Thursday 14 April 2016

இந்திரா காந்தி.!!!

இந்திரா காந்தி

“சுதந்திர தாயின் மகளாய்
பிறந்தவள் - நீ
இந்நாட்டின் சூழ்ச்சி அறியாது
நம்பிக்கை கொண்ட உனக்கு
இம்மண்ணே மடியேந்தியது
கண்ணே உன் உடலை”
  1917 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி பெருமைமிக்க குடும்பத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகளாகப் பிறந்தவர் இந்திராகாந்தி. இவர் இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி. சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல் நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நே~னல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், வி~;வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் அவர் கல்வி பயின்றார்.

  பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன. 1942 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பெரோஸ் காந்தியை மணந்தார். திருமதி இந்திரா காந்தி சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு உதவும் வகையில், தனது சிறு வயதிலேயே சர்க்கா சங்கத்தையும் 1930ல் வானர் சேனாவையும் நிறுவினார். இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப்பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.

  அடிப்படையில் பஞ்சாபி மொழி பேசும் மக்களை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கையோடு வலுப்பெற்றது சிரோன்மணி அகாலிதளம் அதை நீர்க்கச் செய்ய பஞ்சாப் மாநிலத்தை மூன்றாகப் பிரித்து ஹரியானா, பஞ்சாப் மற்றும் இரண்டுக்கும் பொதுவாக சண்டிகரை வைத்தார் இந்திரா. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராடிய ஜெய பிரகா~; நாராயண் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  1980 ஜனவரி 14 முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார் இந்திரா. மத்திய திட்டக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார். கமலா நேரு நினைவு மருத்துவமனை, காந்தி ஸ்மாரக் நிதி, கஸ்தூரிபாய் காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற பல்வேறு அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் இந்திரா காந்தி முக்கிய பொறுப்பு வகித்தார். திருமதி. இந்திரா காந்தி, அலகாபாத்தில் “கமலா நேரு வித்யாலாவை” நிறுவினார்.

  இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். தி இயர்ஸ் ஆப் ச்லேஞ், தி இயர்ஸ் ஆப் எண்டேவர்ஸ் , 1975ல் இந்தியா (லண்டன்), 1979ல் ‘இந்தியா’ (லாஸேன்) போன்ற பல்வேறு உரைகளும், எழுத்துகளும் அவரின் பிரபலமான புத்தக வெளியீடுகளாகும். இந்திராவின் பாதுகாப்புக்காக இரண்டு வீரர்கள் இருந்தார்கள் அப்போதைய பாதுகாப்பு மந்திரி ஒய்.பி சவான் அவர்கள் “இருவரையும் மாற்றி விடலாமா?” என்றார். “நாட்டின் இறையாண்மை மீது இந்த நாட்டின் பிரதமர் எனக்கே நம்பிக்கை இல்லை என்றால் எப்படி சவான்?” என மறுத்துவிட்டார் இந்திரா. எனினும் அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment