கதிர்களின் மேல் இருக்குமெனது உமைபாத செக்கர் விரிகமலமே!
பொருள்: தேவியே! பூமி தத்துவமாகிய மூலாதாரத்தில் 56, ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52, அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62, வாயு தத்துவமாகிய  அநாஹதத்தில் 54, ஆகாச தத்துவமாகிய விசுக்தியில் 72, மனஸ்தத்துவமாகிய ஆக்ஞையில் 64 என கிரணங்கள் உள்ளன. இந்த கிரணங்களுக்கும் மேலாக உள்ள  ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றன.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் நாட்டிலோ, வீட்டிலோ ஏற்பட்டிருக்கும்  பற்றாக்குறைகளும், கலவரங்களும் நீங்கி சுபிக்ஷமும் அமைதியும் ஏற்படும்
15. கவிதைகள் சொந்தமாக இயற்ற
பீஜம் ஓம் ஐம் ஸம் ஸம் ஸம் ஸம் ஸம் ஸம் ஸீம்
ஸரஜ்-ஜ்யோத்ஸ்நா ஸுத்தாம் ஸஸியுத-ஜடாஜூட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக கடிகா-புஸ்தக-கராம்
ஸக்ருந் நத்வா த்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷா -மதுரிம-துரீணா: பணிதய:
தேவியின் தோற்றம்-துரகவி பாட அருள் பெற (தமிழ்)
உனது சரற்காலமதி அனைய மெய்யும், உடல் குழைத்த பிறைச் சடையுங் கரங்கள் நான்கும் அனவரதம் உறும், அபய, வரத, ஞான அருட் பளிங்கு வடமொடு புத்தகமும் ஆக நினைகிலர், முன்வழுத்திலர் பின் வணங்கார் எங்ஙன் நிறைத்த பசும் தேனும், அடுபாலும், தூய கனியுமென, மதுரம் விளைந்து ஒழுகு பாடல் கவிதை பொழிவது கயிலைக் கடவுள் வாழ்வே!
பொருள்: அம்பிகையே! சரத்கால நிலவைப் போன்ற நிர்மலமான வடிவுடையவளும், சந்திரனுடன் சடைமுடியும் கிரீடமும் உடையவளும், வரத அபய முத்திரை, ஸ்படிக  மாலை, புத்தகம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியுள்ளவளுமான உன்னை ஒருமுறை வணங்கும் பக்தர்களுக்கு தேன், பால், திராட்சை ஆகியவை கலந்தாற் போன்ற  இனிய சொற்கள் ஏன் என் வசமாகி வந்து சேராது
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து ஜலத்தில் ஒரு வட்டம் வரைந்து, அதன் நடுவே 6 முறை ஸம் என்னும் பீஜாக்ஷரத்தையும் எழுதி, மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்தால் நல்ல கவிதைகள் இயற்றும் வல்லமையும், பரீட்சையில் வெற்றியும் ஏற்படும்  (ஜப முடிவில் ஜலத்தை  அருந்தவும்)
16. கல்வி, ஞானம் பெற.வேத சாஸ்ர அறிவு வளர, ஊமைதனம் நீங்கி வாக்கு ஸித்தி பெற - பீஜம் ஓம் வம் வம் வம்
கவீந்த்ராணாம் சேத: கமலவந பாலாதப-ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா-மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஸ்ருங்காரலஹரீ                                   கபீராபிர்-வாக்பிர்-விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ
தேவியின் தோற்றம்-இன்பச்சுவை பெறுங்கவிதை பாட அருள் பெற வாரின்ப முலை மலை மடந்தை கவி நாவலர் மனக்கமல வனம் அலர நீள்
தேர் இன்ப இளவெயில் தழைக்கும் ப்ரபை செய்ய செவ்வி நிறம் உணரும் உரவோர் தார் இன்ப நறவு ஒழுகு சுருள் ஓதி இருள் விரவு தவள நிற வாணி கலைதேர் பேர் இன்ப மதுரவலை எறி அமுத கவிதை கொடு பேர் உலகை மகிழ்விப்பரே.
