Saturday 23 February 2019

சிவ ஞானம் உன்னை வெல்லும் வழி!

○சிவ ஞானம்○
உன்னை வெல்லும் வழி!

1. உன்னை அறிய வேண்டின்
    குருவைத்தேடு.

2. பிரம்மம் அறிய வேண்டின்    
    குருவைத்தேடு.

3. பிரம்மம் உணர வேண்டின்
    குருவை சரண் அடை.

4. உலகில் ஈடு இணை அற்றது
    இறை நிலையே.

5. எப்பொருளாலும் வாங்க முடியாதது
    இறை நிலையே.

6. இறைவனை பிடிக்க வேண்டின்
    குருவைப்பிடி. குருவே துணை.

7. குரு மன்னிக்காவிடில்
    சிவம் மன்னிக்காது.

8. குரு மன்னிக்காததை
    சிவம் மன்னிக்காது.

9. அன்பில்லா இடத்தில் சிவத்தை அறிய   
    முடியாது அன்பில்லா இடம் நரகம்.

10. அன்பைக் கொடு
      சிவத்தைப்பெறு.

11. அன்பும் அமைதியுமே
      சிவனின் இருப்பிடம்.

12. விதையில் விருட்சம் உணர்வாயின்
      அன்பில் சிவத்தைக் காண்பாய்.

13. திரிக்கால யோகி சிவத்திற்கு
      உன்னை மட்டுமே கொடு.

14. அன்பில்லா எந்தப்பொருளும்
      சிவத்திடம் செல்லுபடி ஆகாது.

15. சிவத்துக்கு நிகர் சிவமே
      அருளுக்கு நிகர் அருளே.

16. பிரம்மத்தைவிட உயர்ந்த பொருள்
      உலகில் இல்லை.

17. உன்னில் நிறைந்த பொருள் சிவம்.
      அது ஜீவனுடன் கலந்துள்ளது.

18. எதையும் துன்பப்படுத்தாதே
      சிவத்துக்கு வலிக்கும்

19. யாரையும் துன்பப்படுத்தாதே
      நீ துன்பமே இல்லாது வாழ்.

20. நித்தம் பிறரை கணம் செய்
      நீ கணப்படுத்தப்படுவாய்

21. குருப்பார்வையில் நீ விலகினால்
      சனிப்பார்வை கிட்டும்.

22. இறைவனை அடைய
      இறைவன் மட்டுமே உதவ முடியும்

23. இறைவனை அடைய இறைவன்
      நாமம் மட்டுமே உதவும்.

24. ஜபமும் தபமும் ஒன்று சேரலாம்
      பாலும் தேனும் போல.

25. இறை நாமத்தை ரசிப்பவனே
      இறைவனை ருசிக்க முடியும்.

26. இறைவனின் ஓர் நாமத்தையே தேர்வு
      செய் அதில் லயப்பட்டு கரைந்து விடு.

27. ஒரு நல்ல மனிதனுக்கு உற்ற துணை
      இறைவனைத்தவிர யார் இருக்க  
      முடியும்.

28. வாழ்நாள் முழுவதும் இறைவன்
      கரம் பிடித்தே செல்.

29. மன விடுதலை இறைவனால் மட்டும்
      தான் தர முடியும்.

30. எண்ண விடுதலை இறை நாமத்தால்
      மட்டுமே முடியும்.

31. உணர்த்தும் பொருள் இறைவன்
      வெளியிளேயே....

32. உணரும் பொருள் இறைவன்
      உன்னுள்ளேயே...

33. ஆன்ம சொரூபத்தை அடைய
      நீ ஆத்மாவில் தியானி.

34. ஆன்ம தியானத்தில் நீ
      அனைத்துமாய் இருப்பதை  
      உணர்வாய்.

35. ஆன்மா நேசிப்பவனை
      அனைத்து ஜீவனும் நேசிக்கும்.

36. அகண்ட சொரூபம் நம்
      அகத்துள்ளேயே உள்ளது.

37. அதுவாகியது எல்லாம், 
      ஆண்டவனால் ஆனதுவே ஆகும்.

38. சிந்தித்தால் மட்டுமே சிவம்.

39. சிவன் அன்றி ஓர் செயலும்
      இயங்குவது இல்லை.

40. சிவனே என்று இருந்து இயக்குபவன்
      சிவன் ஒருவனே.

41. உன்னை ஜீவனாகப் பார்க்காதே
      சிவனாகப் பார், சிவனாகிப் போக

42. உள்ளம் உருக அழைத்துக்கொண்டே
      இரு. ஒருவனையே தன்னால் வரும்
      சிவம்.

43. இறைவன் ஆனாலும் அன்பாகி
      அழை பண்பாகி வருவான் சிவம்.

44. சித்தத்தை சிவன்பால் வை
      சிவனாகிப் போக.

45. இறைவனைக்கட்ட யாராலும்
      முடியாது.

46. சிவம் நெருப்பு. நெருப்பை யாராலும்
      கட்டவோ கட்டிப்போடவோ முடியாது.

47. இறைவனானாலும் ஓர் சொல்லுக்கு
      கட்டுண்டு நிற்க்கும்.

48. அன்பை பண்பால் கட்டு சிவம்
      அமைதியாய் கட்டுண்டு நிற்க்கும்.

49. குணம் மாறாமல் சிவம் கிட்டாது.

50. குணம் மாறிவிட்டால் ஜீவன்
      சிவனாகத்தெரியும்.

51. மாயையின் உபதேசத்துக்கு
      மயங்காதே.

52. மந்திரத்திலும் மாயை உண்டு
      மெய்யானவற்றிக்கு செல்லாது.

53. ஒன்றை அறிந்து உறவாடு
      ஓசை உரசிப் போகும் உன்னுள்.

54. சிவனை அறிந்தபின் நாம்
      எவரையும் அறிய வேண்டுவதில்லை.

55. சிவனை அறிந்தபின் மனம்
      எவரையும் தொழுதிலார்.

56. சுத்த சிவம் எழுவது குருவுக்குள்
       மட்டுமே.

57. மாயை விலக சிவம் தெரியும்
      அது குருவால் மட்டுமே...

குருவின் இருப்பு வெளியில் இல்லை

உம்முள் தேடு குருவை...
குருவடி திருவடி சரணம் சரணம்..!

No comments:

Post a Comment