Monday 25 April 2016

25-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

மார்க்கோனி

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த மார்க்கோனி அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். இவர் வானொலியின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவரது இயற்பெயர் குலீல்மோ மார்க்கோனி ஆகும்.

இளமையிலேயே வசதியான வாழ்க்கை வாழ்ந்தார். இவரது வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தார். இயற்பியலில், குறிப்பாக மின்சாரவியலில் அவருக்கு ஆர்வம் பிறந்தது. வீட்டில் சிறிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டார். கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்கும் முனைப்பில் இறங்கினார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார். 1899இல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி, இங்கிலாந்துக்கும் பிரான்சிக்கும் எல்லா கால நிலையிலும் இயங்கும் கம்பியில்லாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார்.

மேலும், தொடர் அலைகள் உற்பத்தி செய்யும் கருவியையும் கண்டறிந்தார். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்பமுடியும் என்பதை நிரூபித்தார். மார்க்கோனிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1909 இல் வழங்கப்பட்டது. இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவருக்குப் பல்வேறு விருதுகள், பட்டங்களை வழங்கியது. பல பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். வானொலியை உலகுக்கு வழங்கிய மார்க்கோனி 1973 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி தனது 63வது வயதில் மறைந்தார்.

உலக மலேரியா தினம்

மலேரியாவினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் உலகம் முழுவதும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கென முழக்கங்கங்களை முன்னிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது ஐ.நா அமைப்பு. மலேரியாவானது அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தியாவில் மலேரியாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

1859 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பொறியியலாளர்கள் சுயஸ் கால்வாய் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தனர்.

நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியும், மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தன் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி பிறந்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் 13 வது தலைவராகப் பொறுப்பிலிருந்த சுவாமி இரங்கநாதானந்தர் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி மறைந்தார்.

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி ராபர்ட் நாய்சு ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

No comments:

Post a Comment