Wednesday 13 April 2016

14-04-2016 இன்றைய இராசி பலன்கள்

14-04-2016 இன்றைய இராசி பலன்கள்
மேஷம் ராசிபலன்  14 Apr 2016
புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். இன்று, உங்கள் பாஸ் ஏன் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து அதனால் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். உங்களுக்கு மூட் இல்லாவிட்டாலும் உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 7
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
ரிஷபம் ராசிபலன்  14 Apr 2016
உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. சுற்றி பாருங்கள் அனைத்தும் பிங்க் நிறத்தில். ஆபீசில் ஒருவர் உங்களிடம் தவறாக நடக்கலாம் எச்சரிக்கை தேவை. சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை ஒரு கடினமான அத்தியாயத்தை சந்திக்கக் கூடும். அதிர்ஷ்ட எண்: 6
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
மிதுனம் ராசிபலன்  14 Apr 2016
வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் - தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க அமைதியாகவும் தைரியமாகவும் இருங்கள். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் - மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். உங்கள் துணை உங்களின் பலவீனம் பற்றி தெரிந்து நடந்து கொள்வார். அது உங்களை மகிழ்சியில் ஆழ்த்தும். அதிர்ஷ்ட எண்: 4
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
கடகம் ராசிபலன்  14 Apr 2016
தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் மூலமாக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதல்மயமான ஆதிக்கங்கள் இன்றைக்கு பலமாக இருக்கும். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் திருமண வாழ்க்கையின் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதனை நிறைவேற்ற தவரினால் அதன் பின் விளைவுகள் நீங்கள் சந்திக்க கூடும். கவனம். அதிர்ஷ்ட எண்: 8
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
சிம்மம் ராசிபலன்  14 Apr 2016
உங்கள் நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் - ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். கோளாறான உங்களின் நடத்தை அன்புக்குரியவருடன் மோதலை ஏற்படுத்தும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். உங்கள் துணையுடனான மன ரீதியான பந்தம் இன்று பாதிக்கலாம். அதிர்ஷ்ட எண்: 6
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
கன்னி ராசிபலன்  14 Apr 2016
மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். உங்கள் குழந்தைக்கு பரிசளிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கலாம். குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதால் உங்களின் கனவு நனவு ஆவதை நீங்கள் காணலாம். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் - இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார். அதிர்ஷ்ட எண்: 4
🍟🍟🍟🍟🍟🍟🍟🍟📗
துலாம் ராசிபலன்  14 Apr 2016
வெளிப்புற பார்ட்டிகளும் மகிழ்ச்சியான சந்திப்புகளும் இன்றைய நாளை நல்ல மன நிலையில் வைத்திருக்கும். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் - அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 7
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
விருச்சிகம் ராசிபலன்  14 Apr 2016
குடும்பப் பிரச்சினைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இருவரும் காதலிக்கும் இயல்புள்ள தம்பதியினர் என்பதை காட்டவும் உறுதிப்படுத்தவும் சிறிது நேரம் செலவழியுங்கள். வீட்டில் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் வைப்ரேசன்களை உங்கள் குழந்தைகளும் பெறுவார்கள். ஒவ்வொருவருடனும் நீங்கள் கலந்து பேசும்போது சரளமாகவும் சுதந்திரமாகவும் பேச இது வாய்ப்பளிக்கும். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்திருந்தால் பொழுதுபோக்கு மகிழ்வாக இருக்கும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுவீர்கள். உங்கள் தொழில் வளத்தை மேம்படுத்த தொழில் திறமையைப் பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை பெறப் போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். அதிர்ஷ்ட எண்: 9
Shared By: ராசிபலன்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தனுசு ராசிபலன்  14 Apr 2016
வாழ்க்கையில் தாராளமான மனப்போக்கை உருவாக்குங்கள். உங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி புகார் சொல்லுவதும் மனம் உடைந்து போவதும் எந்தப் பயனையும் தராது. பிச்சைக்காரனைப் போன்ற சிந்தனைதான் வாழ்வின் நறுமணத்தை அழித்து, போதும் என்ற எண்ணத்துடன் வாழ்வதையும் அழிக்கிறது. உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். வேலைகளை முடிக்க நீங்கள் முயற்சி செய்வதால் மனநிலை மற்றும் திட்டங்களில் மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். இன்று உங்கள் அலுவலக வேலை பாதிப்படையக் கூடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். கடினமான நேரத்தில் உங்கள் துணை உங்களுக்கு இன்று உறுதுணையாக இருக்க மாட்டார். அதிர்ஷ்ட எண்: 6
💐💐💐💐💐💐💐💐💐
மகரம் ராசிபலன்  14 Apr 2016
பயணம் செய்ய முடியாதவாறு நீங்கள் பலவீனமாக இருப்பதால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் அன்புக்குரியவர் அல்லது துணைவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் நல்லெண்ணத்தை மேம்படுத்தும். எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினைகளை நீங்கள் கையாண்டு, இன்று தெளிவான வெற்றி பெறுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்களுக்கு உங்கள் துணைக்கும் இடையே அடுத்தவர் தலையிட்டால் அது உங்கள் துணையிடன் எதிர் விளைவையே ஏற்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 6
📒📒📒📒📒📒📒📒📒
கும்பம் ராசிபலன்  14 Apr 2016
எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் களைப்படைவீர்கள். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள் - அது அமைதியைக் கெடுக்கும். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் பற்றி பார்ட்னர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் துணையின் கடினமான இன்னொரு பக்கத்தை இன்று காண்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3
🐺🐺🌝🌝🌝🐺🐺📔📔
மீனம் ராசிபலன்  14 Apr 2016
உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் கவலை மற்றும் வருத்தத்தை தரும் உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். எந்த புதிய திட்டத்தையும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று உங்கள் மண வாழ்வின் மிக வண்ணமயமான நாள். அதிர்ஷ்ட எண்: 1
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
💐💐💐💐💐💐💐💐💐
பஞ்சாங்கம்
💐💐💐💐💐💐💐💐💐
சித்திரை ~ 1 /14.4.16 வியாழன் கிழமை
வருடம் ~ துர்முகி  துர்முகி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ மாசம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி ~ அஷ்டமி
நாள் ~ வியாழன் {குரு வாஸரம் }
நட்சத்திரம்~  மணி 20.01 வரை புனர்பூசம்  பின் பூசம்
யோகம் ~ ஸுகர்மம்
அமிர்தாதி  யோகம் ~ சுபயோகம்
கரணம் ~ பவம் (சுபகரணம்)
நல்ல நேரம் ~ காலை 10.30 ~11.30 & 5~6pm
ராகு காலம்~ மதியம்   1.30~3
எமகண்டம் ~காலை  6.~7.30
குளிகை ~ காலை9~ 10.30
சூரிய உதயம் ~ 6.07 am
சந்திராஷ்டமம் ~ மணி 14 வரை விருச்சிகம் பின் தனுசு
சூலம் ~தெற்கு 
பரிகாரம் ~  நல்லெண்ணெய்
இன்று ~ தமிழ் வருட பிறப்பு
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
இன்றைய விசேஷம்
துர்முகி தமிழ் வருடப் பிறப்பு. பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் தெப்போற்சவம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வேடர்பறி லீலை, குதிரை வாகனத்தில் வீதியுலா. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். கோவில்களில் பஞ்சாங்கம் வாசித்தல். திருப்பரங்குன்றம், திருநள்ளாறு, திருமயிலை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருப்பட்டூர் முதலிய தலங்களில் புது வருட சிறப்பு அபிஷேக ஆராதனை.

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment