Tuesday 2 August 2016

குருப் பெயர்ச்சிப் பலன்கள். 2016-2017



குருப் பெயர்ச்சிப் பலன்கள். 2016-2017
11.08.2016 முதல் 10.09.2017 வரை
முன்னுரை

வழக்கம் போல இந்த வருடமும் குருப் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. அதன் அடிப்படையில் துன்முகி வருஷம், ஆடி மாதம் 27 அன்று அதாவது (11.08.2016) வியாழக்கிழமை சரியாக இரவு 9. 28 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்துக்கு அதாவது கன்னி ராசிக்கு குரு பகவான் பிரவேசிக்க உள்ளார். இது திருக்கணிதக் கணக்கு.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படிப் பார்த்தால் 02.08.2016, ஆடி மாதம் 18 ஆம் தேதி, செவ்வாய்க் கிழமை காலை 9.25 க்கு உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதத்துக்கு அதாவது கன்னி ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

சிலருக்கு வாக்கியம், திருக்கணிதம் இவை இரண்டில் எதை எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் வரலாம். தாங்கள் அப்படிக் குழம்ப அவசியம் இல்லை. இந்த இரு பஞ்சாங்கங்களுக்கும் காலப் பிரமாணமாக சிற்சில வித்யாசங்கள் இருந்தாலும் ஏறக் குறைய இவை இரண்டும் கூறும் பலன்கள் ஒன்று தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. "தண்ணீரை" எந்த மொழியில் அழைத்தாலும் அது தண்ணீர் தானே? அதே போலத் தான் வாக்கியமும், திருக்கணிதமும் ஒரே கல்லில் உருவான இரு வேறு சிற்பங்கள்.

எனவே, நான் வழக்கம் போல இந்தக் குருப் பெயர்ச்சிப் பலன்களை திருக்கணித முறையில் தொடுத்து தெளிவுற முன் வைக்கிறேன்.

இந்த குருப் பெயர்ச்சியால் நன்மைகளை பெறப் போகிற ராசிக் காரர்கள் என்று பார்த்தால் அவர்கள் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய இவர்களே. மற்றபடி மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் மத்திம பலனை அடைவார்கள். ஆனால் சென்ற வருடத்தில் இருந்து வந்த போராட்டங்கள் குறையும். அது நிச்சயம்.

ஆனால், அதே சமயத்தில் மேஷம், கடகம், துலாம், கும்பம் ஆகிய இந்த நான்கு ராசிக் காரர்களுக்கும் இந்தக் குருப் பெயர்ச்சி அவ்வளவு சிறப்பாக அமைய வில்லை என்று தான் சொல்ல வேண்டும். உங்களைப் பொறுத்தவரையில் இந்த வருடத்தின் இறுதியில் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள். ஏனெனில் பலதரப்பட்ட அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட விருக்கிறது. நட்பு என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு இருக்கும் துரோகிகளை நீங்கள் அடையாளம் காணப் போகின்றீர்கள். ஏற்படப் போகும் அனுபவங்கள் பலவற்றை இந்த குருப் பெயர்ச்சியில் பொறுமையுடன் சகித்துக் கொண்டால், பிற்காலத்தில் பல நன்மைகளை பெறுவீர்கள் என்பது திண்ணம். ஏனெனில் கல்லைக் காயப்படுத்துவது உளியின் நோக்கம் அல்ல. அதுபோல உங்களைக் காயப்படுத்துவது உங்களது அனுபவத்தின் நோக்கம் அல்ல. இதனை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் போதும்.

மேலும், நான் இதில் சொல்லிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பலருக்கு சொல்லி வெற்றி கண்டவை. அதனைப் பின்பற்றி அனைத்து ராசிக் காரர்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். வாருங்கள் இனி 12 ராசிகளுக்கான குருப் பெயர்ச்சிப் பலன்களைக் காண்போம்.

No comments:

Post a Comment