Sunday 3 November 2019

கோபாஷ்டமி மஹிமை



*ராதேக்ருஷ்ணா !*
*கோபாஷ்டமி !*
4.11.19, திங்கட்கிழமை...

*கோபாஷ்டமி மஹிமை !*

1⃣ க்ருஷ்ண பலராமர்கள் 5வயது முடிந்தபிறகு, இன்றைய தினத்தில்தான் மாடுகள் மேய்க்க நந்தகோபர் அனுமதித்தார். அதற்கு முன் தினம் வரை கண்ணனும் பலராமனும் கன்றுகளையே மேய்த்தார்கள். அதுவரை அவர்களுக்கு *வத்ஸபாலன்(வத்ஸ என்றால் கன்றுகள் என்றும், பாலன் என்றால் பாலனம் செய்கிறவன் என்றும் அர்த்தம்)*. கோபாஷ்டமி அன்று மாடுகளுக்கு விசேஷ பூஜை செய்து, கண்ணனையும் பலராமனையும் *கோபாலன்* என்று அழைத்து ஆசீர்வதித்தனர். அதனால் கண்ணன் பலராமனை பூஜிப்பதும், கோமாதாக்களை பூஜிப்பதும் விசேஷம்.

2⃣ தீபாவளி மறுதினம் இந்திர பூஜையைக் கெடுத்து க்ருஷ்ணன் *கோவர்த்தன பூஜை* செய்தான். அதனால் வெகுண்ட இந்திரன் பயங்கரமான மழையைக் கொட்டினான். பகவான் க்ருஷ்ணனும் கோவர்த்தன மலையைத் தூக்கி 7நாள் அன்ன ஆகாரமின்றி எல்லோரையும் காத்தான். தீபாவளிக்கு பிறகு வரும் அஷ்டமியன்று (எட்டாம் நாள்) இந்திரன் கர்வம் அடங்கி மழையை நிறுத்தினான். க்ருஷ்ணனும் எல்லோரையும் மலையின் கீழிருந்து வெளியேறச் சொல்லி, மலையை மீண்டும் கீழே வைத்த நாளே *கோபாஷ்டமி*

3⃣ க்ருஷ்ணன் 7நாள் மலையைத் தூக்கிக்கொண்டிருந்த சமயத்தில் யாருக்கும் பசியோ, தாகமோ களைப்போ இல்லை. க்ருஷ்ண தரிசனத்தில் எல்லோரும் மயங்கியிருந்ததால் அத்தனையும் மறந்தார்கள். கண்ணனும் ஒரு வாரம் ஒன்றும் சாப்பிடவில்லை. ஆனால் கோபிகைகளின் மனசு கேட்கவில்லை. ஏனெனில் கண்ணன் ஒரு நாளைக்கு 8தடவை சாப்பிடுவான்.
அதனால் கோபிகைகள் வேகவேகமாக வீட்டிற்குச் சென்று, கண்ணனுக்கு விதவிதமான விருந்து தயார்செய்தார்கள்.

7 நாளுக்கும் சேர்த்து 56விதமாக அன்னங்கள், பக்ஷணங்கள், சுவையான பழச்சாறுகள் என்றெல்லாம் செய்து கண்ணன் வயிராற சாப்பிடுவதைக் கண்டு
ஆனந்தித்தனர். அதனால் பிருந்தாவனம், துவாரகை போன்ற இடங்களில் கோபாஷ்டமி அன்று 56நிவேதனங்கள் உண்டு. நாமும் நம் இல்லங்களில் 56வகையான நிவேதனங்கள் கண்ணனுக்கு கொடுக்கலாம். 56வகை நிவேதனங்களுக்கு *சப்பன்போக்* என்று பெயர். இன்றும் புரி ஜகந்நாதனுக்கு தினமும் சப்பன்போக் நிவேதனம் உண்டு.

