Sunday 6 December 2015

ஜாதகம் கணிக்க

ஜோதிடர் : பாளையங்கோட்டை,  மணிகண்ட ஷர்மா


பாளையங்கோட்டை,  மணிகண்ட ஷர்மா.   முறையாக  அனுபவத்தில் ஜோதிடம் பாடம் கற்றுள்ளேன்.  தாமிரபரணி நதிபாயும் நெல்லையப்பர் அனுகிகத்தாலும் இறைவனின் ஆசீர்வாதத்தாலும்,   ஜோதிட ஞானம் பெற்றேன்.   வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றேன். இதன் மூலம் புரோகிதம். செய்து வருகிறேன்.   நான், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  Diploma  & Astrology  படித்துள்ளேன்.   தினப் பலன், மாத பலன்கள், திருமண பொருத்தம், நியூமராலஜி என்ற எண்ணியல் பெயர்ப் பலன்களைச் சொல்லி வருகிறேன்.  இணைய தளம், இமெயில், WhatsApp, போன், மூலம் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறேன்.   பல குடும்பங்களுக்கு ஜோதிட  ஆலோசனைகளை வழங்கி வருகிறேன் அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளேன்.                   
அது மட்டும் அல்லாது  WhatsApp-ல் தினசரி பஞ்சாங்கம் அனுப்பிவருகிறேன்.

ஜாதகம் கணிக்க (HOROSCOPE) ஆறு விஷயங்கள் தேவையான தகவல்கள்
உங்களுக்கோ, அல்லது உங்கள் நண்பர்களுக்கோ பிறந்த ஜாதகம் கணிக்க வேண்டுமென்றால், கீழ்க்கண்ட விபரங்கள் மட்டும்தான் தேவையனது.
"ஜனனி ஜன்ம செளக்யானம், வர்த்தனி குல சம்பதம் பதவீம் பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா"
    ஒவ்வொரு ஜாதகத்தின் தொடக்கத்திலும் இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கும். இதன் பொருள் யாதெனில் இந்த ஜன்மத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மை, தீமைகள் அவன் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிரம்மாவால் கணிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அது ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில் சங்கேதமாக குறிக்கப்பட்டுள்ளது.
    ** இராசி மண்டலம் பூமியை சுற்றியுள்ள 360 பாகை சுற்றளவுள்ள கற்பனையான 18 பாகை அகலமுள்ள பகுதியாகும். இதன் மையத்தில் ecliptic எனப்படும் சூரியனின் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இராசி மண்டலம் 30 பாகை அளவுள்ள 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருசிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியனவாகும். இந்த 12 ராசிகளே ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளாகும். ஒருவர் பிறக்கும் போது உள்ள கிரக நிலைகள் ராசி கட்டத்தில் குறிக்கப்படுகிறது. உதரணத்திற்கு ஒருவர் பிறக்கும்போது சூரியன் 70 பாகையில் இருந்தால் அது மிதுன ராசியில் 10 பாகை வரை உள்ளது. (30 பாகை மேஷம் + 30 பாகை ரிஷபம் முடிந்து மிதுனத்தில் 10 பாகை). மேலும் இராசி மண்டலம் 13.3333 பாகை அளவுள்ள 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் பிறக்கும்போது கீழ்வானத்தில் (Eastern horizon) உதயமாகும் இரசியே ஜனன லக்கினமாகும். பூமி தன்னை தானே சுற்றிகொள்வதால் உதய ராசி மாறிக்கொண்டே இருக்கும். இது ஜாதகத்தில் "ல" என்று குறிக்கப்படும். லக்கினம் மிக முக்கியமாகும். லக்கினமே ஜாதகத்தில் முதல் வீடு / இலக்கின பாவமாகும். சந்திரன் இருக்கும் ராசியே ஜன்ம ராசியாகும். சந்திரன் இருக்கும் நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாகும்.**

    1.  ஜாதகர் பெயர்.
    2.   தந்தை பெயர்.
    3.  தாயர் பெயர்.
    4.  பிறந்த தேதி.
    5.  பிறந்த நேரம்.
    6.  பிறந்த  ஊரின் பெயர் கிராமமாக இருந்தால் அருகில் உள்ள அதாவது 30 கிலோ மீட்டர் சுற்றுக்குள் உள்ள பெரிய ஊரின் பெயர்  
City or Town னின் பெயர் வேண்டும்
            இவை இருந்தால் மட்டுமே ஒரு ஜாதகத்தை கணிக்க   இயலும். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் சில வித்யாசங்கள் உண்டு.

      அதாவது ஒரு ஜாதகம் வாக்கிய பஞ்சாங்க படி (முன்னோர்கள் ஞான திருஷ்டியால் எந்த உபகரண உதவியும் இல்லாமல எழுதியது) கணித்த ஜாதகத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கம் (ராஷ்ட்ரிய பஞ்சாங்க சேவை சங்கம்) என்ற அரசுத்துறை கணித்த தொலை நோக்கி கருவிகள் மற்றும் நவீன விண்வெளி ஆராய்ச்சி துறை உதவியுடன் கணிக்கப்பட்டது.) மூலம் கணித்த ஜாதகதிற்கும் ஒரு பத்து அல்லது இருபது நாள் திசை புக்தி விபரங்கள் வித்தியாசப்படும்.

    உதாரணம் செய்திதாள்களில் சனி பெயர்ச்சி, குருபெயர்ச்சி போன்றவை ஒரு சாரர் சொல்லும் பெயர்ச்சி தினமும் மற்றொரு சாரர் சொல்லும் பெயர்ச்சி தினமும் குறைந்தது மூன்று மாத வித்தியாசத்துடன் இருக்கும்.

     ஜோதிட கணிதம் மிக துல்லியமான கணிதங்களை கொண்டது. பாகை, கலை, விகலை, நவாம்சம், பாவம், திரிகோணம், துவதாம்சம், சப்தாம்சம், தசை, புக்தி, அஷ்டவர்க்கம், என பல கணிதங்களை வினாடி சுத்தமாக கணிதம் செய்ய வேண்டி உள்ளது. ஆக நமக்கு தேவையான கணிதத்திற்கு உகந்த பஞ்சாங்கம் வேண்டும்.

குறிப்பு : உங்கள் ஜாதகம் கணிக்க வாக்கிய பஞ்சாங்கம்.
உங்கள் ஜாதகம் கணிக்க திருக்கணித பஞ்சாங்கமா என்பதை தெளிவான மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

     1.  இராசிச் சக்கரம்,
     2.  நவாம்சச் சக்கரம்,
     3.  பாவச்சக்கரம்,
     4.  திரிகோணம்,
     5.  பிறந்த திசைகள்
     6.  தாசாபுத்திகள்,
     7.  அஷ்டவர்க்கம்,
     8.  நட்சதிதிர அதிபதி தன்மை
    9.  நட்சத்திர விபரம்
    10.           ராசியின் தன்மைகள்
    11.           நவகிரகப் பாத ஸாரம் 
    12.           எண் கணிதம்
ஜாதகத்தில் இப்படி எல்லா விபரங்களுமே கிடைக்கும்!
  ஜாதகம் கணிக்க கட்டணம் ரூ 500 மட்டும்
பெறப்படுகிறது ஜாதகம் கணிப்பது மட்டும் அல்லாது அதன் முழுப்பலன் செல்லிதருக்றேன்.

தொடர்பு கொள்ள
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
G. V. மணிகண்ட ஷர்மா
1 / 267, ஜெ. ஜெ. நகர்
முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600 037
தமிழ்நாடு
Cell : 9962225358 - 9444226039
7092103071 - 7092103072

 * * * * * * * * * * * * * * * * * * * *
Contact
Sri Bala’s Thirupura Sunthari Jothidam
G.V. Manikanda Sharma
1 / 267,  J. J.  Nagar
Magappair East,
Chennai – 600 037
Tamil Nadu
Cell : +91 9962225358  -  +91 9444226039
+91 7092103071 - +91 7092103072
www.neelajothidam.blogspot.in


No comments:

Post a Comment