Thursday 14 April 2016

பூணூல் பற்றிய தகவல்கள்

பூணூல் பற்றிய தகவல்கள்

பூணூல் அணிவது இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் ஆகும். பூணூலை பலரும் அணிகிறார்கள். இந்த பூணூல் அணிவது ஏன், அதன் உபயோகம் என்ன? எல்லோரும் பூணூல் அணிவது எதற்காக? என்ற கேள்விக்காக பதில்கள் பற்றி நாம் விரிவாக ஆராய்வோம்.

பூணூல் அணிவதற்கான காரணங்கள் :

பிரம்மா, பருத்தி செடியிலிருந்து பூணூலை தோற்றுவித்தார். பூணூலில் இருக்கும் மூன்று புரிகள், காயத்ரி, சரஸ்வதி, சாவித்திரி தேவியரைக் குறிக்கும். இதன் மூலம் பூணூலை அணிபவர் மனம், வாக்கு, மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறார். பூணூல் என்பது ஆன்மீக முன்னேற்றம், மனக் கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை நினைவுபடுத்தும் சின்னமாக அணியப்படுகிறது.

பூணூல் அணியும் முறை :

பூணூல் மூன்று விதமாக அணிந்து கொள்ளப்படுகிறது.
உபவீதம் - இது இயல்பான முறையாகும். உதாரணத்திற்கு நாம் வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது இடது தோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து வலது புறம் கைப்பகுதிக்கு அணிந்து கொள்வது. இந்தப் பொதுவான முறை உபவீதம் எனப்படுகிறது.

ப்ராசீனாவீதம் - பித்ரு காரியங்கள் செய்யும் போது பூணூல் ப்ராசீனவீதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும். ப்ராசீனாவீதத்தின் போது வலது தோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து இடது கை வரை கீழ்நோக்கி பூணூல் இருக்கும்.

நிவித்தம் - பூணூலை அணிந்து கொள்ளும் மூன்றாவது முறை நிவித்தம் என்றழைக்கப்படுகிறது. பூணூலை கழுத்தைச் சுற்றி மார்பு வரையில் மாலை போல் அணிந்து கொள்வதே நிவித்தம் எனப்படுகிறது.

மாந்தி தோஷம் நீங்க..!

சிவன் கோவிலில் குளிகை நேரத்தில் விநாயகரை வணங்கிவிட்டு, சிவன் கோவிலை 18 முறை வலம் வந்து, பிறகு சிவனை தரிசனம் செய்து உங்களின் பேரில் அர்ச்சனை செய்துக்கொள்ளுங்கள். பிறகு அம்பாளை தரிசனம் செய்து, நவக்கிரகம் இருக்கும் இடத்திற்கு சென்று சனிபகவானுக்கு தீபம் ஏற்றிவிட்டு நேராக உங்களின் வீட்டிற்கு சென்றால் மாந்தி தோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment