Friday 16 August 2013

ஆதிசங்கரர் அருளிய சௌந்தரிய லஹரி 01 To10,



சௌந்தரிய லஹரி
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது
1. எல்லா நன்மைகளும் பெற
பீஜம் க்லீம்.                                                              
ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்
சேதேவம் தேவோ கலு குஸல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி
இன்ப அலைப்பெருக்கு (தமிழ்) சிவன் எனும் பொருளும் ஆதி சக்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம்; இவள் பிரிந்திடின் இயங்குதற்கு அரிதரிது என மறை இரைக்குமால் நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில், நடத்தி யாவரும் வழுத்து தாள், அவனியின் கண், ஒரு தவம் இலார், பணியல் ஆவதோ பரவல் ஆவதோ
பொருள்: அன்னையே! பராசக்தியான உன்னுடன் பரமசிவன் சேர்ந்திருந்தால்தான் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் (ஆக்கல், காத்தல்,அழித்தல்) என்னும்  முத்தொழில்களையும் செய்ய முடியும். அவ்வாறில்லையேல் அவரால் அசையவும் இயலாது. எனவே ஹரி, ஹரன், பிரம்மன் ஆகியோர் அனைவரும் போற்றித் துதிக்கும்  பெருமை பெற்றவளான உன்னைத் துதிக்க முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவனால் எப்படி முடியும்?


ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 1000 தரம் தொடர்ந்து ஜபித்தால், தடைகளெல்லாம் நீங்கி, எடுத்த காரியம்  அனைத்தும் நிறைவேறும். எல்லா நன்மைகளையும் பெறலாம்.
2. ஜடப்பொருள்களால் தடை நீங்க ஸர்வ லோக வச்யம்
ஸகல கதரிய ஸித்தி - பீஜம் ஹ்ரீம்
தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா-நவிகலம்
வஹத்யேநம் ஸெளரி: கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம்                                            ஹர: ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந-விதிம்
பாத துளியின் சிறப்பு (தமிழ்) பாத தாமரையின், நுண்துகள், பரம அணுவினில், பல இயற்றினால், வேத நான்முகன் விதிக்க, வேறுபடு விரிதலைப் புவனம் அடைய; மால், மூது அரா வடிவு எடுத்து, அனந்தமுது கணபணாடவி பரிப்ப; மேல் நாதனார், பொடிபடுத்து, நீறணியின் நாம் உரைத்தது என்? அவள் பாண்மையே!
பொருள்: தாயே! தாமரை மலர்களைப் போன்று சிவந்த உன் திருவடிகளிலிருந்து எழுந்த மிக நுண்ணிய தூளியை சேர்த்து வைத்துக் கொண்டு பதினான்கு உலக ங்களையும் பிரம்மா விசாலமாகப் படைக்கிறார். அதுபோன்றே, மகாவிஷ்ணுவும் ஆதிசேஷன் என்னும் உருவில் பதினான்கு உலகங்களையும் மிகுந்த சிரமத்துடனாவது  தாங்குகிறார். பரமசிவனோ, இதை நன்றாகப் பொடி செய்து கொண்டு, விபூதி பூசுவதைப் போன்று உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்.
ஜபமுறையும் பலனும்
55 நாட்கள் தினமும் காலையில், வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் ஞானம், செல்வம், புத்ர ஸந்ததி, பதவி, புகழ் முத லிய ஸகல நன்மைகளும் உண்டாகும். ஜடப்பொருள்களால் ஏற்படும் தடைகள் நீங்கும்
3. வேதம் சாஸ்த்ரம், ஸகல வித்யைகளும் கைகூட
பீஜம் ஸ்ரீம்
அவித்யாநா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ
ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜந்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி
பாத துளி - அறிவின்மையை போக்கவல்லது (தமிழ்) அறிவு இலர்க்கு, இதய திமிரம் ஈரும் அளவு அற்ற ஆதவர், அளப்பு இலா எறி கதிர் ப்ரபை, குழைத்து இழைத்தனைய தீவி, யாமளை நினைப்பு இலார். செறி மதிக்கு, இணரின் ஒழுகு தேன் அருவி தெறு கலிக்கு அருள் மணிக்குழாம் பிறவி மைக்கடல் விழாது எடுப்பது ஓர் பெரு வராக வெண் மருப்பு அரோ.
