Monday 2 May 2016

சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - உலகளாவிய தமிழர்களின் சிறப்பு, பெருமை மற்றும் தமிழ்ப்பணி மற்றும் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

1. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழினத்தின் தொன்மையைக் கூறும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை

2. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது - மணிமேகலை

3. இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடக்ககல்வி முதல் பல்கலைக்கழகம் வரை ------------- சதவீதம் தமிழிலேயே கல்வி பயில்கின்றனர் - 95 சதவீதம்

4. தமிழர் தம் நாட்டை விட்டுச் சென்ற போதும் ------------ என்னும் உயர்நோக்கோடு வாழ்ந்து வருகின்றனர் - யாதும் ஊரே யாவரும் கேளிர்

5. தமிழர்கள் எந்த துறைகளில் காலூன்றிச் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர் - தொழில் துறை, கல்வித் துறை, கணினித் துறை

6. ------------ல் தோன்றிய தமிழினம் உலகமெலாம் பரவித் தன்புகழை நிலைநாட்டி வருகிறது - குமரிக்கண்டம்

7. உலகில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்ற நாடுகளில் எத்தனை நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது - ஏறத்தாழ 154 நாடுகள்

8. திரைகடலோடியும் திரவியம் தேடு என்று கூறியவர் - ஒளவையார்

9. தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகளில் போற்றத்தக்கவர்கள் சிலர் - ஹால் சிப்மேன், ஜேம்ஸ் பிராங்கா, மறைந்த பேராசிரியர் ஏ.கே.இராமானுஜம்

10. தமிழர்கள் -------------------------- ஊடகங்களை உலகெங்கும் நடத்தி வருகின்றனர் - அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள்

11. தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் ----------------------------- நாடுகளில் குடியரசுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது - சிங்கப்பூர், மொரிசியசு

12. வாணிகம், வேலைவாய்ப்பு ஆகிய காரணங்களுக்காகத் தமிழர்கள் அயல் நாடுகளுக்குச் செல்வது பற்றிய செய்திகள் எந்த நூலில் காணப்படுகிறது - சங்கஇலக்கிய நூல்கள்

13. பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களை எந்தப் பகுதிகளில் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தினார்கள் - புதுச்சேரி, காரைக்கால்

14. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஆட்சிமொழியாகத் திகழ்வது எது - தமிழ்

15. பல நாடுகளுக்கும் வாழச் சென்ற தமிழர்கள், தம் வருவாயை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் ---------------------------- செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் - தமிழை வளர்க்கும்

16. உலகம் என்னும் தமிழ்ச்சொல் ----------------- என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது - உலவு

17. பல்வேறு எந்திரங்கள் ----------------------------- மூலம் உருவாக்கப்படுகின்றன - பொறியியல்

18. கரும்பைப் பிழிவதற்கு எந்திரங்கள் உருவாக்கப்படுவதை, தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த என்ற பாடல்வரி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது - பதிற்றுப்பத்து

19. நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு, அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதை ----------------- என்னும் பெருங்கதை வரியின் வாயிலாக அறியமுடிகிறது - அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்

20. பல்வகை மணிகளையும் அதன் தன்மைகளையும் விளக்குவது ----------------- ஆகும் - சிலப்பதிகாரம்

No comments:

Post a Comment