Sunday 15 May 2016

இலக்கியம் - நந்திக் கலம்பகம்

இலக்கியம் - நந்திக் கலம்பகம், முக்கூடற்பள்ளு மற்றும் மாணிக்கவாசகர்

1. மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் ------------- - மருதீசர்

2. முக்கூடற்பள்ளு கற்பதனால், அக்கால மக்களின் ----------- பற்றியும் ----------------- பற்றியும் அறிந்துகொள்ளலாம் - உழவுத்தொழில், சமுதாயம்

3. தத்தும் புனல் என்பதன் பொருள் - தத்திச்செல்லும் நீர்

4. மதோன்மத்தர் என்பதன் பொருள் - பெரும்பித்தனாகிய சிவபெருமான்

5. சித்ரம் என்பதன் பொருள் - சிறப்பான காட்சிகள்

6. மாணிக்கவாசகர் 9 ஆம் நூற்றாண்டில் --------- காலத்தைச் சார்ந்தவர் ஆவார் - வரகுண பாண்டியன்

7. மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் ---------- பணியாற்றினார் - தலைமை அமைச்சராக

8. மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் --------- என அழைக்கப்படுகின்றன - திருவாசகம்

9. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த -------- வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது - இலக்கியங்களின்

10. மாணிக்கவாசகருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் - அருள்வாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன்

11. மாணிக்கவாசகரின் பெற்றோர் ---------- ஆவார் - சம்புபாத சரிதரு , சிவஞானவதி

12. மாணிக்கவாசகருக்கு அரிமர்த்தன பாண்டியன் அளித்த பட்டம் -------- - தென்னவன் பிரமராயன்

13. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ---------- ஆவார் - ஜி. யு. போப்

14. மாணிக்கவாசகரின் படைப்புகள் -----------, ---------- - திருவாசகம், திருக்கோவையார்

15. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ---------- ஆகும் - பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர்

16. மாணிக்கவாசகர் ------------ மந்திரத்தை எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார் - நமசிவாய என்னும் ஐந்தெழுத்து

17. பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் -------- ஆகும் - திருவாசகம்

18. மாணிக்கவாசகரின் இயற்பெயர் --------- - திருவாதவூரர்

19. திருவாசகம் ---------- பகுதிகளையும் --------- பாடல்களையும் கொண்டுள்ளது - 51 , 649

20. திருவாசகச் சிறப்பினைப் போற்றிச் சிறப்பித்தவர்கள் ----------, ---------- - சிவப்பிரகாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க வள்ளலார்

No comments:

Post a Comment