பொருள்: அம்பிகையே! கவிஞர்களின் உள்ளம் என்னும் தாமரை வனத்திற்கு சிவந்த கிரணங்களைப் பெய்யும் உதயசூரியனைப் போல் பிரகாசிப்பவளும், அதன்  காரணமாக அருணா எனப் பெயர் பூண்டவளுமாகிய உன்னைப் பணிந்து தொழும் சான்றோர்க்கு பிரம்மாவின் புத்திரியும், வாக்குக்குத் தெய்வமுமான சரஸ்வதி  தேவியின் அருளுடன் சிருங்கார ரசத்தின் வெள்ளத்தைப் போன்ற கம்பீரமான வாக்குவன்மை உண்டாகி சாதுக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறார்கள்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் வேத வேதாங்க சாஸ்திர ஞானம் ஏற்பட்டு  சபைகளில் முதன்மையாக விளங்குவார்கள். பேய், பிசாசு பிடித்தவர்களுக்காக ஜபித்தால் அவை அகன்று ஓடி விடும்
17. ஸகல கலைகளிலும் வல்லமையுண்டாக
சாஸ்த்ர ஞானம்  பெற - பீஜம் ஓம் ஐம் ஐம் ஐம்
ஸவித்ரீபிர்-வாசாம் ஸஸிமணி-ஸிலா-பங்க-ருசிபிர்-
வஸிந்யா த்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜநநி ஸஞ்சிந்தயதி :
கர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர்
வசோபிர்-வாக்தேவீ-வதந-கமலாமோத-மதுரை:
தேவியின் தோற்றம் - காவியம் புனைய (தமிழ்)
இந்து சிலையைப் பிளந்து உள்நிறம் வகுத்து அனைய எழில் வசினி ஆதி மடவார் அந்த இணை நால்வர் புடைசூழ மலைமங்கை தனது அருண வடிவு உணர அறிவோர் கொந்து அவிழ விரி தவள மலர் மங்கை முககமல கோல பரிமள கவிதையால் செந்தமிழின், வடகலையின், முதுமொழிக்காவியத் தெளி பாடல் செய்யும் அவரே.
பொருள்: தாயே! நீ வசினி முதலிய எண்வகைச் சக்திகளுடன் கூடியிருப்பவள். அந்த சக்தி தேவியர் சந்திர காந்தக் கல்லைப் பிளந்தது போல் வெண்மைநிறப் பொலிவை  பெற்றவர்கள். இத்தகைய வாக் தேவதைகளுடன் கூடிய உன்னைச் சிந்தித்துத் தொழுபவர் யாராக இருப்பினும், அவர் சரசுவதி தேவியின் தாமரை மலர் போன்ற முகத்தின்  நறுமணம் மிக்கதும், பெருங் கவிஞர்களின் காவியப் படைப்புகளைப் போன்றதுமான சொற்சுவை நிரம்பிய காவியங்களைப் படைக்கும் வல்லமை பெற்றவர் ஆவார்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் சகல கலைகளிலும் வல்லமையும்வாக்குச்சாதுர்யமும், சபைகளில் பெருமதிப்பும் உண்டாகும்
18. ஸர்வ ஜன ஸ்த்ரீ வசியம், எழுத்து கலை வளர
பீஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம் நமஹ
தநுச்சாயாபிஸ்-தே தருண-தரணி-ஸ்ரீ ஸரணிபிர்-
திவம் ஸர்வா-முர்வீ-மருணிம-நிமக்நாம் ஸ்மரதி :
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வந ஹரிண-ஸாலீந-நயநா:
ஸஹோர்வஸ்யா வஸ்யா: கதிகதி கீர்வாண-கணிகா:
தேவியின் தோற்றம் - மகளிர் வசியம் வேண்டுதல் (தமிழ்)
உனது நிறம் எனும் இளைய கதிர் இரவி வெயில் முழுகும் உலகு அடைய என நினைகுவோர்வினை கெழுமு கொலை மறலி அனைய வழி உருவசிமுன் விரவும் அரமகளிர் விழைவோர்அனவரதம் எனதமுது பொழி கவியும் உனது அருளும் எனது உடலும் உயிரும் உயிர்சூழ் மனமும் அதில் உணர்வும் வருகளியும் என நினவுருக மலை அரையன் உதவும் மயிலே!
பொருள்: அம்பிகையே! இளஞ்சூரியனின் அழகினைப் போன்ற உன் உயிர் ஒளியால் பரவும் கிரணங்களால் தேவருலகத்தையும், பூவுலகத்தையும் இளஞ்சிவப்பு  வண்ணத்தில் மூழ்கியிருப்பதாய் எண்ணி யார் உன்னைத் தியானம் செய்கிறானோ அவனுக்கு, மருண்ட விழிகளுடன் மிரண்டோடும் மானின் விழிகளைப் பெற்ற ஊர்வசி  உள்ளிட்ட தேவமாதர் பலரும் வசமாவர்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் விரும்பிய பெண் வசியமாவாள். சித்திரக்  கலைஞன் ஜபிக்க, வல்லவனெனப் புகழ் பெறுவான், செல்வாக்கு உண்டாகும் என்பது நம்பிக்கை.
