Sunday 20 October 2019

நவக்கிரக சன்னதியை வழிபடும் முறை!

*நவக்கிரக சன்னதியை வழிபடும் முறை!*

எங்கிருந்து தொடங்க வேண்டும் :
================
*நடுநாயகமாக வீற்றிருக்கும் சூரியனில் இருந்தே தொடங்க வேண்டும்.*

சிலர் சனியிலிருந்து தொடங்குகிறார்கள்.அது தவறு.
சூரியனே எல்லாவற்றிற்கும் முதல்.

*எந்தப் பக்கம் சுற்ற வேண்டும் :*
================
வலமாக தான் சுற்ற வேண்டும்.
இடமாக சுற்றக் கூடவே கூடாது.
சிலர் அப்படி சுற்றுவதை காணமுடிகிறது.அது தவறு.

*எத்தனை முறை சுற்றுவது :*
================
*நவக்கிரகங்கள் என்பது ஒன்பது கிரகங்கள் என்பதால்*
*ஒன்பது முறை சுற்றுவதே உத்தமம்.*

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சுற்று என்பதே கணக்கு.

எதை நினைத்து சுற்றுவது ? எண்ணிகையை நினைத்தா கிரகங்களை நினைத்தா ?
================
எண்ணிக்கையை நினைத்து சுற்றினால் கிரகங்கள் நினைவில் நிற்காது.
கிரகங்களை நினைத்து சுற்றினால் எண்ணிக்கை தப்பிவிடும்.

இந்த பிரச்சனை எனக்கு சிறுவயதில் இருந்ததால், எனக்கு ஏற்ற வகையில் நானே ஒரு தீர்வைக் கண்டுப்பிடித்து இன்றும் அதை பின்பற்றுகிறேன்.

அது என்னவென்றால்,

*ஒவ்வொரு சுற்றிற்கும் கிரகங்களின் பெயரைப் போற்றிப் பாடுவதே அது.*

*ஓம் சூரியனே போற்றி !*

*ஓம் சந்திரனே போற்றி* 

*ஓம் மங்களனே போற்றி !*

*ஓம் புதனே போற்றி !*

*ஓம் குருவே போற்றி !*
*ஓம் சுக்கிரனே போற்றி !*

*ஓம் சனைச்சரனே போற்றி !*

*ஓம் ராகுவே போற்றி !*

*ஓம் கேதுவே போற்றி !*

இப்படிப் போற்றி நவக்கிரகங்களை சுற்றும்போது எண்ணிக்கையையும் தவறாமல்,
கிரகங்களையும் மறவாமல் நினைவில் நிறுத்தி வணங்கலாம்.

இக்கிரகங்களின் வரிசை முறையை நினைவில் கொள்வது எப்படி :
================
சூரியனில் தொடங்கி சனியில் முடியும் வார நாட்களின் வரிசை முறையோடு ராகுவையும் கேதுவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவே.

*நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் :*
================
நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் தெரிந்தவர்கள்
பின்வரும் மந்திரங்களை சொல்லியும் சுற்றலாம்

*சூரிய காயத்ரி மந்திரம்*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்.

*சந்திர காயத்ரி மந்திரம்*

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்.

*அங்காரக காயத்ரி மந்திரம்*

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம:  ப்ரசோதயாத்

*புத காயத்ரி மந்திரம்*

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

*குரு காயத்ரி மந்திரம்*

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

*சுக்ர காயத்ரி மந்திரம்*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

*சனி காயத்ரி மந்திரம்*

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

*ராகு காயத்ரி மந்திரம்*

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

*கேது காயத்ரி மந்திரம்*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

ஒன்பது முறை சுற்ற முடியவில்லை என்றால் :
===============
சில விசேஷ நாட்களில் அல்லது ஏதோ தவிர்க்க இயலா சமயங்களில்,ஒன்பது முறை சுற்றும் வாய்ப்பும் வசதியும் இல்லாத போது,

*ஓம் நவநாயகர்களே போற்றி ! “ என்று ஒரே ஒரு முறை மட்டும் சுற்றியும் வழிபடலாம் தவறொன்றும் இல்லை.*

எத்தனை முறை சுற்றுகிறோம் என்பதல்ல கணக்கு.
எந்த நினைப்பில் சுற்றுகிறோம் என்பதே தத்துவக் கணக்கு !

ஓம் நவநாயகர்களே போற்றி போற்றி

No comments:

Post a Comment