Saturday 4 May 2019

Akshaya Tritiya 07-05-2019


Trulli

    Akshaya Tritiya 07-05-2019 Tuesday

    neelajothidam

    ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஸ்ரீ வித்யா பீடம் அறக்கட்டளை

    Sri Bala Thirupurasundari Sri Vidhya Peedam Trust.

    நிகழும் விகாரி வருஷம் சித்திரை மாதம் 24-ம், தேதி 07-05-2019 செவ்வாய்கிழமை, சுக்கில பட்சம் (வளர்பிறை) திருதியை திதி, ரோகிணி நட்சத்திரம், அதிகண்டம் நாமயோகம், தைதுல கரணம், அமிர்த மற்றும் சித்த யோகம், கூடிய சுபநன்நாளான இன்று தங்கம் மற்றும் பொன் பொருள் வாங்க உகர்ந்த நாளாக உள்ளது.
    “ அட்சய திரிதியை என்பது செல்வத்திற்கான ஆசிகளை வளர்த்துக் கொள்வதற்கான, முக்கியமான நாளாகும். அட்சய என்றால், குறையாதது என்று பொருள். குறிப்பாக, விண்ணில் நிகழும் சில மிகச் சிறந்த சேர்க்கைகளால், இந்த வருடம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. சந்திரனின் மூன்றாவது திதியான திரிதியையிலிருந்து பெருகும் செல்வத்திற்கான ஆற்றலை, கொண்டாடி வரவேற்றிடுங்கள். இதை நீங்கள் தவற விட்டால், மீண்டும் பெறுவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.”.
    அட்சய திரிதியை என்பது, வருடம் ஒருமுறை வரும், 24 மணி நேர நிகழ்வாகும். என்றும் குறையாமல் பெருகும் செல்வத்திற்கான ஆசிகள் அருளக்கூடிய தெய்வீக சக்திகள் நிறைந்த நேரமாகும். ‘அட்சய’ என்றால், குறையாதது, என்றும் நிறைந்திருப்பது என்றும் பொருள்படும். ‘திரிதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். இந்த நாள் அள்ள அள்ளக் குறையாமல் செல்வங்களை அள்ளித் தரும் அற்புத நாள் ஆகும். இந்த வருடத்தின் அட்சய திரிதியை நாள், ஒரு அபூர்வமான நாளாக காணப்படுகின்றது. உங்கள் வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும் குறையாத செல்வத்திற்கான ஆசிகள் வழங்கும் வகையில், விண்ணுலக மாற்றங்களின் காரணமாக நிகழும், 6 அரிய யோகங்களும் அன்று சேர்ந்து விடுவதால், இந்த வருடத்தில் வரும் இந்த தினம், பெரும் மங்களங்களை அருளும் அரிய நாளாக விளங்குகிறது.
    அட்சய திரிதியை நாளின், செல்வத்திற்கான தெய்வீக நிகழ்வுகள் தொடர்பான புராணங்கள்.
    அட்சய திரிதியை அன்று நடந்த, செல்வத்திற்கான தெய்வீக நிகழ்வுகளை நமது புராணங்கள் விவரிக்கின்றன. நமது பெரும் பாரம்பரியத்தைக் குறிக்கும் இவற்றின் சிறப்பம்சங்களை, டாக்டர் பிள்ளை அவர்கள் விளக்குகிறார்.



    No-01 • சிவபுராணத்தின் படி, இந்த நாளில் தான், சிவபெருமான் குபேரரை, செல்வத்தின் அதிபதியாகவும், சொர்க்கத்தின் கருவூல அதிகாரியாகவும் நியமித்தார்



    No-02 • பகவான் கிருஷ்ணர், தனது சிறு வயது நண்பரான சுதாமா எனப்படும் குசேலருக்கு, பெரும் செல்வம் அருளினார், என்கின்றன புராணங்கள்



    No-03 • குறையாமல் உணவு வழங்கும் அதிசயமான தெய்வீகப் பாத்திரம்- இந்த நாளில் தான், பாண்டவர்களின் பத்தினியான திரௌபதிக்கு, வனவாசத்தின் பொழுது, பகவான் கிருஷ்ணர், ‘அட்சய பாத்திரம்’ எனப்படும் தெய்வீக பாத்திரத்தை வழங்கினார் என்கிறது, மகாபாரதம். தேவைப்படும் பொழுது எல்லாம், தேவைப்படும் அளவில், உணவை அளிக்கக்கூடிய அதிசயமான பாத்திரம் இது



    No-04 • உலகிற்கே உணவளிப்பதற்காக, பார்வதி தேவி, அன்னபூர்ணா தேவியாக அவதாரம் எடுத்தார்



    No-05 • மிகப் புனிதமான கங்கை நதி, இந்த நாளில் தான் பூமியில் அடியெடுத்து வைத்தாள். இதன் மூலம், நம் மண்ணை வளமாக்கி, மனிதகுலத்தின் தாகத்தைத் தணித்தாள்.



    No-06 • அட்சய திரிதியை நாளில் தான், மகரிஷி வேத வியாசர், மகாபாரத இதிகாசத்தை இயற்றத் தொடங்கினார்; பகவான் கணபதி அதை எழுதவும் ஆரம்பித்தார்.



    No-07 • அட்சய திரிதியை நாளின் பிரதோஷ நேரத்தில் தான், பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர், ஜமதக்னி முனிவருக்கும், அவரது மனைவி ரேணுகா தேவிக்கும் மகனாகத் தோன்றினார்.

அட்சய திரிதியை நாளில், செல்வ யோகங்களுக்கான புராண சான்றுகள்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் அதிர்ஷ்டம் தரும் சேர்க்கை, யோகம் எனப்படுகிறது. இது, செல்வம், புகழ், பதவி, அதிர்ஷ்டம் போன்ற பலவற்றையும் அளிக்கக் கூடியது. அட்சய திரிதியை நாளில், 6 சக்தி வாய்ந்த ராயல்டி செல்வ யோகங்கள் காணப்படுகின்றன. ஜாதக பாரிஜாதம், பிருகத் பராசர ஹோரா சாஸ்திரம் போன்ற பண்டைய நூல்கள், இந்த யோகங்களின் முக்கியத்துவத்தையும், அவை கொடுக்கும் ஆசிகளையும் விவரிக்கின்றன.

Bala Jothidam

No comments:

Post a Comment