Friday 1 April 2016

திடீரென ஏற்படும் தீக்காயம்!

திடீரென ஏற்படும் தீக்காயம்!

தீக்காயத்திற்கான முதலுதவி :

✔ சமையல் செய்யும்போது தீயால் விரலைச் சுட்டுக் கொண்டால், தண்ணீரில் விரலை வைத்துக் குளிரச் செய்து வெப்பத்தை விரைவில் அப்புறப்படுத்துவதே முதல் உதவி.

✔ கரன்ட் ஷ்க், மின்னல் ஷாக் ஏற்பட்ட நேரங்களில் அவர்களைச் சுற்றி சூழ்ந்து கொள்ளாமல் அவர்களுக்கு காற்று விட வேண்டும்.

✔ தீப்புண்கள் கிருமிகள் இல்லாதவை. எனவே அசுத்தமான கை படக் கூடாது. தீப்பற்றிய துணி புண்ணில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதைப் பிய்க்கக் கூடாது.

✔ தீப்புண் ஏற்பட்டால் நகைகள், கடிகாரம் போன்றவற்றை உடனே கழற்றிவிட வேண்டும். பிறகு எடுத்தால் வீக்கத்தினால் வலி அதிகம் ஏற்படும்.

✔ உடலில் தீப்புண் எவ்வளவுக்கு பரவலாக இருக்கிறதோ, அவ்வளவு விபத்தின் கொடூரம் அதிகம். தீயினால் ரத்த நாளங்களும், தசை நார்களும் சிதைவுபட்டு, நீர் போன்ற திரவம் உடலில் இருந்து வெளியே வருகிறது. அதனால் ரத்தம் சுண்டிப் போய் திரவத் தன்மை குறைந்து கெட்டியாகிறது. இப்படி அதிகக் கனமுள்ள ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துமனைக்கு கொண்டு செல்லுதல் அவசியம்.

✔ உடல் ஏதாவது ஒரு பகுதி திடீர் தீ விபத்திற்குள்ளானால் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிக ரத்தம் பாயும். தோல், சதைப் பாகங்கள், ஜீரணக் குழாய் போன்றவற்றில் ரத்த ஓட்டம் குறையும். அதனால்தான் தீ விபத்துக்குள்ளானவர்களின் உடல் வெளுத்தும், சில்லென்றும், ஈரமாகவும் இருக்கும். செரிமான சக்தியும் இருக்காது. இவர்களுக்கு, கடினமாக உள்ள உணவைக் கொடுக்கக் கூடாது. தாகம் எடுத்தால் தண்ணீர் போன்ற நீராகாரம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

✔ தீப்பற்றா கம்பளிகளைக் கொண்டு மட்டுமே தீயை அணைக்க முற்பட வேண்டும். கம்பளி போன்ற தீயை அணைக்கும் திறனுடைய மிக தடிமனான துணி வகைகளை பயன்படுத்தலாம்.

✔ தீப்புண் மேலே ஆறியது போல இருந்தாலும், உள்ளிருக்கும் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் காயம் ஆறும் நிலையில் இருக்கும் போது அதன் மீது அனல் படாமல், வெப்பம் தாக்காமல் பாதுகாக்க வேண்டும். டீ வடிகட்டும் போது மற்றும் இட்லி எடுக்கும் போது வெளிப்படும் நீராவி போன்றவையும் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

✔ சுடுநீரில் குளிக்கக்கூடாது. தீக்காயம் பட்ட இடத்தின் மீது தடிமனான துணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். பெரிய தீக்காயங்களின் போது ஏற்படும் வடுக்கள் தவிர்க்க முடியாதவை. சிறிய தீக்காயத்தால் வடுக்கள் ஏற்படாமல் தடுக்க எண்ணெய் அல்லது க்ரீம் தடவ வேண்டும்.

✔ தீ விபத்துக்கு உள்ளானவர்கள், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையே முதல் மருந்து.

உடலில் தீப்பற்றிக்கொண்டால் செய்வது என்ன?

தீக்காயங்கள் யாருக்கும் எப்போதும் ஏற்படலாம். அந்த பதற்றமான நேரத்தில் என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது எனத் தெரியாமல் அவசர கதியில், உடன் இருப்பவர்கள் செயல்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நன்மைக்காக இவர்கள் செய்யும் சில வி~யங்கள் மேலும் ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைதல் கூடாது. தீப்பிடித்தால் ஏற்படும் பாதிப்பை விட, அதனை முறையாக கையாளாததால் ஏற்படும் பாதிப்புகளே அதிகம். தீப்பிடித்துக் கொண்டதும் உதவிக்காக அங்குமிங்கும் ஒருவர் நடந்தால், அதனால் காற்றோட்டம் ஏற்பட்டு துணி முழுவதும் தீ பரவும். உடலில் தீப்பிடித்தால் தரையில் படுத்து உருண்டு தீப்பரவாமல் தடுக்க வேண்டும். மண் தரையில் உருள்வது இன்னும் நல்லது.

நீங்கள் அறிந்து எங்காவது தீப் பற்றிக்கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment