Friday 22 April 2016

குரங்குகள் மற்றும் தொப்பி வியாபாரி

குரங்குகள் மற்றும் தொப்பி வியாபாரி

ஒரு கிராமத்தில் குல்லாய் விற்கும் வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் நகரத்திற்குச் சென்று குல்லாயை விற்று வருவார். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு நாள் குல்லாய் விற்று விட்டு மதிய உணவு சாப்பிட்டு வரும்பொழுது ஒரு மாங்காய் மரத்தடியில் படுத்து உறங்கினார்.

அந்த மாங்காய் மரத்தின் மீது நிறைய குரங்கள் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தது. அதன் பின் மரத்தடியில் வியாபாரியின் பையில் இருந்த கலர் கலரான குல்லாயை குரங்குகள் பார்த்து மகிழ்ச்சியுடன் அதை எடுத்துப் போட்டுக் கொண்டு மரத்தின் மேல் சென்றது.

வியாபாரி சிறிது நேரம் கழித்து எழுந்து பார்க்கும்பொழுது அவருடைய பையில் வைத்திருந்த குல்லாய்களை காணவில்லை. அதைப் பார்த்ததும் அக்கம் பக்கம் தேடிப்பார்க்கிறார். அதன்பிறகு அந்த மாங்காய் மரத்தின் மேலே இருந்த குரங்குகள் தலையில் இருந்ததை பார்த்தார்.

அதன்பிறகு அந்த வியாபாரி கோபமாக அந்த குரங்குகளை திட்டுவதற்கு கையை உயர்த்தும்பொழுது அந்த குரங்குகளும் கையை உயர்த்தியது.

பின்பு அவர் கல்லை எடுத்து அந்த குரங்குகளின் மேலே போடும்பொழுது அந்த குரங்குகளும் மரத்திலுள்ள மாங்காயை பறித்து போட்டது. அதை பார்த்து ஆச்சரியப்பட்ட வியாபாரி நாம் செய்வதை அப்படியே செய்கிறது என்று புரிந்துகொண்டு ஒரு தந்திரம் செய்தார்.

தன் தலையிலுள்ள குல்லாயை கழட்டி தரையில் எறிந்தார். அதைப் பார்த்த குரங்கும் தலையில் இருந்த குல்லாயை கீழே எறிந்தது. அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த வியாபாரி குல்லாயை எடுத்து பையில் வைத்துக் கொண்டு அவர் ஊரை நோக்கி சென்றார்.

நீதி : புத்திசாலிதனமாக சிந்தித்து ஒரு செயலை செய்தால் எளிதாக ஒரு பிரச்சினையை தீர்க்க முடியும்.
Manikanda sharma

No comments:

Post a Comment