Friday 6 May 2016

சிங்கம் மற்றும் முயல்

Story for Friday

The Lion and the Rabbit

 Once upon a time there was a beautiful jungle. There lived a very big, lazy and old lion. Being the King of the jungle, the lion called all the animals and ordered them, Everyday one of you should come by yourself as my prey, otherwise i will destroy the whole jungle.

 The animals were too scared of the lion and agreed to obey his order. The animals planned to go one by one. The lazy lion was happy with his easy prey. Days went by.

 One day, it was the turn of the rabbits. A little rabbit voluntarily agreed to go to the lion′s cage. The little rabbit reached the lion′s den very late. The angry lion roared at the little rabbit and asked, Why are you late? The rabbit acted wisely and told the king that, I met another lion on the way, which is bigger than you. It threatened to eat me.

 The lion angrily asked the rabbit Do you know where he lives?. The rabbit replied Yes and asked the king to follow him. The rabbit reached an old well and said the King, That lion lives in this well.

 The foolish lion peeped into the well and mistook his own reflection as another lion and roared loudly. Hearing the echo of his own, the lion got angry and jumped into the well and drowned.

 That was the end of the lion and all animals lived happily in the jungle.

Moral : Wisdom is stronger than physical strength. Intelligence wins over might

சிங்கம் மற்றும் முயல்

ஒரு அழகான காட்டில் மிக வயதான சோம்பேறியான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதுவே காட்டு ராஜாவாகவும் இருந்தது. அது அனைத்து விலங்குகளிடமும் ஒவ்வொருவரும் தினமும் தனக்கு உணவாக வர வேண்டும் அப்படி இல்லையென்றால் இந்த காட்டை அழித்து விடுவேன் என்று கட்டளையிட்டது.

அனைத்து விலங்குகளும் சிங்கம் கூறியதை கேட்டு அவ்வாறே நடந்து கொண்டது. தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திருக்கு உணவாக சென்றது. இப்படியே பல நாட்கள் சென்றன.

ஒரு நாள் முயலின் முறை அது உணவாக சிங்கத்திடம் செல்லவேண்டும். அன்று முயல் தாமதமாக சென்றது. அதனால் ஆத்திரமடைந்து கர்ஜித்த சிங்கம் முயலிடம் தாமதமாக வந்ததற்கான காரணத்தை கேட்டது, அதற்கு முயல் சிங்கராஜாவே நான் வரும் வழியில் உங்களைப் போலவே ஒரு பெரிய சிங்கத்தை பார்த்தேன் அது என்னை உணவாக சாப்பிடுவதாக கூறியது என்று முயல் கூறியது.

அதைக் கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது முயலிடம் அந்த சிங்கம் இருக்கும் இடம் தெரியுமா என்று கேட்டதற்கு முயலும் ஆம் தெரியும் இந்தக் காட்டில் தான் இருக்கிறது என்று கூறி சிங்கத்தை அழைத்து ஒரு பழைய கிணற்றிற்கு சென்று இங்குதான் இருக்கிறது என்று கூறியது.

அதைக் கேட்ட அந்த முட்டாள் சிங்கமும் அந்த கிணத்தை எட்டி பார்த்தபோது அதன் உருவம் உள்ளே தெரிந்தது, அது அதனுடைய உருவம் என அதற்கு தெரியாமல் கர்ஜித்தது, கர்ஜனை எதிரொலித்ததும் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது.

முயலின் புத்திசாலித்தனம் நிறைவேறியது, காட்டில் எல்லா விலங்குகளும் சந்தோசத்துடன் வாழ்ந்து வந்தது.

நீதி : உடல் வலிமையை விட அறிவே சிறந்தது. அத்தகைய அறிவினால் வெற்றியே கிடைக்கும்.

No comments:

Post a Comment