Wednesday 4 May 2016

இலக்கியம் - சீறாப்புராணம்

இலக்கியம் - சீறாப்புராணம்

1. சீறாப்புராணத்தை இயற்றியவர் - உமறுப்புலவர்

2. உமறுப்புலவரின் காலம் ----------------- ஆகும் - பதினேழாம் நூற்றாண்டு

3. உமறுப்புலவரின் ஆசிரியர் ------------------ ஆவார் - எட்டயபுரம் கடிகை முத்துப் புலவர்

4. கேழல் என்னும் சொல்லின் பொருள்; - பன்றி

5. எண்கினங்கள் என்பதனை பிரித்தெழுதுக - எண்கு + இனங்கள்

6. சின்னச்சீறா என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் -------------- ஆவார் - பனூ அகுமது மரைக்காயர்

7. உமறுப்புலவர் இயற்றிய மற்றொரு நூல் ------------- - முதுமொழிமாலை

8. நபிகள் பெருமான் அபூபக்கருடன் தங்கியிருந்த குகையுள்ள மலையின் பெயர் ------------- - தௌர் மலை

9. எண்கு என்னும் சொல்லின் பொருள்- கரடி

10. வீழ்ந்துடல் என்பதனை பிரித்தெழுதுக - வீழ்ந்து + உடல்

11. பாந்தள், உரகம், பன்னகம், பணி, அரவு என்னும் சொற்களின் பொருள் ------------- என்பதாகும் - பாம்பு

12. விடமீட்ட படலம் ------------------ காண்டத்தில் உள்ளது - ஹிஜ்ரத்துக் காண்டம்

13. மரை என்னும் சொல்லின் பொருள் - மான்

14. பெருங்கிரி என்பதனை பிரித்தெழுதுக - பெருமை + கிரி

15. கிரி என்னும் சொல்லின் பொருள் - மலை

16. சீறத் என்னும் அரபுச் சொல் தமிழ் மரபிற்கேற்ப ------------ என்று வழங்கப்பட்டது - சீறா

17. சீறா என்பதற்கு ------------- என்பது பொருள் - வாழ்க்கை

18. கான் என்பதன் பொருள் - காடு

19. தெண்டிரை என்பதனை பிரித்தெழுதுக - தெண்மை + திரை

20. சீறாப்புராணம் ------------------------ என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது - விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்

21. மடங்கல் என்பதன் பொருள் - சிங்கம்

22. பெருஞ்சிரம் என்பதனை பிரித்தெழுதுக - பெருமை + சிரம்

23. சீறப்புராணத்தின் முப்பெரும் காண்டங்கள் ------------- எனவும் அழைக்கப்படும் - பிறப்பியற்காண்டம், செம் பொருட்காண்டம், செலவியற் காண்டம்

24. உழுவை என்பதன் பொருள் - புலி

25. உள்ளுறை என்பதனை பிரித்தெழுதுக - உள் + உறை

சட்டுனு சமைத்து! சுவைத்து மகிழ்ந்திட!

அனைத்து தென்னிந்திய பாரம்பரிய உணவுகளை எளிமையாய் சமைத்து, ருசிக்க தெளிவான குறிப்புகளுடன் சைவம், அசைவம், காரவகைகள், இனிப்பு வகைகள், நீர்ம உணவுகள், மருத்துவக்குறிப்புகளுடன் கூடியவை

No comments:

Post a Comment