Sunday 17 April 2016

18-04-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்

18-04-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்

உலக பாரம்பரிய தினம்

ஒரு நாட்டுக்கு அழகு சேர்ப்பது அதன் பழங்கால சின்னங்கள், இயற்கை எழில் மிகுந்த இடங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவையே ஆகும். ஆனால் நமது அக்கறையின்மையால், பழங்கால சின்னங்கள் பெருமையை இழந்து வருகிறது. 1972ஆம் ஆண்டு நடந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களை பாதுகாப்பது குறித்தான மாநாட்டில், உலக பாரம்பரிய தினம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி பிறந்தார். இவர் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவாளியாகக் கருதப்பட்டவர். சிறு வயதில், ஐன்ஸ்டீனின் தந்தை திசைமானியை காட்டியுள்ளார்.

இதைக் கண்டதும் அதில் இருக்கும் காந்த முள் அசைவதை வைத்து ஆராயத் தொடங்கினார் ஐன்ஸ்டீன். சிறு வயதில் படிப்பின் மீது அதிக ஆர்வம் காட்டவில்லை. தனது 12வது வயதில் கணிதம் கற்க ஆரம்பித்தார். இவருக்கு வயலினும் பயிற்றுவிக்கப்பட்டது. அதே சமயம், சிறு இயந்திரக் கருவிகள் செய்வதில் ஆர்வம் கொண்டவராய் இருந்தார்.

ஐன்ஸ்டீனின் உறவினர்களில் இருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, ஐன்ஸ்டீனை ஊக்குவித்தனர். அதன்பின், இவருக்கு 1902 இல், சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது.

இது இவருக்கு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு உதவியாகவும் இருந்தது. ஐன்ஸ்டீன் பிரௌனியின் இயக்கம், ஒளிமின் விளைவு, சிறப்பு தொடர்புக் கோட்பாடு, நிறை ஆற்றல் சமன் விதி உள்ளிட்ட பல சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இதில், E-mc 2 என்ற நிறை ஆற்றல் சமன் விதி இவருக்கு உலகப் புகழைத் தேடித்தந்தது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும், விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது மற்றும் நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. 1921இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. பூமியில் வாழ்ந்த மனிதர்களுள் அதிக IQ கொண்டவர் ஐன்ஸ்டீன் என்று கருதப்படுகிறது. இவர் ஏப்ரல் 18, 1955 இல் இறந்தார். 20ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக 1999ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1835 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி நியூயார்க் வந்து சேர்ந்தனர்.

No comments:

Post a Comment