பொருள்: அம்பிகையே! உன் திருவடித் துகள் அஞ்ஞானிகளின்
உள்ளத்தில் உள்ள இருளைப் போக்கும் கதிரவனின் உதயத் தீவைப் போலும், விவேகமற்ற மூடர்களுக்கு  ஞானம் என்னும் கற்பக விருட்சத்திலிருக்கும் பூங்கொத்தின் மகரந்தத்தைப் போலும், ஏழையருக்கு நினைத்ததைத் தரக்கூடிய சிந்தாமணியைப் போலும், பிறவிக்கடலில்  மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு, வராகமாய்த் தோன்றிப் பூமியைத் தாங்கிய விஷ்ணுவின் கோரைப் பல்லைப் போன்றும் விளங்குகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், வடகிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால் வேதங்களிலும், சகல கலைகளிலும்  வல்லமை உண்டாகும். செல்வம் உண்டாகும்.
4. வியாதிகள் நீங்க, ராஜபோகத்தில் இருக்க - பீஜம் தும்
த்வதந்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி வாஞ்ச்சா ஸமதிகம்
ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ
பாத கமலங்கள்-யாவையும் அளிக்கும் (தமிழ்) தேவெனப் புகழ, அதில் நிமிர்ந்து நிகர் செப்புவார் அபய வரதமாம் பாவகத்து, அபினயத் தொடு உற்ற, கை பரப்பி, என் பயம் ஒறுக்குமே யாவருக்கும் அஃது அரிது, நின்பதம் இரப்ப, யாவையும் அளிக்குமால், மூவருக்கும் ஒரு தாவரப் பொருள் என, மூலமே தழையும் ஞாலமே!
பொருள்: அம்பிகையே! உன்னைத் தவிர, மற்ற தேவர்களெல்லாம் அபயம், வரதம் என்னும் ஹஸ்த முத்திரைகளைக் காட்டுகிறார்கள். நீ ஒருவள் தான் அந்த அபிநய ங்களைச் செய்வதில்லை. ஏனென்றால், உன்னுடைய திருவடிகளே பயத்திலிருந்து காக்கின்றன. அவைகளே, அவரவர் விரும்பியதற்கு அதிகமாகவே வரம் அளித்து  விடுகின்றன.
ஜபமுறையும் பலனும்
36 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 3000 தடவை ஜபித்து வந்தால் எல்லா விதமான நோய்களும், மற்ற பய ங்களும் நீங்கும். பட்டம், பதவிகள் கிடைக்கும்.
5. பகை நீங்கி நட்பு வளர, ஜர்வஜன வச்யம் - பீஜம் டம்
ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜந-ஸெளபாக்ய-ஜநநீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபிஷோப-மநயத்
ஸ்மரோசபி த்வாம் நத்வா ரதி-நயந-லேஹ்யேந வபுஷா
முநீநா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்
தேவியின் அருளினின்றி ஒருவருக்கும் வலி இல்லை (தமிழ்)
தொடுகரச் சிலை தொடப் பொறா மலர் கருப்பு நாண், இடுவது ஐந்து கோல்
அடுபடைத் தலைவனார் வசந்தம், அலை தென்றல் தேர், உருவம் அருவம் ஆம் உடுகு ஒற்ற மதன், ஒருவன் இப்புவனம் முற்றும் வெற்றிகொள், முடிவு இலா நெடுமலர்க் கண்அருள், சிறிது அளித்தனை கொல் நீலியே! கர கபாலியே.
பொருள்: சகல சௌபாக்கியங்களையும் வணங்குவோருக்கு அருளும் தேவி! உன்னை முன்னொரு சமயத்தில் பூஜை செய்து தான், விஷ்ணு பெண் உருவம் கொண்டு, மு ப்புரங்களை எரித்த சிவனையும் மோகமுறச் செய்தார். மன்மதனும் உன்னை வணங்கித்தான், ரதி தேவியே கண்டு மயங்கும் அளவிலான எழில் பொங்கும் வடிவத்தைப்  பெற்று, மகான்களையும், முனிவர்களையும் தனிமையில் மதிமயக்கம் கொள்ள வைக்கும் அளவில் சக்தியைப் பெறுகிறான் என்பது உறுதி.
ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால் ஆண், பெண்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து  வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும்
6. கணவன் மனைவி பிரச்சனை தீர. ஸந்தான பாக்கியம் 
பீஜம் க்லீம் க்லீம் க்லீம் ஸாத்யம் ஸ்ரீம் க்லீம் க்லீம் க்லீம்
தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஸிகா;
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதந-ரத;
ததாப்யேக; ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மநங்கோ விஜயதே
பூசித்தவர், அடையப்படாத வரமெல்லாம் அடையலாம் (தமிழ்)                        மாயன் வணங்கி உன்மால் வடிவம் கொள வாடும் அரன் துயர் போதாதோ
தூய மதன் தொழ ஆண் வடிவம் புணர் தோகை கண் வண்டு அயில் தேனே போல் மேய வழங்கும் உரூபது என் சொல மேலிது கண்டவர் வாழ்வாரோ
நீ அதி ரஞ்சகி மோகன வஞ்சகி நீ செய்வது ஒன்றல மாதாவே
பொருள்: பனிமலையான கயிலையங்கிரியை ஆள்பவனின் மகளே! மன்மதனின் வில், மலர்களாலானது. நாண் தேனீக்களால் ஆனது. ஐந்து பாணங்களும், மலர்கள்மந்திரி வஸந்தருது, நீ போர் செய்யப் பூட்டிவரும் தேர், தென்றல் காற்று. அப்படியிருந்தும் உடலில்லாத மன்மதன் தனியாகவே, உன் கடைக்கண் பார்வையால் உன் பூ ரணமான
கிருபையைப் பெற்று உலகனைத்தையும் வெற்றி பெறுகிறான்.
ஜபமுறையும் பலனும்
21 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 500 தடவை ஜபித்து வந்தால், தம்பதிகளிடையே ஒற்றுமை  உண்டாகும். ஆண்மையற்றவனுக்கும் ஆண்மையுண்டாகி, புத்திர சந்ததியும் ஏற்படும்.
7. எதிரிகளை வெற்றி கொள்ள,
பீஜம் ஓம் ஐம் க்லீம்
க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தந-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதநா
தநுர்-பாணாந் பாஸம் ஸ்ருணி-மபி ததாநா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் : புரமதிது-ராஹோ-புருஷிகா
தேவியின் தோற்றம் - பகை களைய (தமிழ்) மேகலை பொங்க மதாசல கும்பமெ னாமுலை கண்டு இடை சோரா, நீர் மாகம் வளம் கெழு நாள் நிறை அம்புலி வாள்முகம் அம்புவில் ஏடார் போது ஏக நெடுங்கழை, பாச மொடு அங்குசம் ஏற் பெற வந்து அருள், காபாலி! நீ கமலம் திகழ் தாள் வருடு என்று அரன் நீர்மையின் விஞ்சிய கோமாதே!
பொருள்: அம்பிகை, சலங்கைகள் ஒலிக்கும் தங்க ஒட்டியாணத்தை அணிந்தவள்; யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் கொண்டு சற்று வணங்கிய  வடிவுடையவள்; மெலிந்த இடையையுடையவள்; சரத் காலத்தில் தோன்றும் பூர்ணசந்திரன் போன்ற முகம் படைத்தவள். கைகளில் கரும்பு வில், மலர் பாணம்,
பாசம்அங்குசம் ஆகியவற்றை ஏந்தியிருப்பவள். முப்புரங்களையும் எரித்த ஆச்சர்யமான சிவனுடைய அகம்பாவ வடிவினளுமாவாள். இத்தகைய பராசக்தி எங்களுக்கு முன் னே எழுந்தருளிக் காட்சியளிக்கட்டும்.
ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபம் செய்தால் அரசாங்க காரியங்கள் அனைத்தும் நிறை வேறும். பகைவரை வெல்லலாம்.
8. ஸம்ஸார பந்தம் நீங்க.காராக்ரஹ தோஷ நிவ்ருத்த - பீஜம் ஓம் ரம் ரீம் ரூம்
ஸுதா-ஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவநவதி சிந்தாமணி க்ருஹே
ஸிவாகாரே மஞ்சே பரமஸிவ-பர்யங்க-நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த-லஹரீம்
தேவி யோக நித்திரை கொள்ளும் கோலம் (தமிழ்) ஆர் அமுது இன்கடல் வேலி செழும் தருவாய் மணி பம்பிய தீவு ஊடே பார கடம்பு அடர் கானில் அருங்கொடை பாய்மணி மண்டப வீடு ஊடே கோர சிவன் பரமேசன் உன் மஞ்சம், ஓர் கூர் பரி அங்கம் எனா மேலே சீர் அடரும் பரஞானம் உறும் களி தேவர் அருந்துவர் பூமாதே!
பொருள்: அமுதக் கடலின் மத்தியில் கற்பக விருட்சங்கள் அடர்ந்த தோப்புகள் நிறைந்த ரத்தினத் தீவில் கதம்ப மரங்கள் நிறைந்த வனத்தினிடையே அமைந்துள்ள சிந் தாமணிகள் நிறைந்த அழகிய மாளிகையில், மங்கள வடிவமுள்ள சிம்மாசனத்தின் மீது பரமசிவனின் மடியில் அமர்ந்துள்ள ஞானானந்தக் கடலின் அலை போன்ற  உன்னை, புண்ணியவான்களான சிலரே வழிபட்டு வருகிறார்கள்.
ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் சம்ஸார பந்தங்கள் நீங்கும்சிறைவாச பயம் நீங்கும்; எண்ணியவை நிறைவேறும்.
9. வியாதிகள் நீங்கி உடல் நலம் பெற, பிரிந்தவர்கள் ஒன்று
சேர, பிரிந்து வேறு தேநம் சென்றவர்கள் திரும்பிவர.
பீஜம் ஓம் யம் இம் யம் ஊம் யம் ஸாத்யம் ஆம் க்லீம்
மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டாநே ஹ்ருதி மருத-மாகாஸ-முபரி
மநோசபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே
ஆனந்தமுறும் பொருளை அறிய (தமிழ்) மூல மண்பூரகத்தோடு இலிங்க மார்பு முதுகளம் வில்புருவ நடு மொழிவது ஆறு ஞாலமும் மென்புனலும் அனல் பிழம்பும் காலும் நாதமுறு பெருவெளியும் மனமும் ஆக மேல் அணுகிக் குளபதத்தைப் பின்னிட்டு அப்பால் மென்கமலத்து ஆயிரம்தோட்டு அருணபீடத்து ஆலவிடம் பருகிய தன் மகிழ் நரோடும் ஆநந்தமுறும் பொருளை அறியலாமே.
பொருள்: அம்பிகையே! மூலாதாரத்தில் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்தில் நீர் தத்துவத்தையும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னி தத்துவத்தையும், இருதயம் என்னும்  அனாஹதத்தில் வாயு தத்துவத்தையும், புருவங்களிடையே ஆக்ஞாவில் உள்ள மனஸ் தத்துவத்தையும், இவ்வாறாக ஸுஷும்னா மார்க்கத்திலுள்ள எல்லாச் சக்கர ங்களையும் ஊடுருவிப் பிளந்து சென்று மேலே ஸஹஸ்ராரமாம் ஆயிரம் இதழ்களைக் கொண்ட ரகசியமான இடத்தில் உன் கணவனான பரமசிவனுடன் நீ களிப்புற்றிரு க்கிறாய்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்தால், விட்டுப்பிரிந்த பந்துக்கள் வந்து சேருவர். அவர்கள் சென்ற திக்கை நோக்கி  ஜபம் செய்ய வேண்டும். பஞ்ச பூதங்களும் சுவாதீனமாகும்.
10. தியானம் வெற்றி பெற. வீர்ய விருத்தி, தேஜஸ் நல்ல முறையில் அடைய - பீஜம் ஓம் ஐம் க்லீம் ஹ்ம் க்லீம்
ஸுதாதாராஸாரைஸ்-சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹாஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி
துஞ்சும் சக்தியைக் காண்பது காட்சி (தமிழ்)
தாள் இணைக் கமலம் ஊறித்தரும் அமிழ்து உடலம் மூழ்க
மீள அப்பதங்கள் யாவும் விட்டு முற் பழைய மூலம்
வாள் அரவு என்ன, ஆகம் வளைத்து, உயர் பணத்தினோடு
நாளும் மைக்கயல் கண் துஞ்சும் ஞான ஆனந்த மின்னே.
பொருள்: தேவியே, உன் திருவடிகளிடையே பெருகும் அமிர்த தாரையின் வெள்ளத்தால் (பாய்ச்சலால்) ஐம்பூதங்களான உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை  நனைக்கிறாய். பிறகு அமிர்த கிரணங்களைப் பொழியும் சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான மூலாதாரத்தை அடைந்து, பாம்பைப் போல வட்ட வடிவாக உன்  உடலைச் சுருக்கிக் கொண்டு தாமரைக் கிழங்கு போன்ற பகுதியில் சிறு துவாரமுள்ள மூலாதார குண்டத்தில் யோக நித்திரை புரிகிறாய்.
ஜபமுறையும் பலனும்
6 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் சரீர சுத்தியுண்டாகும். ஆண்மையற்றவருக்கு  ஆண்மையும், மாதவிடாய் சரியாக இல்லாதவர்களுக்குச் சரியாதலும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைத்தலும் ஏற்படும்.
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது. இது 01 முதல் 10 வரை உள்ளது.  இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V. மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள் கருத்துக்களை எழுதவும்.        
E-mail : manisharmajothidam@gmail.com என்ற முகவரியில்

No comments:

Post a Comment