Friday 25 March 2016

இலக்கியம் - திருக்குறள் தொடர்பான செய்திகள் மற்றும் நான்மணிக்கடிகை

இலக்கியம் - திருக்குறள் தொடர்பான செய்திகள் மற்றும் நான்மணிக்கடிகை

1. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42,194

2. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

3. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - மூங்கில், பனை

4. திருக்குறளை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் - ஜி.யூ. போப்

5. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

6.திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்

7.திருக்குறளை தமிழ்த்தாயின் உயிர்நிலை என்று புகழ்ந்து போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

8.செம்பொருள் என்பதன் பொருள் - மெய்ப்பொருள்

9.நரிக்குறவ சமுதாயத்தினர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் - கிட்டு சிரோன்மணி

10.திருக்குறளுக்கு பத்தாவதாக உரை எழுதியவர் - பரிமேலழகர்

11.திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை

12.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

13.திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது.

14.ஆர்வலர் என்பதன் பொருள் - அன்புடையவர்

15.துவ்வாமை என்பதன் பொருள் - வறுமை

16.இனிதீன்றல் என்பதனை பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல்

17.திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரெழுத்து - னி (1705)

18.திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

19.திருக்குறள் கருத்துக்களை 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் - கின்டெர்ஸ்லே

20.புரை என்பதன் பொருள் - குற்றம்

21.நான்மணிக்கடிகை என்ற நூலின் ஆசிரியர் - விளம்பிநாகனார்

22.நான்மணிக்கடிகை ------------ நூல்களுள் ஒன்று - பதினெண்கீழ்க்கணக்கு

23.கடிகை என்பதன் பொருள் - அணிகலன்

24.நான்மணிக்கடிகையின் ஒவ்வொரு பாடலும் எத்தனை கருத்தினை கூறுகிறது - நான்கு அறக்கருத்துகள்

25.விளம்பி என்பது ----------- பெயர் - ஊர்ப்பெயர்

எளிய முறையில் ஆங்கிலம் கற்க தரவிறக்கம் செய்யுங்கள்

No comments:

Post a Comment