Tuesday 14 October 2014

பாரம்பரிய மருத்துவம் வயிற்றில் வாயு சேர்தல், மூலம், மூச்சிரைப்பு,



Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931

காட்டுக்கொளிஞ்சை
இது இந்தியா முழுவதும் சாலைகளின் ஓரங்களில் வளரக்கூடிய ஒரு செடி. சுமார் 30 முதல் 60 செ.மீ உயரம் வரை வளர்ந்து நிறைய கிளைகளுடன் நிற்கக் கூடியது. மலர்கள் சிவப்பு அல்லது ஊதா நிறம் உடையவை. இந்த செடியின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவகுணம் வாய்ந்தவை.
கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய இந்த செடி உடலில் சூட்டை அதிகப்படுத்தும். குடல் கிருமிகளை வெளியேற்றும். நல்ல ஒரு ஜீரணகாரி. மலத்தை இளக்கி சிறுநீரையும் நன்றாக வெளியேற்றும். பெண்களின் கருப்பையை நன்கு உறுதிப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உள்ளழற்சி மூட்டுகளில் தென்படும்பொழுது இதை மருந்தாக உட்கொள்ளலாம். இரத்தக்கசிவை நிறுத்தக்கூடியது. குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும். இதன் வேர் அழற்சிநோயை நீக்கக்கூடியது. தோல் உபாதைகளை குணப்படுத்தக் கூடியது. கழுத்தில் ஏற்படும் நெறிகட்டு உபாதையை குணப்படுத்தும். யானைக்கால் உபாதையில் இதன் பயன்பாடு போற்றப்படுகிறது. வயிற்றில் வாயு சேர்தல், மூலம், மூச்சிரைப்பு, சோகை, கல்லீரல், மண்ணீரல் வீக்கம், முகப்பருக்கள், பற்களில் ஏற்படும் வலி மற்றும் ஈறு அழற்சி உபாதைகளிலும் காட்டுக்கொளிஞ்சை நல்ல மருந்தாகப் பயன்படும். சிபிலிஸ் எனப்படும் பிரங்கநோயில் இதன் பயன்பாடு உள்ளது. எலி விஷத்தில் இதன் விதைகள் பயன்படுகின்றன. அஷ்டாங்கஹ்ருதயம் உத்தரதந்த்ரம் 30 வது அத்தியாயத்தில் இந்த செடியின் வேரை அரிசி அலம்பிய நீரில் அரைத்து பிழிந்து மூக்கில் இரண்டு நான்கு சொட்டு விடுதல், அரைத்து உடலில் பூச்சாக இடுதல் போன்றவற்றைச் செய்தால் தோலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் விஷஉபாதைகள், கிருமித்தொற்று ஆகியவை நீங்கியவை என்று காணப்படுகிறது. இந்த செடியின் வேர் சூரணத்தை கடுக்காய் சூரணத்துடன் சம அளவு கலந்து சுமார் ஒரு டீஸ்பூன் வெந்நீருடன் கலந்து குடிப்பதால் வயிற்றில் பந்து போல் சுருண்டுகொண்டு வலியை ஏற்படுத்தும் வாயு உபாதை நீங்கிவிடும் என்று பாவப்ரகாசர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இந்த செடியினுடைய விதைகளை மோருடன் கலந்து குடிப்பதால் எலி விஷத்தினால் ஏற்படும் உபாதைகள் நீங்கிவிடுமென்றும் அஷ்டாங்கஹ்ருதயம் கூறுகிறது. காட்டுக்கொளிஞ்சையின் வேரை பாலுடன் அரைத்து பிழியப்பட்ட சாற்றை தொடர்ந்து மூக்கினுள் விட்டு வந்தால் மூடகர்ப்பம் எனப்படும் நிலை கர்ப்பஸ்த்ரீக்கு ஏற்படாது என்று வைத்யமனோரமாவில் காணப்படுகிறது.  இதன் வேரை இடித்து பொடியாக்கி பல்துலக்குவதற்கு முன் பற்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தால் பல்சம்பந்தமான நோய்கள் விலகிவிடுவதாகவும், உபலுறவின் போது வெள்ளை நிற காட்டுகொளிஞ்சையின் வேரை வாயில் அடக்கிக் கொண்டாலும், தவிடு ஊறவைத்தத் தண்ணீருடன் அரைத்து முகத்தில் பூசிக்கொண்டாலும் விந்து வெளியேற்றம் விரைவில் ஏற்படாது என்றும் வைத்யமனோரமாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com
.

No comments:

Post a Comment