Tuesday 29 March 2016

இணையம் மற்றும் அதன் சமூகப் பயன்பாடு

இணையம் மற்றும் அதன் சமூகப் பயன்பாடு

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தே அமைகிறது. நம்மிடையே பற்பல வேறுபாடுகள் இருந்து நாம் அனைவரும் நம் சமூகத்தினை முன்னேற்றப்பாதையில் கொண்டுச் செல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். அதன் அடிப்படையில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஏற்றவாறு மனிதம் கூடி வாழ்வது சமூகமாகிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் தகவல் தொடர்பு எல்லா முன்னேற்றத்திற்கும் ஒர் ஆதார சுருதியாய் அமைந்துள்ளது. அத்தகைய தகவல் தொடர்பிற்கு பல கணினிகள் பிணைக்கப்பட்டு இணையம் உருவானது எனலாம். இந்த இணையத்தினைப் பற்றி இன்று காண்போம்.

வரலாறு :
டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் உலகளாவிய இணையத்தினை கண்டுபிடித்தார். இவர் இலண்டனில் பிறந்தார். இவரது பெற்றோர்களும் கணினி துறையில் அறிஞர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தின் சமூகப் பயன்பாடு :
விவசாயம் :
நம் நாடு விவசாய நாடு. கிராமங்களில் மக்கள் பெருமளவில் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். பெருகிடும் மக்கள் தொகைக்கேற்ப, உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கிராமப் புற மக்கள் மத்தியிலும் இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதொரு அறிகுறியாய்த் தெரிகிறது.

கல்வி :
கற்றல் அல்லது கற்பித்தல் பணியில் இணையம் பெரும்பங்கு வகிக்கிறது. பள்ளிகளில் வகுப்பறைகள் தற்காலத்தில் இணைய இணைப்புடன் கூடிய கணினியோடு நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்றுத்தர இணையம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

வர்த்தகம் :
சமீப காலங்களில் நிகழ்நிலை இணைய வணிகத்தின் (ஆன்லைன் வர்த்தகம்) தாக்கம் அதிகரித்து வருகிறது. விலைவாசி நிர்ணயத்திலும் இது பெரும்பங்கு வகிக்கிறது. நமது வீட்டு பொருட்களில் தொடங்கி கணினி முதலிய பொருட்கள் அனைத்தும் இப்போது ஆன்லைனில் வாங்க, விற்க இணையம் பேருதவி புரிகிறது.

அரசுத்துறைகளில் பயன்பாடு (மின் ஆளுமை) :
எல்லா அரசுத்துறைகளிலுமே கணினியின் பயன்பாடு மிகுந்துள்ளது. அலுவலர்களின் பணிச்சுமையை வெகுவாகக் குறைப்பதில் கணினி பெரும்பங்காற்றுகிறது.

வேலைவாய்ப்பு :
இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதன் மூலம் பலர் வேலைவாய்ப்பு பெற ஏதுவாகிறது.

தொலைவில் இருந்தும் அருகிலிருப்போம்! (காணொளி உரையாடல்) :
பணிநிமித்தமாக வெளியூரில் இருப்பவர்கள், பொருளீட்ட அயல்நாடு சென்றவர்கள், மேற்படிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கும் மாணவ மாணவியர்கள், தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் காணொளியுடன் உரையாட இணையம் வகை செய்கிறது.

மருத்துவம் :
பல மருத்துவமனைகள் நாட்டின் பல பகுதிகளிலும் தத்தம் கிளைகளை அமைத்துள்ளன. சிக்கலான அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை போன்ற தருணங்களில் காணொளி வாயிலாக வேறிடத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற இணையம் வழிவகை செய்கிறது.

தேடு பொறிகள் :
தகவல் பெட்டமாகத் திகழும் இணையத்தில் எங்கே எது கிடைக்கும் என்றெல்லாம் அறிந்துவைத்து, நாம் தேடும் நேரத்தில் நமக்குதவும் தேடு பொறிகள் ஏராளம்! மிகப் பிரபலமான கூகிள் இதில் குறிப்பிடத்தக்கது. எந்த தலைப்பிலோ, சொல்லைக் கொண்டோ, அது குறித்த செய்திகள், படங்கள், காணொளிகள், மின் நூல்கள் போன்றவற்றைத் தரவிறக்கம் செய்து பயனடைய பெரிதும் துணை புரிகிறது.

தகவல் என்க்ரிப்ஷன் போன்ற தக்க பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகளுடன் இணையத்தை நாம் தகவல் பரிமாற்றம், கல்வி மற்றும் வர்த்தகத்திற்குக் கையாண்டால் அது ஒரு பலன் தரும் கற்பக விருட்சமாய்த் திகழும் என்பதில் ஐயமில்லை.
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
உங்கள் குறைகள் தீர..!
கல்வித்தடை பிரச்சனைகள் தீர பரிகார பூஜை...!
நீலசரஸ்வதி ஹயக்கிரிவர் தட்ஷிணாமூர்த்தி சிறப்பு ஹோம பரிகாரம் யந்திரம் வழங்கப்படும்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஸ்ரீ வித்யா உபாசகர்.
ஜோதிடர். புரோகிதர்.
மணிகண்ட ஷர்மா
Mobile ±91 996225358
WhatsApp ±91 9444226039
உங்கள் பிரச்சனை தீர அணுகவும்.

No comments:

Post a Comment