Sunday 15 May 2016

தெரிந்துகொள்ளுங்கள் இன்று...!

ஓட்டு என்பது வெறும் விரல் மை அல்ல, அது ஒரு பெருவெள்ளத்தின் சிறுதுளி.

இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும், ஓட்டு உரிமை வழங்கப்படுகிறது. நாம் இந்திய குடிமகன் என்பதற்கு அத்தாட்சி, நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓட்டுரிமை. அதை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். ஓட்டு போடுவது, ஒவ்வொருவரின் கடமை. எனவே, இன்று தவறாமல் ஓட்டளிப்போம்...!

தெரிந்துகொள்ளுங்கள் இன்று...!
➀ மிகக் குறுகிய காலப் போர் என வரலாற்றில் பதிவானது, 1896ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜான்ஜிபாருக்கும் இடையே நடந்த போர் தான். வெறும் 38 நிமிடங்கள் தான் அந்தப் போர் நீடித்தது.

➁ அமேசான் காட்டில் ஒரு சதுர கிலோமீட்டருக்குள் உள்ள மரங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பூச்சியினங்கள் வசிக்கின்றன.

➂ இயற்கையிலேயே சிவப்பு நிறமுடைய தலை முடியைக் கொண்டவர்களுக்கு மிக விரைவாக வழுக்கை விழும்.

➃ நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், சீனாவில் 200 குடும்பப் பெயர்கள் தான் உள்ளன.

➄ ஆழ்கடலில் உள்ள மீன் இனங்களால் பின்னோக்கி நீந்த முடியாது.

➅ பெண்களைக் காட்டிலும் ஆண்களால் மிகச் சிறிய எழுத்துக்களைக் கூட படிக்க முடியும். ஆண்களைக் காட்டிலும் பெண்களால் சிறிய ஒலிகளைக் கூட கூர்ந்து கேட்க முடியும்.

No comments:

Post a Comment