Friday 12 July 2013

14. சித்திரை நட்சத்திரம் பொதுவான பலன்கள்



14. சித்திரை நட்சத்திரம் பொதுவான பலன்கள்
சித்திரை  பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும்  பே, போ, , ரி  PAY, PO, RAA, REE
14.சித்திரை
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பல்வேறான வண்ணங்களிலான துணிகளிலும் உடைகளிலும், உங்களுக்குக் கொள்ளை ஆசை இருக்கும். மலர்களை, நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். போர், உத்திகள் பற்றிய பல விஷயங்கள், உங்களுக்குத் தெரிந்திருக்கும். படிப்பும், அறிவும், பணமும் படைத்தவரான நீங்கள், சத்திய வாதியாக விளங்குவீர்கள். உங்கள் மனைவியும் குழந்தைகளும், உங்களுக்கு மன மகிழ்ச்சி தருவார்கள். நல்ல வசதியான வாழ்க்கை நடத்தப்போகும் நீங்கள் கடின உழைப்பாளியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், பொருள் ஆர்வம் கொண்டவராகவும் விளங்குவீர்கள். கட்டிடங்கள் கட்டுவது, வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றில், உங்களுக்கு நல்ல அறிவாற்றல் இருக்கும். நீங்கள் சமயப்பற்றும், தெய்வ பக்தியும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பணம் சம்பாதித்தாலும் பணம் சேர்த்து வைத்திட முடியாது. நீங்கள் பொதுவாக, பருமனாக இருப்பீர்கள். 30 லிருந்து 35 வயது வரையான காலத்தில் உங்களுக்கு நல்ல அதிருஷ்டங்கள் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திர காயத்ரி
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்


சித்திரை நட்சத்திரம் அதிபதி
செவ்வாய் பகவான் காயத்ரி
அங்காரகன்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்


No comments:

Post a Comment