Tuesday 26 April 2016

நீரிழிவு நோய் (பகுதி 3)

நீரிழிவு நோய்
(பகுதி 3)

தவிர்க்க வேண்டியவை :

✩ சர்க்கரை, கரும்பு, சாக்லெட், ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், ஜாம் வகைகள், பாலாடை கட்டிகள், திரட்டுப்பால், ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், நுங்கு, சப்போட்டா, சீதாப்பழம், உலர் திராட்சை, சேப்பங் கிழங்கு, உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு.

அளவோடு சேர்த்துக் கொள்ளக் கூடியவை :
✩ கம்பு, ஓட்ஸ், அரிசி, அவல், ரவை, பார்லி, சோளம், மக்காச் சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, வால்நட்.

அதிக அளவில் சேர்த்துக் கொள்ளக் கூடியவை :
✩ சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. மேலும், பாகற்காய், சுரைக்காய், வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி, தக்காளி, கொத்தவரங்காய், காராமணி, வெள்ளரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், கீரை, கண்டங்கத்திரி, கோவைக்காய், வெங்காயம், பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைப்பூ, பீர்க்கங்காய், பப்பாளிக்காய், வெண்டைக்காய், முட்டைகோஸ், நூல்கோல், சீமை கத்தரிக்காய், தென்னைமரப் பூ, நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள் :

✩ கத்தரிப் பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காலிஃப்ளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழைப் பிஞ்சு, நூல்கோல், முருங்கைக்காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவற்றுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள் :
✩ கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை. இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து, தினமும் ஒரு டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துவந்தால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நான் ஒரு சர்க்கரை நோயாளி என்ற தினமும் ஒரு பயம் கலந்த வாழ்க்கைக்கு முற்றப்புள்ளி வைத்து, ஆரோக்கியமுடன் வாழ்வோம் !

No comments:

Post a Comment