Monday 21 March 2016

22-3-2017 இன்றைய இராசி பலன்

22-3-2017 இன்றைய இராசி பலன்
மேஷம் ராசிபலன்  22 Mar 2016
உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது - அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் - உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால் - ஏமாற்றம் ஏற்படும் சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார். அதிர்ஷ்ட எண்: 4
🌳🌳🌳🔴🔴🔴🔴🔴🔴
ரிஷபம் ராசிபலன்  22 Mar 2016
உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். ஒரே மாதிரியான வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு இன்று நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார். அதிர்ஷ்ட எண்: 3
🏀🏀🏀🏀🏀🏀🌇🏀🏀
மிதுனம் ராசிபலன்  22 Mar 2016
குடும்பப் பிரச்சினைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இருவரும் காதலிக்கும் இயல்புள்ள தம்பதியினர் என்பதை காட்டவும் உறுதிப்படுத்தவும் சிறிது நேரம் செலவழியுங்கள். வீட்டில் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் வைப்ரேசன்களை உங்கள் குழந்தைகளும் பெறுவார்கள். ஒவ்வொருவருடனும் நீங்கள் கலந்து பேசும்போது சரளமாகவும் சுதந்திரமாகவும் பேச இது வாய்ப்பளிக்கும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்பத்தினர் - குழந்தைகள் மறறும் நண்பர்களுடன் செலவிடும் நேரம், உங்கள் சக்தியை புதுப்பிக்க முக்கியமானதாக இருக்கும். ஒருதலைக் காதல் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். இன்று அபீசில் விசித்ரமான நாளாக இருக்கும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு எதிராக இருப்பது போல தோன்றினாலும் அது உண்மையல்ல. வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 1
🌇🌇🌇🌻🌇🌇🌇🌇🌇
கடகம் ராசிபலன்  22 Mar 2016
சாத்தியமில்லாத தேவையற்ற சிந்தனைகளில் சக்தியை வீணடிக்காதீர்கள், சரியான வழியில் அதை பயன்படுத்துங்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். மகளின் நோய் உங்களை அப்செட் ஆக்கலாம். அவளுடைய நோயில் இருந்து விடுபடுவதற்கு அவளின் எண்ணத்தை மேம்படுத்த அன்பு காட்டுங்கள். நோயை குணமாக்கும் தன்மையில் அன்பின் சக்தி குறிப்பிடத்தக்க பலனைத் தரும். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. திருமண வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, இன்று நீங்கள் என்றுமே நினைத்து மகிழும்படியான பொன்னான நாளாக அமையப்போகிறது. அதிர்ஷ்ட எண்: 5
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
சிம்மம் ராசிபலன்  22 Mar 2016
சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. சுற்றி பாருங்கள் அனைத்தும் பிங்க் நிறத்தில். உங்களுடன் இதுவரை நட்புடன் பழகாத ஒருவர் இன்று உங்களிடம் அன்பாக பேசுவார் பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது. அதிர்ஷ்ட எண்: 3
⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽
கன்னி ராசிபலன்  22 Mar 2016
கடந்த காலத்தைய மோசமான முடிவுகள் இன்று உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் - நீங்கள் ஆதரவின்றி நிற்பதாக, அடுத்து என்ன முடிவெடுக்க முடியாதவராக இருப்பீர்கள் - மற்றவர்களின் உதவியை நாடுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் வீட்டைச் சுற்றி உடனடியாக சில சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவருடன் பிக்னிக் சென்று மதிப்புமிக்க நினைவுகளை மறுபடி கொண்டு வாருங்கள். பிசினஸ் மீட்டிங்குகளில் அதிகம் பேசுபவராகவோ உணர்ச்சிவயப்படவோ செய்யாதீர்கள் - உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் நற்பெயரை சீக்கிரம் கெடுத்துக் கொள்ளக் கூடும். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்.. அதிர்ஷ்ட எண்: 1
🔔🔔🔔🇮🇳🔔🔔🔔🔔🔔
துலாம் ராசிபலன்  22 Mar 2016
குழந்தைப்பருவ நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். அது தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும். குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டோமே என்ற எண்ணமே உங்கள் கவலை அதிகரிப்பதற்கான காரணமாக அமையலாம். ஊகங்களால் லாபம் கிடைக்கும். பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் திருமண வாழ்வை பாதித்துவிடும். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்: 4
☯🌠☯☯☯☯☯☯☯
விருச்சிகம் ராசிபலன்  22 Mar 2016
உள்ளுரம் குறைவால் ஆரோக்கியம் கெடும். சில கிரியேட்டிவ் வேலைகளில் ஈடுபாடு காட்டி நோயை எதிர்க்க தயார்படுத்திக் கொள்வது நல்லது. பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். குடும்பத்தினர் - குழந்தைகள் மறறும் நண்பர்களுடன் செலவிடும் நேரம், உங்கள் சக்தியை புதுப்பிக்க முக்கியமானதாக இருக்கும். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். நீங்கள் இதுவரை செய்ய விரும்பிய வேலை இன்று ஆபீசில் உங்களை தேடி வரும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 5
🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑
தனுசு ராசிபலன்  22 Mar 2016
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை பிட்டாக வைத்திடுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். எதையும் முடிவு செய்வதற்கு முன்பு குடும்பத்தினரின் கருத்தையும் கேளுங்கள். நீங்களே ஒருதலைபட்சமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். சிறந்த ரிசல்ட்கள் பெற குடும்பத்தில் இணக்கத்தை உருவாக்குங்கள். ஜன்னலில் பூக்களை வைப்பதன் மூலம் உங்கள் காதலைக் காட்டுங்கள். கடின உழைப்பும் சரியான முயற்சிகளும் நல்ல பலன்களைத் தரும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இன்று உங்கள் திருமண வாழ்க்கை எத்தனை இனிமையானது என்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🏀
மகரம் ராசிபலன்  22 Mar 2016
இன்று களைப்பாக உணர்வீர்கள். சிறிய விஷயங்களுக்கு அப்செட் ஆவீர்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். குடும்ப பொறுப்புகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். உங்கள் மனதிற்கினியவரிடம் கருத்தை இன்றே கூறுங்கள், நாளை என்பது தாமதமாக இருக்கலாம். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலையை பிய்த்து கொள்வீர்கள். எனவே மன அமதிக்கு தியானம் செய்யுங்கள். அதிர்ஷ்ட எண்: 2
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
கும்பம் ராசிபலன்  22 Mar 2016
தகராறு செய்யும் உங்கள் நடத்தையால் பகைவர்களின் பட்டியல் நீளும். நீங்கள் பின்னர் வருந்தக் கூடிய அளவுக்கு மற்றவர்கள் கோபம் கொள்ளாதிருக்கட்டும். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் - எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். இன்றைக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக் கூடாது என்பதை உங்கள் குடும்பத்தினர் முடிவெடுக்க அனுமதிக்காதீர்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9
⚾⚾⚾⚾⚾⚾🏐⚾⚾
மீனம் ராசிபலன்  22 Mar 2016
சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குழந்தைகளை சமாளிப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவீர்கள். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்! சகாக்களும் சீனியர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதால் அலுவலக வேலை சூடுபிடிக்கும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். ஒரு வெளி நபர் உங்கள் இருவருக்கும் நடுவில் சண்டை மூட்டிவிட முயற்சி செய்வார். ஆனல்ல் நீங்கள் அதற்க்கு இடம் கொடுக்க மாட்டீர்கள். அதிர்ஷ்ட எண்: 7
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஜாதகம் பார்க்க. ஜாதகம் கணிதம். திருமணபொருத்தம் பார்க்க. எண்கணிதம். ராசிரத்தினம் பார்க்க அணுகவும். ராகு கேது. செவ்வாய். சுக்கிரன். சனி தோஷ நிவர்த்தி  செய்து தரப்படும். திருமணத்தடை. புத்திர பாக்கியம் இன்மை. உத்தியோக தடை. கல்வித்தாடை. சொந்த வீடு அமையாமை பூமி  தோஷம். மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
புரோகிதம் :-
கணபதி, ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ ஸுதர்ஸன, நவக்கிரக ஹோமம். கிரஹப்பிரவேசம். ஆயுஷ்ய ஹோமம், திருமணம், ருது சாந்தி, நாமகரணம், அனைத்து பூஜைகளும் சிறந்த முறையில் நடத்தித் தரப்படும்.
வாக்கிய கனித பிரசன்ன ஜோதிடர். புரோகிதர். ஸ்ரீ வித்யா உபாசகர். மணிகண்ட ஷர்மா.
1/267, முகப்பேர் கிழக்கு. சென்னை
Mobile 9962225358.
WhatsApp  No  9444226039
http://neelajothidam.blogspot.i
E-mail :
manisharmajothidam@gmail.com
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பஞ்சாங்கம்
செவ்வாய்க்கிழமை 22
Tuesday, March 22, 2016
ராகு காலம்: பிற்பகல் 3.00 - 4.30
எம கண்டம்: காலை 9.00 - 10.30
நல்ல நேரம்: காலை 8 - 9 மாலை 5 - 6

மன்மத வருடம், பங்குனி 9ம் தேதி. மகர லக்ன இருப்பு 7.18 சூர்ய உதயம்: 6.18. கரணம்: 7.30 - 9.00 நக்ஷத்ர யோகம்: சித்த/அமிர்த யோகம். சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

திதி: சதுர்தசி பிற்பகல் 3.52 வரை, பிறகு பெளர்ணமி. நட்சத்திரம்: பூரம் மாலை 4.50 வரை, பிறகு உத்திரம்.
குளிகை: 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

இன்றைய விசேஷம்
ஹோலிப் பண்டிகை. பழனி பாலதண்டாயுதபாணி, இராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் தலங்களில் திருக்கல்யாண வைபவம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். நாங்குனேரி வானமாமலைப் பெருமாள் தங்கத் தேரோட்டம். மயிலம் திருத்தேர். காஞ்சி ஏகாம்பரநாதர் ருத்ரபாத தீர்த்தம் இரவு திருக்கல்யாணம். திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி மஹா அபிஷேகம் திருக்கல்யாணம், பட்டுக்கோட்டை நாடியம்மன் காப்புக் கட்டல்.

No comments:

Post a Comment