19. மூவுலகையும் வெல்லும் ஆற்றல். ஸகல ஜனவச்யம் அடைய பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம்
முகம் பிந்தும் க்ருத்வவா குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மந்மதகலாம்
ஸத்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து- ஸ்தநயுகாம்
தேவியின் தோற்றம் - மகளிரை மோகிப்பிக்க வேண்டிய அருள் பெற ஆதி விந்துவை முகம் என இணை முலை கீழ் இரண்டு அதன் வடிவு என, அருகு தாழ் கோதறும் சுடர் எழ அழகு ஒழுகுத்ரி கோணம் ஒன்று என உனது எழில் இரதிதோய் காதலன் கலை தமது இடம் நினைப்பவர் காணும் மங்கையர் கலைகொளல் அரியதோ ஒதில், இங்கு இரு சுடர் முலை அணைய உலோக மங்கையை மயல் செய்வர் கமலையே!
பொருள்: பரமசிவ பத்தினியே! பிந்துவை உன் முகமாக தியானம் செய்து கொண்டு அதன் கீழே இரு தனங்களையும், அதன் கீழே சிவனின் பாதி வடிவான உன் அருள்  சக்தி சொரூபத்தையும் கண்டு உன் க்லீம் என்ற பீஜ மந்திரத்தை எவன் அந்த அங்கங்களில் தியானம் செய்கிறானோ, அவன் உடனே காம சக்திகளை வசமாக்கிக்  கொள்ளுதல் எளிதாகும். சூரிய சந்திரர்களையே தனங்களாகக் கொண்ட மூவுலகின் வடிவான மடந்தையையும் மயக்கி விடுவான். இவ்வாறு தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே மாறி காம எண்ணங்களை வெல்வான்.
ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தர்மமுறையில் விரும்பிய பெண் வசமாவாள்பேய் அகலும். மிருகங்கள் பணியும். அரசாங்கத்தில் செல்வாக்கு ஏற்படும்
20. விஷ பயம் நீங்க, பாம்பு ஜந்துக்கள் வசியமாக த்ருஷ்டி முதலான பொறாமைத்தனம் இல்லாமல் இருக்க - பீஜம் ஓம் க்ஷிப ஸ்வாஹா
 கிரந்தீ-மங்கேப்ப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
 ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர-ஸிலா-மூர்த்திமிவ :
  ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி ஸகுந்தாதிப இவ
 ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா
தேவியின் தோற்றம்-விஷமும், சுரமும் தீர்த்து அருள் பெற (தமிழ்)
ஆடல் அம்பிகை, இமகர சிலை வடிவு ஆளும் நெஞ்சினுள் வழிவுறு கிரணம் மேல் ஓடி, எங்கணும் உடல் பெருகு அமிழ்தென ஊடெழும் ப்ரபை தமது இடம் உணர்குவோர் நாடவும் கொடும் விடம் ஒரு கலுழனை நாடும் வெங்கொலை அரவெனமுறியும் மேல் மூடு அருஞ்சிரம் விழிபொழி அமுதினின் மூழ்க என்பொடு அழல் உடல் குளிருகே.
பொருள்: தாயே! உன் திருமேனியிலிருந்து கிரண வடிவில் அமிருத ரஸம் வெளிப்படுகிறது. இத்தகைய உன் திருக்கோலத்தை எவன் உள்ளத்தில் நிலைநிறுத்தி தியானம்  செய்கிறானோ அவன், பறவைகளின் அரசனான கருடனைப் போல், பாம்புகளின் கர்வத்தை அடக்குவான். அமிர்த நாடியோடு கூடியுள்ள தன் பார்வையாலேயே  ஜுரத்தால் வருந்துபவர்களைக் குணப்படுத்துவான். இம்மந்திரப் பாடல் சகலவிதமான விஷங்களையும் போக்குவதால் இதைப் பதினாறு முறைக்குக் குறையாமல்  சொல்லி தீர்த்தத்தையோ, விபூதியையோ அளித்து நோயை நீக்கலாம்.
ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தீராதென முடிவுசெய்த விஷ சுரம் நீங்கும். பூ ரான், செய்யான் முதலிய விஷ ஜந்துக்கள் தீண்டியதால் ஏற்பட்ட வியாதிகள் மற்றும் திருஷ்டி தோஷத்தால் ஏற்படும் தீங்குகளும் நீங்கும்
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது. இது 11 முதல் 20 வரை உள்ளது.  இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V. மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள் கருத்துக்களை எழுதவும்.        
E-mail : manisharmajothidam@gmail.com என்ற முகவரியில்

No comments:

Post a Comment