Tuesday 10 May 2016

ரோகிணி நட்சத்திரம்



ரோகிணி நட்சத்திரம்

 27 நட்சத்திரங்களில் நான்காவது இடத்தை பெறுவது ரோகிணி நட்சத்திரமாகும். இந்நட்சத்திரத்தின் அதிபதி சந்திர பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஓ, . வி. வு. வா. வீ ஆகியவை ஆகும்.

நட்சத்திரத்தின் பொது பலன்கள் :
 ரோகிணி நட்சத்திரம் தாய்வழி உறவினர்களுக்கு தோக்ஷத்தை ஏற்படுத்தும். ரோகிணி நட்சத்திரம் சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விதமான கலையாக இருந்தாலும் எளிதில் கற்றும் கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னை நம்பியவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும். பெண்கள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகவும், பொன் பொருள் மீது அதிக ஆசை உடையவர் களாகவும் இருப்பார்கள். அதிக நுண்ணறிவுடனும். தெளிந்த அறிவுடனும் எந்தவொரு செயலையும் செய்வார்கள். இவர்களுக்கு பகைவர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் ஆற்றல் இருக்கும். இனிமையான பேச்சாற்றலும். பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறியும் திறனும் இருக்கும். பேச்சில் ஒளிவு மறைவு என்பது இருக்காது. எப்பொழுதும் நேர்மையாக வாழ விரும்புவதால் தவறுகள் செய்ய தயங்குவார்கள். விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.

நட்சத்திரத்தின் திசை பலன்கள் : ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சந்திர திசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும். சந்திர திசை காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.

இரண்டாவது திசையாக வரக்கூடிய செவ்வாய் திசை மொத்தம் ஏழு வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் மேன்மை. குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும்.

மூன்றாவது திசையாக வரும் ராகு திசை காலங்களில் நிறைய போராட்டங் களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை. குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை. எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும்.

நான்காவது திசையாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்வீர்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு. ஆன்மீக தெய்வீக காரியங் களுக்காக செலவு செய்தல். பொருளாதார மேன்மை. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

ஐந்தாவதாக வரும் சனி திசை பத்தொன்பது வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வ செல்வாக்கு பெருகும்.வழிபாட்டு ஸ்தலங்கள் :திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில்
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
திங்கள+ர் சந்திரன் திருக்கோவில்
திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில்

No comments:

Post a Comment