Friday 8 April 2016

விஷம் தீண்டாதலம்.!

விஷம் தீண்டா தலம்

காஞ்சிபுரம் தலத்திற்கு அருகில் உள்ளது விஷார். இங்கு பாண்டவர்களில் ஒருவனான பீமன் வழிபட்ட பீமேஸ்வரர் ஆலயம் உள்ளது. பதினாறு பட்டைகளுடன்,  பத்ம பீடத்தில் பீமேஸ்வரர் நெடிதுயர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அம்பிகை ஆனந்தவல்லி என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள். இவ்வூரில் யாரும் விஷம் தீண்டி இறப்பதில்லை. மேலும் இக்கோயிலின் அருகே மூன்று ஆலமரங்கள் பின்னிப் பிணைந்த நிலையில் உள்ளன. இம்மரத்தில் கிராம தேவதைகளாகக் கருதப்படும் சுமார் 2000க்கும் மேற்பட்ட வௌவால்கள் 200 ஆண்டுகளாக வாசம் செய்கின்றன. அவற்றுக்குத் தொல்லை கொடுக்காத வண்ணம் எந்த விசேஷத்துக்கும் இங்கே பட்டாசு வெடிப்பதில்லை!

No comments:

Post a Comment