Thursday 31 March 2016

ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்

ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் உள்ள மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளன்று மக்கள் ஒருவரை ஒருவர் வேடிக்கையான பொய்கள் கூறி ஏமாற்றி விளையாடுவர். பெரும்பாலும் நம்பும் தன்மையுள்ள இந்த பொய்களால் ஏமார்ந்தவர்களை ஏப்ரல் ஃபூல் என்று அழைப்பர். உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்பட்டாலும், பிரான்சில் தான் இந்நாள் தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

இது ஒரு புத்தாண்டு தினம் என்ற வரலாறும் உண்டு. 16 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 ஆம் தேதியே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562 ஆம் ஆண்டில் அப்போதைய போப்பாண்டவரான 13 வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டு கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரிகோரியன் ஆண்டு கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய மக்கள் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முட்டாள் தினம் தோன்றியது என்று நம்பப்படுகிறது. அதேபோல் 1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையா முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட தினம்

இந்தியாவின் கரூவூலமாக செயல்படும் ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கொல்கத்தாவில் தனியார் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் 1949 ஆம் ஆண்டு இவ்வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டு இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பணப் பரிவர்தனைகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனமாக மாற்றப்பட்டது.

முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய ரிசர்வ் வங்கி, 1937 ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் நாணயங்கள் மற்றும் பணத்தை அச்சிடுவது, பழைய நாணயங்கள் மற்றும் பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று அழிப்பது போன்றவை ரிசர்வ் வங்கியின் பணிகளாகும்.

இது தவிர நாட்டில் அந்நிய செலாவணியின் மதிப்பை நிர்ணயித்தல், வங்கிகளை மேற்பார்வையிடல் உள்ளிட்ட பல செயல்பாடுகளையும் இது செய்து வருகிறது. ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றை கண்காணித்தும் வருகிறது.

இந்தியாவில் முதன் முறையாக 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்தார்.

2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வங்காரி மாதாய் அவர்கள் 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்தார்.

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனமானது 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

01-04-2016 இன்றையா இராசி பலன்கள்.!

01-04-2016 இன்றைய இராசி பலன்கள்
மேஷம் ராசிபலன்  1 Apr 2016
ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். ஊகங்கள் பேரழிவாக அமையும் - எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். வாக்குவாதங்கள், ஒப்புதல் இல்லாமையால் வீட்டில் சிறிது டென்சன் ஏற்படலாம். வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். நாளின் பிற்பகுதியில் ரிலாக்ஸ் பண்ணுங்கள். பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும் - மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்.. அதிர்ஷ்ட எண்: 7
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
ரிஷபம் ராசிபலன்  31 Mar 2016
இன்றைக்கு சுயநலவாதியை தவிர்த்திடுங்கள். அவர் டென்சனை ஏற்படுத்தக் கூடும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். உறவினர்கள் கொஞ்சம் டென்சனை ஏற்படுத்தலாம். நிலைமையை சமாளிக்க அமைதியாக இருங்கள். அவசரமாக ஏதும் முடிவெடுத்தால் மிகவும் வருத்தப்படுவீர்கள். தனிப்பட்ட வழிகாட்டுதல் உங்கள் உறவை மேம்படுத்தும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. இன்று உங்கள் திறுமண வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் உங்கள் கை மீறி செல்லும். அதிர்ஷ்ட எண்: 6
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
மிதுனம் ராசிபலன்  1 Apr 2016
புதியதாக எதையாவது கற்க முடியாத அளவுக்கு நீங்கள் வயதானவர் என சிலர் நினைக்கலாம் - ஆனால் அது உண்மையில்லை - உங்களுடைய ஆக்டிவான மற்றும் கூர்மையான புத்தியால் நீங்கள் புதியவற்றை எளிதில் கற்றுக் கொள்வீர்கள். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். மாலையில் குழந்தையுடன் சிறிது நேரத்தை இனிமையாகக் கழித்திடுங்கள். சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம். காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்களிடம் சொல்லப்படும் அலோசனைகளும் உங்களை பற்றி கூறப்படும் கருத்துக்களும் உங்கள் மூடை பாதிக்கக்கூடும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும். அதிர்ஷ்ட எண்: 5
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
கடகம் ராசிபலன்  1 Apr 2016
வாகனம் ஓட்டும்போது, குறிப்பாக வளைவுகளில் கவனமாக இருக்கவும். யாரோ ஒருவருடைய கவனக் குறைவு உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தவாம். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். உங்கள் குடும்பத்தின் உதவியால் தான் வேலையில் உங்களால் சிறப்பாக செயல் பட முடிகிறதென்று நீங்கள் உணர்வீர்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று காதல் செய்ய இனியான பொழுது உங்கள் இருவருக்கும் வாய்க்கும். அதிர்ஷ்ட எண்: 8
🎑🎑🎑🎑🎑🎑🎑🎑🎑
சிம்மம் ராசிபலன்  1 Apr 2016
உங்கள் உணவில் முறையான அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரேன் தலைவலி நோயாளிகள் மதிய உணவை தவறவிடக் கூடாது. இல்லாவிட்டால் தேவையில்லாமல் உணர்ச்சிபூர்வ அழுத்தம் ஏற்படும். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். இன்று பழைய துன்ப நிகழ்வுகளை மறந்து இன்பமான நாட்களை எண்ணி நீங்கள் இருவரும் கொஞ்சி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 7
☯☯☯☯☯☯☯☯☯
கன்னி ராசிபலன்  1 Apr 2016
உங்களின் பிரச்சினைகள் மன மகிழ்ச்சியை இன்று கெடுக்கும். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். வேலையில் பிரஸ்ஸர் குறைவாக இருக்கும் நாள். குடும்பத்தினருடன் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவீர்கள். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. பெற்றோரை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும். அதிர்ஷ்ட எண்: 5
☮☮☮☮☮☮☮☮☮
துலாம் ராசிபலன்  1 Apr 2016
மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. புதிய ஐடியாக்கள் பயன்தரும். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. மன ரீதியாக இணை பிரியாத ஜோடிகளான பின் உடல் ரீதியான நெருக்கம் மேலும் இன்பம் தரும். அதிர்ஷ்ட எண்: 7
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
விருச்சிகம் ராசிபலன்  1 Apr 2016
மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். தலையிடுவதை முடிந்தவரை குறைத்துக் கொளுங்கள். இல்லாவிட்டால் அது சார்புத்தன்மையை உருவாக்கும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் - பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். கடந்த பல நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் என்றால் இன்று அது குறைந்து இனிமையான நாளாக அமையும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது உங்களுக்கு இன்று தோன்றலாம் எனவே பொறுமை தேவை. அதிர்ஷ்ட எண்: 9
🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃
தனுசு ராசிபலன்  1 Apr 2016
பிறருக்கு எதிராக கெட்ட சிந்தனை இருந்தால் மனதில் டென்சன் ஏற்படும். இவை வாழ்வை வீணடிக்கும், திறமையை அழிக்கும் என்பதால் இதுபோன்ற சிந்தனைகளை விட்டொழித்துவிடுங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும் - ஆனால் ஆதரவாக அக்கறையாக நடந்து கொள்வார்கள். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். பங்குதாரர் வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் எழுத்துமூலமாக பதிவு செய்யுங்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். சுவையான உணவு, ரொமான்டிக்கான தருணங்கள் இதனை இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 6
🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿
மகரம் ராசிபலன்  1 Apr 2016
ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். கமிஷன்கள் - டிவிடெண்ட்கள் - அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை அப்செட் செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பயணம் - பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 6
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
மகரம் ராசிபலன்  1 Apr 2016
ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். கமிஷன்கள் - டிவிடெண்ட்கள் - அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை அப்செட் செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பயணம் - பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 6
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
கும்பம் ராசிபலன்  1 Apr 2016
தாயாகப் போகும் பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். இன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தையால் எரிச்சல் வரும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று உங்கள் துணையின் வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கும்! அதிர்ஷ்ட எண்: 4
🐇🐀🐖🐈🐕🐑🐏🐓🐇
மீனம் ராசிபலன்  1 Apr 2016
துறவி போன்ற ஒருவரி்ன் ஆசிர்வாதத்தால் மன அமைதி கிடைக்கும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. எதைச் செய்தாலும் பூரணமாக செய்வீர்கள் - நீங்கள் எவ்வளவு செயல்திறன் மிக்கவர் என்பதைக் காட்டி, உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
🐥🐺🐗🐴🦄🐞🐌🐣🐒
உங்கள் குறைகள் தீர..!
கல்வித்தடை பிரச்சனைகள் தீர பரிகார பூஜை...!
நீலசரஸ்வதி ஹயக்கிரிவர் தட்ஷிணாமூர்த்தி சிறப்பு ஹோம பரிகாரம் யந்திரம் வழங்கப்படும்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஸ்ரீ வித்யா உபாசகர்.
ஜோதிடர். புரோகிதர்.
மணிகண்ட ஷர்மா
Mobile 996225358
WhatsApp 9444226039
உங்கள் பிரச்சனை தீர அணுகவும்.

வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு உண்டு?

வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு உண்டு?

'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது நமது முன்னோர்களின் முதுமொழி. சங்க காலம் முதல் பொருள் தேடும் பொருட்டு தமிழர்கள் கடல் தாண்டியும் வியாபாரம் செய்துள்ளனர் என்பதற்கு பல புராண செய்திகள் உண்டு.

படித்தவர்கள் எல்லோருமா வெளிநாடு செல்கிறார்கள்! இல்லை, வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லோருமா படித்தவர்களாக உள்ளனர் என்றால் இல்லை என்பது தான் பதிலாக முடியும். அப்படியானால் வெளிநாடு செல்வதற்கு படிப்பு ஓர் தகுதி அல்ல என்பது தெளிவாகிறது. அப்படியானால் வெளிநாடு செல்வது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கு வேதத்தின் கணக்கு எனப்படும் ஜோதிடத்தின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

வெளிநாடு செல்லும் யோகம் :
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் 9 மற்றும் 12 வது இடத்தின் அதிபதிகள் பலம் பெற்றிருந்தால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

சந்திரன் பலம் பெற்று அதே 9 மற்றும் 12வது இடத்தின் அதிபதிகளும் பலம் பெற்றிருந்தால் அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும்.

9 மற்றும் 12 வது இடத்தின் அதிபதிகள் இணைந்து ஜல ராசிகள் என கூறப்படும் கடகம், விருச்சிகம், மீனம் போன்றவற்றில் அமையப் பெற்றால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்களில் 2 க்கு மேற்பட்ட கிரகங்கள் 9 மற்றும் 12 வது இடத்தில் பலமாக அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்கள் செய்யும் வாய்ப்பும், அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகங்கள் இருந்தாலும் அந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்தி நடைபெறுவது முக்கியமானதாகும். இந்த தசாபுக்தி காலங்களில் கோட்சார ரீதியாகவும் குரு, சனி போன்ற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக அமைந்தால் சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும்.
வெளிநாடு செல்ல பரிகாரங்கள் :
காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள முருகனான கந்தசாமி தானாகவே தோன்றிய சுயம்புவாகும். இக்கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கினால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

'ஓம் தும் துர்காயை நமஹ" என்ற இந்த மந்திரத்தை வீட்டில், ஒரு வெள்ளிக்கிழமை இரவு 108 முறை சொல்லி வந்தால் வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும்.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வந்தால் வெளியூர் யோகம் உண்டாகும்.

பித்ரு தோஷம் நீங்க..!

அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், எள்ளு ஆகியவற்றை கலந்து கொடுத்து வந்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

வால்மீகி முனிவர்

வால்மீகி முனிவர்

வால்மீகி முனிவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வட இந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவரது ஆசிரமம் உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பித்தூரில் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் சீதைக்கு இலவன் மற்றும் குசன் எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.

வால்மீகி வரலாறு :
வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். ஒருமுறை நாரத முனிவரிடம் கொள்ளையிட முயன்றபோது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டிவைத்து விட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ அந்த உறவினரிடமெல்லாம், தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் நீங்கள் பங்கு கொள்வீர்களா? என வினாவினார். அவர்கள் இதற்கு மறுப்பு கூறினார்கள்.

"இதுதான் உலகம், யாருக்காகக் கொள்ளை அடித்தேனோ அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கேற்கப்போவதில்லை' என்று உணர்ந்து முனிவரிடம் சரணடைந்து, அவரது வார்த்தைப் படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.

எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த இளைஞன் நாளடைவில் தன்னைச் சுற்றிலும் கரையான் புற்று கட்டியதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்து தியானத்தில் ஆழ்ந்தார். கடைசியில் 'ஓ முனிவனே எழுந்திரு!' என்ற குரல் அவனை எழுப்பியது.

இவரே, 'நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன்' என்று பதில் கூற, 'இனி நீ கொள்ளைக்காரன் அல்ல, கரையான் புற்றிலிருந்து தோன்றியவர் (வால்மீகி) என்று வழங்கப்படுவாய்' என்று அக்குரல் கூறியது.

இவர் 700 ஆண்டுகள், 32 நாட்கள் உயிர்வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் எட்டிக்குடு எனும் ஊரில் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.
வால்மீகி இயற்றிய இராமாயணத்தின் சிறப்புகள் :

வால்மீகி இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூலாக கருதப்படுகிறது.