Thursday 5 May 2016

முலாம்பழம்

முலாம்பழம்

முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும். நீர்த்தன்மை மிகுந்த சில பழங்களில் முக்கியமானது முலாம்பழம்.

❈ உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும்.

❈ மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.

❈ கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.

❈ முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.

❈ சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை. இதற்கு முலாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.

❈ புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், விட்டமின் ஏ, சி என்று பலவிதச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

❈ முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்.

❈ கனிந்த பழத்தின் சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். இத்துடன் தேன், சர்க்கரை கலந்தும் உண்ணலாம். ஜூஸ் ஆகவும், பாலுடன் கலந்து “மில்க் சேக்” காகவும் பருகலாம்.

❈ முலாம் பழத்தை உண்டு வர மூல நோய் குணமாகும். அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும்.

❈ பித்தத்தை மொத்தமாக அகற்றும். சரும நோய்க்கு எளிய இயற்கை மருந்து.

❈ இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.

❈ உடலுக்கு வலுவைத் தரும். இதன் பழத்தின் சதையைப் பயன்படுத்தி சர்பத் செய்து குடித்து வர உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

❈ கோடை நோய்கள் வராமல் காக்கும். தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் முலாம்பழம்.

❈ இதில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.

No comments:

Post a Comment