Sunday 24 April 2016

அலுவலகத்தில் நடந்து கொள்வது எப்படி?

அலுவலகத்தில் நடந்து கொள்வது எப்படி?

♠ நீங்க உங்கள் வேலையை சரியா செய்யுங்கள். உங்கள் பணியின் மீதும் யாரும் குறைகூறா வண்ணம் நடந்து கொள்ளுங்கள். திறமையும் சரியான வழிமுறைகளும் இருந்தால் எவராலும் முன்னுக்கு வர முடியும்.

♠ எந்த வேலை கொடுத்தாலும் உங்களை நம்பிக் கொடுக்கலாம் என்று மற்றவர்கள் நினைக்கும் படி உங்கள் வேலையில் சுத்தம் இருக்க வேண்டும்.

♠ உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து இருக்கிறீர்கள் என்றால் அதை மேலதிகாரியிடம் சென்று “நான் இந்த வேலையை இந்த காலக்கட்டத்திற்குள் சொன்ன படி முடித்து விட்டேன்” என்பதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

♠ யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்து பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள். ஆடை பற்றியோ அல்லது உங்களுக்கு உள்ள திறமை பற்றியோ பாராட்டும்போது, நன்றி என்று நேரடியாக சொல்லுங்கள், தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.

“நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்...”

பாரதியார் பாடலை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வந்து, உங்கள் மதிப்பு, மரியாதையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்!
பொதுவான கருத்துகள் :
♠ வேலை பார்க்கும் இடங்களில் மனஅமைதியை இழக்காமல் இருக்கவேண்டுமானால் ஒன்று தங்களின் அமைதியின்மைக்குப் பிறரையோ, சூழ்நிலையையோ குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

♠ மற்றொன்று எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்ற இரண்டு செயல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

♠ பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகும்போது அச்சூழ்நிலை பற்றி அவ்வப்போது மேலதிகாரியிடம் அதுகுறித்தத் தகவல் அளித்து வரவேண்டும்.

♠ முதுகுக்குப் பின்னால் குத்துவது, இரட்டை வேடம் போடுவது, வதந்திகளைப் பரப்புவது, வம்பு பேசுவது போன்ற குணங்களை முழுமையாக விட்டொழிக்க வேண்டும். உணர்ச்சிவசப்படும் நிலையை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

♠ நம்மோடு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தான். அதன்பின்தான் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் வரிகள் :
♠ பிரச்சினை வந்த அன்று நான் லீவில் இருந்தேன். நான் இருந்திருந்தால் அது நடக்காமல் தடுத்திருப்பேன்.

♠ இந்த கோப்பு பற்றி பேசும்போது நீங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என கூறினீர்கள். அதை நான் நம்பி விட்டேன்.

♠ சரி நான் சொன்னேன் எல்லாம் சரியாக இருக்கிறது என்று. நீங்கள் அதை சரி செய்து பார்த்திருக்க வேண்டாமா? எனக்கு இந்த கோப்பை கொடுத்தவர் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னார். அவரை நான் நம்பி விட்டேன்.

♠ தவறு என்றால், புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டு அத்தவறு மீண்டும் நடைபெறாதவாறு திருத்திக்கொள்ள வேண்டும். செய்த தவறுக்கு விளக்கம் அளித்து நியாயப்படுத்தக் கூடாது.

♠ உங்கள் முன்னேற்றத்தை பற்றி யோசிக்காமல், அடுத்தவர்களின் முன்னேற்றத்தை பற்றி விமர்சிப்பது, அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற செயல்கள் உங்களின் மதிப்பை குறைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல், உங்களின் பணி திறனும் குறையும்.
அலுவலகத்தில் வெற்றி கிடைக்க :
♠ யதார்த்தமாக வாழப் பழகிக்கொள்வது

♠ நம்மால் முடியும் என்ற முழு தன்னம்பிக்கை

இதனைக் கடைபிடித்தால் நீங்களும் உங்களைச் சுற்றி உள்ளவர்களும் வேலையில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த படிக்கு முன்னேறலாம்.

No comments:

Post a Comment