Tuesday 12 April 2016

13-04-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்.!

13-04-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்.!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிறந்தார். இவரின் தந்தை நாட்டுப்புறக் கவிஞர். உள்ள+ர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2ஆம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது.

மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29 வயதில் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி மறைந்தார். இவரது பாடல்கள் தொகுப்பு 1965இல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000ஆம் ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

1918ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில், ரௌலட் சட்டம் என்கின்ற ஒரு அடக்குமுறை சட்டத்தை நடைமுறைப்படுத்தி, எந்தவொரு அரசியல்வாதியையும் எவ்வித காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும், சிறையில் அடைக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இச்சட்டத்தை பாலகங்காதர் திலகரும், மகாத்மா காந்தியும் வன்மையாகக் கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெனரல் டயர் என்ற ஆங்கியேல அதிகாரி எந்தப் பொதுக் கூட்டமும் நடத்தக் கூடாது என்றும் மக்கள் எங்கும் கூடக் கூடாது என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி அறுவடை விழாவைக் கொண்டாட ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். எல்லா பக்கத்திலும் பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டிருந்த நிலையில் தனது படையினருடனும், ஆயுதங்களுடனும் நுழைந்த ஜெனரல் டயர் அந்த மைதானத்தில் இருந்து வெளியேறும் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டு அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். தங்களிடம் இருந்த தோட்டாக்கள் அனைத்தும் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஆயுதங்கள் ஏதுமின்றி குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாக திரண்டிருந்த மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தில் 1,700 பேர் உயிரிழந்தனர்.

ஐக்கிய அமெரிக்காவின் 3ஆவது குடியரசுத் தலைவர் தாமஸ் ஜெஃவ்வர்சன் 1743 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பிறந்தார்.

எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மே.ரா.மீ.சுந்தரம் அவர்கள் 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பிறந்தார்.

முதல் உயர் அழுத்த நீராவி இன்ஜினை வடிமைத்த ரிச்சர்ட் ட்ரேவிதிக் 1771 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பிறந்தார்.

1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.

No comments:

Post a Comment