Wednesday 20 April 2016

பில்லி சூனியம் ஏவல்

பில்லி சூனியம் ஏவல்

ஏவல் பில்லி சூனியம் என்பன தெய்வங்களின் ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே அமையும். இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.

பில்லி சூன்யம் கண்டறியும் வழி :
♣ ஒருவர் நன்றாக இருப்பது போல் தோன்றும் ஆனால் அவருக்கு அடிக்கடி காய்ச்சல் மற்றும் மண்டை வலி மற்றும் வந்தி, மயக்கம், தான் ஒரு உயிரற்ற ஜீவன் போல் தோன்றும். இந்த மாதிரி தொல்லைகள் திடீரென்று வரும்.
பில்லி சூன்யத்திற்கான பரிகாரங்கள் :
♣ ஒவ்வொரு தெய்வமும் சில குறிப்பிட்ட பலன்களை அதிகமாக வழங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணமாக ஸ்ரீ சரஸ்வதி நல்ல கல்வி, அறிவு, மேதாவிலாசம், ஞாபக சக்தி போன்ற தன்மைகளை அதிகமாக அருளும் தெய்வம். அதேபோல், ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வர பில்லி சூன்யம் யாவும் நீங்குவதுடன் மீண்டும் வராது காத்துக்கொள்ளலாம்.

♣ செவ்வாயும் கிருத்திகையும் வரும் நாளில் பழனி அல்லது சென்னிமலை அல்லது திருச்செந்தூர் சென்று வணங்கலாம். சூரனை அழித்த இடம் என்பதால் திருச்செந்தூர் கெட்ட சக்திகளை அழிக்கும் ஒப்பற்ற கடவுளாக முருகன் திகழ்கிறார். வீட்டில் உபயோகப்படுத்தாத பழைய துணிகள், சாமான்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றுங்கள். தீய சக்திகள் வர அவைகள் காரணமாகலாம்.

♣ குடும்பத்தோடு குலதெய்வத்தை மூன்று பௌர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது நல்ல பலனை அடையலாம்.
பில்லி சூன்யம் விலகும் மந்திரம் :
♣ ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர தீய சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்க்ஷிராஜாய தீமஹி
தன்னோ சரப ப்ரசோதயாத்

♣ இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதால் நம்மை பிடித்துள்ள பில்லி சூனியம் ஏவல் அனைத்தும் நீங்கி நன்மை பெற முடியும்.

சுக்கிர தோஷம் நீங்க..!

வெள்ளி விக்கிரகம், வைரம், வெண்பட்டு, வெண் தாமரைப்பூ, வெள்ளக்குதிரை, அவரை, அலங்கரிக்கப்பட்ட பசு, தாம்பூலம் இவைகளை தானம் செய்யலாம். கும்பகோணம் திருவெள்ளியங்குடியில் உள்ள ஸ்ரீ கோலவில் ராமர் கோவில் சென்று வழிபடலாம்.

No comments:

Post a Comment