Saturday 16 April 2016

17-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.!

17-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.!

தீரன் சின்னமலை

☘ இந்திய விடுதலைக்காக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலை 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் ஆகிய போர்ப்பயிற்சிகளைக் கற்றார்.

☘ கொங்குநாடு, மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குப் போவது வழக்கம். வரிப்பணத்தைக் கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார். 'சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்" என்று வரி கொண்டுசென்ற ஊழியரிடம் கூறினார். அப்போதிருந்து இவர் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.

☘ இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். பல கோயில்களுக்கு திருப்பணிகளும் செய்தார். 1801, 1804 இல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். இவரது செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட ஆங்கிலேயர் இவரை அழிக்க முடிவு செய்தனர்.

☘ இவரைப் போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை கைது செய்தது. சங்ககிரி கோட்டைக்குக் கொண்டுசென்று போலியாக விசாரணை நடத்தி 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி தூக்கிலிட்டனர்.

உலக ஹீமோபிலியா தினம்

உலக ஹீமோபிலியா தினமானது ஏபரல் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஹீமோபிலியா என்பது ரத்தம் உறையாமல் போகும் பரம்பரை நோய். சாதாரணமாக மனித உடலில் ஏதாவது காயம் ஏற்படும்போது வெளியேறும் ரத்தம் சிறிது நேரத்தில் உறைந்து விடும். உலக ஹீமோபிலியா அமைப்பானது சமூக இணைய தளத்தை துவங்கி, ரத்தம் உறையாமை நோயை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. கனடாவின் மான்ட்ரீல் நகரில் உலக ஹீமோபிலியா அமைப்பை கடந்த 1963இல் பிராங்க் ஸ்னாபல் என்பவர் துவக்கினார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 17 ஆம் தேதி உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சர்வபள்ளி டாக்டர்.ராதாகிருஷ்ணன்

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்தார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மறைந்தார்.

உலகின் முதலாவது பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் பிரதம மந்திரியான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்தார்.

அமெரிக்க அறிவியல் அறிஞர் பெஞ்சமின் பிராங்ளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment