Monday 4 April 2016

04-04-2016 இன்றைய உலக வராலற்றுச் சுவடுகள்.!

மார்ட்டின் லூதர் கிங்

ஐக்கிய அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் சமூக உரிமைக்காக போராடிய மார்டின் லூதர் கிங் 1929 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி பிறந்தார். இவரின் இயற்பெயர் மைக்கேல் கிங் என்பதாகும். பின்பு ஜெர்மனியின் புகழ்பெற்ற சீர்திருத்தவாதியான மார்ட்டின் லூதரின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.

காந்தியடிகளின் அறப்போராட்ட வழியில் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அறப்போரட்டத்தினை மேற்கொண்டார். போராட்டத்தின் பலனாக 1965 ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.

டென்னசியில் 1968 ஆம் ஆண்டு ஏப்ரம் 4 ஆம் நாள் மாலை சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபொழுது ஒரு தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை மார்ட்டின் லூதர் கிங் தினம் என்று அனுசரிக்கப்பட்டு அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் 1855 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். 1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக 1970 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இவர் தனது 42 வது வயதில் 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி மறைந்தார்.

1721 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி சேர் ரொபர்ட் வால்போல் பிரிட்டனின் முதலாவது பிரதமரானார்.

13 கோடுகளும், 20 நட்சத்திரங்களும் கொண்ட அமெரிக்க தேசிய கொடியானது 1818 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது.

No comments:

Post a Comment