Sunday 24 April 2016

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது;

நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்; நோயாளிகளுக்கு இளநீர் தரலாம்; உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம்; ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்; அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம்.
அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி, அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும். பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.
அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.
‘ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்தோ சூர்ய ப்ரசோதயாத்.
சித்திரை மாதம் 21-ஆம் தேதி 04-05-2016 முதல்

9962225358
7092103071/2

வைகாசி மாதம் 15-ஆம்(28.05.2016) தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை ‘அக்னி நட்சத்திரம்’ என்று சொல்வர்.

No comments:

Post a Comment