Sunday 1 May 2016

2-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

2-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

சத்யஜித் ராய்

♧ திரைத்துறை சாதனைக்காக ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் மற்றும் பிரபல இயக்குநருமான சத்யஜித் ராய் 1921 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தார். சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை பயின்றார். விளம்பர நிறுவனங்களில் வேலை பார்த்தார்.

♧ ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா மற்றும் பதேர் பாஞ்சாலி நாவல் ஆகிய புத்தகங்களுக்கு அட்டைப் படம் வரைந்து புகழ்பெற்றார். தனக்குள் காவியமாக சுழன்றுகொண்டிருந்த பதேர் பாஞ்சாலியை கலைப்படமாக இயக்க முடிவுசெய்தார். பல பிரச்சினைகளைத் தாண்டி, 1955இல் 'பதேர் பாஞ்சாலி" வெளிவந்தது. உலக அளவில் தலைசிறந்த இயக்குநராக அவரை இத்திரைப்படம் அடையாளம் காட்டியது.

♧ 'சந்தோஸ்" என்ற சிறுவருக்கான இதழை ராய் நடத்திவந்தார். அதில் சிறுகதைகள், ஓவியங்கள், தேவதைக் கதைகள், மாயாஜாலக் கதைகள், அறிவியல் கதைகள், ஏராளமான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் விருது, பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது, 1965இல் தேசிய சிறந்த திரைப்படத்துக்கான வெண்தாமரை விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகெப் பால்கே விருது, 1992இல் பாரத ரத்னா என பல விருதுகளை பெற்றுள்ளார்.

♧ பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. வாழ்நாள் சாதனைக்கான கவுரவ ஆஸ்கர் விருது 1992இல் இவருக்கு வழங்கப்பட்டது. உலக அளவில் 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற இயக்குநராகப் போற்றப்பட்ட சத்யஜித் ராய் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி தனது 71 வயதில் மறைந்தார்.

உலகமே வியக்கும் மோனாலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டா வின்சி 1519 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி இறந்தார்.

1952 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி உலகின் முதல் ஜெட் விமானமான கொமெட்-1 லண்டனுக்கும், ஜோகானஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.

1928 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார்.

1933 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.

1952 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக ராஜேந்திரபிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment