Friday 15 April 2016

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - பேச்சுக்கலை மற்றும் சிறுகதைகள்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - பேச்சுக்கலை மற்றும் சிறுகதைகள்

1. ஆய கலைகள் மொத்தம் எத்தனை - 64

2. நுண்ணிய நூல்பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலை - பேச்சுக்கலை

3. மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை ஈர்த்தவர்கள்- தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்

4. பிறருக்கு எழுதி உணர்த்துவதனைக் காட்டிலும் இனிய முறையில் பேசி உணர்த்துவது ----------------- ஆகும் - மேடைப்பேச்சு

5. மேடைப்பேச்சுக்கு உயிர்நாடியாக இருப்பது -------------------- ஆகும் - கருத்துகள்

6. கருத்துகளை வெளியிட ------------------------ இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன - மொழியும் முறையும்

7. அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்துவது ------------------------ ஆகும் - சிறந்தமொழி நடை

8. தொடக்கவுரைக்குப் பிறகு பொருளை விரித்துப் பேசும்முறை -------------- ஆகும் - தொடுத்தல்

9. பேச்சின் முக்கூறுகளாக இருப்பது ---------------- ஆகும் - எடுத்தல், தொடுத்தல், முடித்தல்

10. உயிருள்ள பேச்சு என்பது ----------------- ஆகும் - உணர்ச்சியான பேச்சு

11. எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகுபடுத்துவது - அணி

12. அன்றலர்ந்த மலர்களை அழகுபட மாலையாக்குதல் எதற்கு எடுத்துக்காட்டு - தொடுத்தல் முறை

13. கேட்பவர்களுடைய உள்ளத்தைப் பிணிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக அமைவது - உணர்ச்சியான பேச்சு

14. தட்டுத்தடங்கல் இன்றிப் பேசுபவர்களுக்கு பேச்சின் --------------------- அடித்தளமாகும் - தொடக்கமே

15. சொல்லுதல் வல்லார்ப் பெறின் எனக் குறிப்பிடுவது - திருக்குறள்

16. காஞ்சனை என்ற சிறுகதையை எழுதியவர் - புதுமைப்பித்தன்

17. அழியாச்சுடர் என்ற சிறுகதையை எழுதியவர் - மௌனி

18. நட்சத்திர குழந்தைகள் என்ற சிறுகதையை எழுதியவர் - பி.எஸ்.இராமையா

19. கலையும் பெண்ணும் என்ற சிறுகதையை எழுதியவர் - ந.பிச்சமூர்த்தி

20. அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதையை எழுதியவர் - தி.ஜானகிராமன்

21. அன்பளிப்பு என்ற சிறுகதையை எழுதியவர் - கு.அழகிரிசாமி

22. கண்ணீர் என்ற சிறுகதையை எழுதியவர் - கி.ராஜநாராயணன்

23. பிரசாதம் என்ற சிறுகதையை எழுதியவர் - சுந்தர ராமசாமி

24.பச்சைக் கனவு என்ற சிறுகதையை எழுதியவர் - லா.ச.ராமாமிர்தம்

25. காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற சிறுகதையை எழுதியவர் - அசோகமித்ரன்

No comments:

Post a Comment