Tuesday 31 May 2016

சாந்து கமழும் கவரியின் கந்தம்



சாந்து  கமழும்  கவரியின்  கந்தம்
சாந்து  கமழும்  கவரியின்  கந்தம்  போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழ  நின்றானே.

WhatsApp No:+91-9444226039
    +91-9962225358

     
சந்தனத்தினும்  கவரிமானது  கஸ்தூரி  மிக்க மணமுடையது  ஆதல் போல் அமரர்க்கு  சிவபிரான்  அருளிய  நெறியே பிற நெறிகளை  விடச் சிறந்தது. அவ்வாகம நெறிக்கண்,   மூன்றாம் பாதமாகிய  யோகத்தில் நிற்பவர், தாம் தமது தலையுச்சிச்  சகஸ்ராரமத்தில்  தரிசித்து உணர்ந்து அனுபவிக்கும்  ஒளிவடிவிற்கு இணையான ஆயிரம் நாம மந்திரங்களை , இயங்கும்  போதெல்லாம்  இயம்பிப் புகழுமாறு அவன் விளங்குகின்றான்.
நீதி சாஸ்திரம்.
இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2.
தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3.
போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2.
மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3.
மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2.
நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3.
நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2.
நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3.
நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

No comments:

Post a Comment