Tuesday 17 May 2016

சந்நியாசி



ஒரு சந்நியாசி காலை நேரத்தில் மலை உச்சி
ஒரு சந்நியாசி காலை நேரத்தில் மலை உச்சி மீது நின்று கொண்டிருந் தார், தன்னந்தனியாக, அசையாமல். காலை உலா வந்த மூன்று பேர் அவரைப் பார்த்தார்கள்.ஒருவர் சொன்னார், ''காணாமல் போன பசுவை அவர் தேடிக் கொண்டிருக்கிறார் , ''அடுத்தவர் சொன்னார், 'இல்லை, அவர் நிற்கிற விதத்தைப் பார்த்தால் அவர் எதையும் தேடுவதாகத் தெரியவில்லை. அவர் தன் நண்பர்களின் வரவுக்காகக் காத்திருக்கிறார், 'மூன்றாமவர் சொன்னார், ''நண்பர்களுக்காகக் காத்திருந்தால் அவர் சுற்றிலும் திரும்பிப் பார்க்க வேண்டும்.அவர் அசையவே இல்லை. அவர் தியானம் செய்கிறார்.'' கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,அவரிடமே விவரம் கேட்க,சிரமப்பட்டு மலை உச்சிக்குச் சென்றனர்.

முதலாமவர் கேட்டார்,''காணாமல் போன உங்கள் பசுவைத் தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? '' சந்நியாசி கண்களைத் திறந்தார். ''எனக்கு சொந்தம் என்று எதுவும் இல்லை.அதனால் எதுவும் காணாமல் போகவில்லை.எதையும் நான் தேடவும் இல்லை.''
'
அப்படியானால், நண்பர்களுக்காகத் தானே காத்திருக்கிறீர்கள்?'என்று இரண்டாமவர் கேட்டார்.

''
நான் தனியன்.எனக்கு நண்பர்களும் இல்லை.பகைவர்களும் இல்லை. அப்படியிருக்க நான் யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? ''என்றார் சந்நியாசி. ''அப்படியானால், நான் நினைத்தது தான் சரி.நீங்கள் தியானம் தானே செய்கிறீர்கள்? ''என்று கேட்டார் மூன்றாமவர்.

சந்நியாசி சிரித்தார். ''நீங்கள் மடத்தனமாகப் பேசுகிறீர்கள். எனக்கு சாதிக்க வேண்டியது எதுவுமில்லை.எதற்காக நான் தியானம் செய்ய வேண்டும்? ''என்று கேட்டார்.
 

அப்புறம் மூவரும், ''பிறகு நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டனர்.
''
நான் எதையுமே செய்யவில்லை.நான் சும்மா நின்று கொண்டிருக்கிறேன்.''என்று சொல்லி சிரித்தார் சந்நியாசி.

"
சும்மா இரு" இதை அடுத்தவருக்குச்  சொல்லுவது எளிது!.
ஆனால் அப்படியிருப்பது யாருக்கும் எளிது இல்லையென்பது அனைவரும் அறிந்ததே. மகரிஷியோ தனது குரு வணக்கப் பாடலில்,

"
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற சீரறிய செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும் ஆனந்தம்  பொங்கு தங்கே! இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின் இறுதிப் பயனாகிய சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என் சந்தோஷ செய்தி இதுவே" என்கிறார்.

"
சும்மா" இருந்தால்தான் அறிவின் நிலையை உணர முடியும், உயர முடியும் என்கிறார். முறையாக தவம் செய்வது எப்படி?
 

1)      காலை மாலை இருவேளையும் சுமார் இருபது நிமிட நேரம் தவம் செய்ய வேண்டும்.

2)
இடைப்பட்ட நேரத்திலும் அவ்வப்போது சிறிது நேரம் தவம் செய்ய வேண்டும்.

3)
உண்ணும் போதும் பிற புலன் அனுபோகத்தின் போதும் ஆக்கினை

மற்றும் துரியத்தில் உயிரின் அசைவை கவனிக்க வேண்டும்.இது அறிவை அயராத விழிப்புநிலையில் வைத்திருக்க உதவும்.
4)
பரபரப்பாக செயல்படுவதையும், உரக்கப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

5)
மௌனவிரத காலங்களில் அதிகமாக தவம் செய்யலாம்.
6)
மனதில் பேராசை, சினம், வஞ்சம், பொறாமை, வெறுப்பு தற்பெருமை,அவமதிப்பு, முறையற்ற பால்கவர்ச்சி, அவசியமற்ற பயம், அதிகாரபோதை, ஆகிய தீய உணர்வுகளும் எழாமல் மனதின் தூய்மையை காத்துக்கொள்ள வேண்டும்.

7)
அறிவை இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும், உடல் மன நலத்திற்கான அறநெறி ஆராய்ச்சியிலும் வைத்திருக்க வேண்டும்.

8)
ஒருநாள் நொடிப்பொழுதில் விண்(உயிர்) துகள்கள் அகக்காட்சியாக தெரியும்.உள்ளுணர்வாக(Intuition)  தத்துவங்கள் யாவும் விளங்கும்.

9)
மனம் நிறைவு பெற்று அமைதி நிலை அடையும்.

No comments:

Post a Comment