Wednesday 11 May 2016

இலக்கணம் - எவ்வகை

இலக்கணம் - எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் மற்றும் தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

1. என்னே! கடலின் அழகு - உணர்ச்சி வாக்கியம்

2. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் - செய்தி வாக்கியம்

3. தந்தை மகனுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்தார் - செய்வினை வாக்கியம்

4. ஆ! தாஜ்மகால் என்ன அழகு! - உணர்ச்சி வாக்கியம்

5. பாரதியார் தமிழ் உணர்வை வளர்த்தார் - தனி வாக்கியம்

6. ராமன் பாடம் படித்தான் - தன்வினை வாக்கியம்

7. ஆசிரியர் பாடம் கற்பித்தார் - பிறவினை வாக்கியம்

8. தச்சன் நாற்காலியை செய்தான்- செய்வினை வாக்கியம்

9. இளங்கோவன் கவிதை எழுதினான் - தன்வினை வாக்கியம்

10. நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது - செயப்பாட்டுவினை வாக்கியம்

11. செல்வி உணவு உண்பித்தாள் - பிறவினை வாக்கியம்

12. கபிலன் ஓவியம் வரைந்தான் - தன்வினை வாக்கியம்

13. கம்பர் இராமாயணத்தை இயற்றினார் - செய்வினை வாக்கியம்

14.அவன் போர்க்கலை பயிற்றுவித்தான் - பிறவினை வாக்கியம்

15. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் - செய்வினை வாக்கியம்

16. மணிமேகலை உணவு உண்பித்தாள் - பிறவினை வாக்கியம்

17. கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது - செயப்பாட்டுவினை வாக்கியம்

18. இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது - செயப்பாட்டுவினை வாக்கியம்

19. குமரன் கோயில் கட்டினார் - செய்வினை வாக்கியம்

20. செல்வன் பாடம் கற்றான் - தன்வினை வாக்கியம்

No comments:

Post a Comment