Saturday 2 April 2016

03-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

03-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.

மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி

மராட்டியப்பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள் 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பூனே மாவட்டத்தில் பிறந்தார். தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார்.

இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசை விரிவுபடுத்தினார்.

மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்.

பல நடிகர்களின் கனவு நாயகனாக விளங்கிய, உலகப் புகழ்பெற்ற நடிகர் மார்லன் பிராண்டோ 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று பிறந்தார்.

வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ரஷ்யா திரும்பினார்.

1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முதலாவது செல்லிட தொலைபேசி அழைப்பை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது. மோட்டரோலா நிறுவன ஆராய்ச்சியாளர் பெல் கூப்பர் இந்த அழைப்பை மேற்கொண்டார்.

1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ரஷ்யாவின் லூனா-10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
பிரபல இந்தி நடிகை ஜெயப்பிரதா 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி பிறந்தார்.

நடன அமைப்பாளரும், தமிழ் நடிகரும் மற்றும் இயக்குநருமான பிரபுதேவா 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி பிறந்தார்.

No comments:

Post a Comment