Thursday 12 May 2016

விசா (visa) பெறுவது எப்படி



விசா (visa)  பெறுவது எப்படி ?

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

விசா பற்றிய மேலோட்ட கருத்து :
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும்.

ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.

விசா வகைகள் :
கடப்பு விசா - ஒரு நாட்டின் வழியாக (கடந்து) மூன்றாம் நாட்டிற்கு செல்கையில் வழங்கப்படுகிறது. பொதுவாக இது மூன்று நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலத்திற்கு செல்லுபடி ஆகுமாறு இருக்கும்.

பயணியர் விசா - குறிப்பிட்ட கால பொழுதுபோக்கு சுற்றுலாவிற்குவழங்கப்படுகிறது. வணிக செயல்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை.

வணிக விசா - அந்நாட்டில் வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கும் விசா.

தற்காலிக பணியாளர் விசா - புகுந்த நாட்டில் வேலைவாய்ப்பிற்கான விசா. இவை பொதுவாக பெறுவதற்கு மிகவும் கடினமானவை.

வருகைபோது விசா - நாட்டில் உள்ளே நுழையும்போது உடனடியாக வழங்கப்படும் விசா. இது வானூர்தி நிலையங்களிலும்எல்லைக் கட்டுப்பாட்டு மையங்களிலும் வழங்கப்படும்.

வாழ்க்கைத்துணை விசா - ஒரு நாட்டில் வசிப்பவர் அல்லது குடிமகனின்வாழ்க்கைத்துணைக்கு (கணவன்-மனைவி) இருவரும் சேர்ந்து வசிப்பதற்காக வழங்கப்படுகிறது.

மாணவர் விசா - ஒரு கல்வி நிறுவனத்தில் படிப்பதற்காக வழங்கப்படும் விசா.

பணியாற்றும் விடுமுறை விசா - நாடுகளிடையே சுற்றுலா மேற்கொள்ளும் அதே நேரத்தில் தற்காலிகப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் விசா.

தூதுவர் விசா (அல்லது அலுவல்முறை விசா)- வழங்கப்பட்டவருக்கு தூதுவருக்கான உரிமைகளை வழங்குகிறது. இது பொதுவாக தூதுவ கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கே வழங்கப்படும்.

இணைய தளம் :
இந்தத் தகவல்களை எல்லாம் http://www.visamapper.com
http://www.visamap.net

என்ற இணைய தளத்திற்கு சென்று எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் விசா வாங்கலாம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தொகுப்பில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :

No comments:

Post a Comment