Saturday 30 April 2016

30-04-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

30-04-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

தாதாசாகெப் பால்கே

இன்று மக்களின் அனைத்து செயல்களிலும் சினிமா ஆதிக்கம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அளவுக்கு மக்களின் வாழ்கையில் சினிமா ஒன்றிவிட்டது. இத்தகைய சினிமாவை இந்தியாவிற்கு எடுத்து வந்த பெருமை தாதாசாகெப் பால்கே அவர்களையே சேரும்.

தாதாசாகெப் பால்கே அவர்கள் இந்தியாவின் நாசிக்கில் ஏப்ரல் 30, 1870 இல் பிறந்தவர். 1885 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இவர் 1910 முதல் 1940 வரையில் திரைப்படங்கள் பலவற்றை உருவாக்கினார்.

இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். இதனால் இவர் இந்திய சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஆரம்பத்தில் திரையிட்ட படங்கள் சப்தமில்லாத ஊமைப் படங்களாகவும், கருப்பு வெள்ளைப் படங்களாகவுமே இருந்தது.

தொடக்கத்தில் படங்களை தயாரித்து மட்டும் வெளியிட்டார். இவர் தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா ஆகும். நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார். இது தான் இந்தியாவில் இந்தியரால் உருவான முதல் சினிமாவாகக் கருதப்படுகிறது.

இவர் பிப்ரவரி 16, 1944 இல் மறைந்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு ″தாதாசாகெப் பால்கே விருது″ என்ற விருது இந்திய அரசாங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வோம் என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூரில், திருச்சியில் தொடங்கப்பட்டது. தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் யு கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி இறந்தார்.

1803 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.

1838 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையானது.

No comments:

Post a Comment