Tuesday 19 April 2016

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

இலக்கியம் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

1. இரட்டைக் காப்பியம் என்பன ---------- ஆகும் - சிலப்பதிகாரம், மணிமேகலை

2. புள் என்பதன் பெருள் - பறவை (புறா)

3. இளங்கோவடிகள் வாழ்ந்த காலம் -------------- - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

4. தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று சிலப்பதிகாரத்தை புகழ்ந்து பாராட்டியவர் யார் - கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை

5. வெய்யோன் என்பதன் பொருள் - கதிரவன்

6. தமிழின் முதல் காப்பிய நூல் எது - சிலப்பதிகாரம்

7. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு - காதை

8. சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் - அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

9. இளங்கோவடிகள் ---------- நாட்டைச் சேர்ந்தவர் - சேர நாடு

10. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று சிலப்பதிகாரத்தை புகழ்ந்து பாடியவர் - பாரதியார்

11. சிலப்பதிகாரத்தின் அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் - அரும்பத உரைகாரர்

12. யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் - சீத்தலைச் சாத்தனார்

13. சிலப்பதிகாரத்தின் முதல் காதை ---------------- - மங்கல வாழ்த்துப் பாடல்

14. சிலப்பதிகாரத்தின் இறுதி காதை --------------- ஆகும்- வரந்தரு காதை

15. சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள் - முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம்

16. அவ்வூர் என்பதனை பிரித்தெழுதுக - அ + ஊர்

17. கோவலனின் தந்தை பெயர் - மாசாத்துவான்

18. கண்ணகியின் தந்தை பெயர் - மாநாய்கன்

19. ஆழி என்பதன் பொருள் - தேர்ச்சக்கரம்

20. புன்கண் என்பதன் பொருள் - துன்பம்

21. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் ------------- ஆகும் - மணிமேகலை

22. மணிமேகலை ----------- காப்பியங்களுள் ஒன்று - ஐம்பெருங் காப்பியங்கள்

23. மணிமேகலையில் உள்ள காதைகள் - 30

24. மணிமேகலை நூலின் ஆசிரியர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

25. மணிமேகலை நூலின் வேறு பெயர் - மணிமேகலை துறவு

No comments:

Post a Comment