4⃣ கர்வமழிந்த இந்திரனும் கண்ணனிடம் மன்னிப்பு கேட்டு, ஆகாச கங்கை ஜலத்தாலும், காமதேனுவின் பாலாலும் கோவிந்த பட்டாபிஷேகம் செய்தான். கண்ணனுக்கு *கோவிந்தன்* என்னும் திருநாமம் கிடைத்த நாள் கோபாஷ்டமி !

அதனால் இந்த புண்ணியமான தினத்தில்,
🐄 *கோமாதா பூஜை செய்யுங்கள் !*🐄
‼ *கோவிந்த நாமம் ஜபியுங்கள்* ‼
🦚 *கண்ணனுக்கு 56விதமாக நிவேதனங்கள் செய்யுங்கள்*🦚m

*ராதேக்ருஷ்ணா !*





*56 நிவேதனங்கள் !*
(சப்பன்போக்)

கோபாஷ்டமிக்கு பகவான் க்ருஷ்ணனுக்கு நிவேதனங்கள் செய்ய
ஒரு வழிமுறை...
உங்களுக்குத் தோன்றியபடியும் நிவேதனம் செய்யலாம் !

(சிலவகை சித்திரான்னம்)
1. நெய்சாதம்
2. பருப்புசாதம்
3. தேங்காய்சாதம்
4. எலுமிச்சை சாதம்
5. புளியோதரை
6. எள்ளுஞ்சாதம்
7. பருப்புப்பொடி சாதம்
8. சாம்பார் சாதம்
9. ரசம் சாதம்
10.  தயிர்சாதம்

(சில பச்சடிகள்)
11. தயிர்பச்சடி
12. வெல்லப்பச்சடி
13. வெள்ளரிக்காய் பச்சடி
14. காரட் பச்சடி
15. தக்காளி பச்சடி

(சிலவகை பொரியல்)
16. கோஸுமல்லி
17. கத்தரிக்காய் பொரியல்
18. வெண்டைக்காய் பொறியல்
19. உருளைக்கிழங்கு
20. கோவைக்காய்
21. சுண்டைக்காய்
22. காராமணி
23. வாழைக்காய்

(சில பழங்கள்)
24. வாழைப்பழம்
25. சீத்தாப்பழம்
26. கொய்யா
27. சப்போட்டா
28. ஆரஞ்சு
29. ஆப்பிள்
30. அன்னாசிப்பழம்

(சில பருப்புகள்)
31. முந்திரி
32. பாதாம்
33. பிஸ்தா
34. வேர்க்கடலை
35. வால்நட்
36. உலர் திராட்சை

(சிலவகை பால்)
37. பாதாம் பால்
38. பிஸ்தா பால்
39. குங்குமப்பூ பால்

(சிலவகை பாயசம்)
40. வெல்லப்பாயசம்
41. தேங்காய் பாயசம்
42. அவல் பாயசம்
43. சேமியா பாயசம்
44. ஜவ்வரிசி பாயசம்

(சில பழச்சாறுகள்)
45. ஆப்பிள் சாறு
46. இளநீர்
47. மாதுளம்
48. சாத்துக்குடி
49. திராட்சை
50. ஆரஞ்சு

51. அப்பளம்
52. வடாம்
53. ஊறுகாய்
54. வடை
55. வெற்றிலை பாக்கு
56. ஏலக்காய்

இவையில்லாமல் உங்கள் ஊரில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், இவையெல்லாம் கூட நிவேதனம் செய்யலாம்...

பலவிதமான இனிப்புகள் செய்தும் நிவேதிக்கலாம்..

எல்லாம் உங்கள் ஆசைப்படி.
அன்போடு பக்தியோடு பக்தர் தருவதை நான் உள்ளன்போடு ஏற்கிறேன் என்று பகவான் க்ருஷ்ணன் கீதையில் சொல்லியிருக்கிறானே...

ஆனந்தமாய் கண்ணனுக்கு 56வகை பிரசாதங்களை நிவேதனம் செய்வோமே...

ராதேக்ருஷ்ணா



No comments:

Post a Comment