Saturday 25 October 2014

பாரம்பரிய மருத்துவம் காய்ந்த பூவை நெய்விட்டு வதக்கி உப்பு, சுட்டபழம்புளி




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


வேம்பு
நடுத்தரமாக அல்லது சற்றே உயரமாக வளரக்கூடிய வேப்பமரம் சுமார் 15 – 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது இதனுடைய பட்டை அடர் சாம்பல் நிறத்துடன் கூடிய பட்டையை உடையது. இலைகள் ஓரங்களில் ரம்பம்போல் காணப்படும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறம் குலைகளாகத் தொங்கும். வேப்பமரத்தின் பட்டை, இலைகள், பூக்கள், விதைகள் மற்றும் எண்ணெய் மருத்துவகுணம் வாய்ந்தவை.
பட்டை கசப்பும், துவர்ப்பும் நிறைந்தது. குளிர்ச்சியானது. அது காய்ச்சிய தண்ணீரில் விரல் விட்டு சிலுப்ப நுரை வரும். அந்த நுரையை உடலில் அரிப்புள்ள பகுதியில் பூசினால் அரிப்பு நீங்கிவிடும். கிருமிகளை அழிக்கும். கல்லீரலுக்கு நல்ல டானிக்காக பயன்படும். பித்தம் அதிகரித்த நிலையில் இதன் பட்டை பயன்படும். தோல் உபாதைகள் சிரங்கு, படை, வெண்குஷ்டம், மலேரியா காய்ச்சல், புண், எரிச்சல், சர்க்கரை உபாதை, மூலம், மேக புண் ஆகியவற்றை ஆற்றக்கூடிய சக்தி அதற்குண்டு.
வேம்பின் இலைகள் கண்களுக்கு நல்லது. இலைக் கொழுந்துகளை ஓமத்துடன் சாப்பிட வயிற்றிலுள்ள பூச்சிகள் மடிந்து மலத்துடன் வெளியேறும். குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் மலேரியா காய்ச்சலுக்கு இலைக் கஷாயம் சாப்பிட மிகவும் நல்லது.
வேப்பமரத்தில் உணவாகப் பயன்படுவது பூ மட்டுமே. மற்றவை மருந்தாகும். வஸந்தகாலத்தில் இதன் பூ கிடைக்கும். புத்தாண்டிற்காக இயற்கை தரும் பரிசு. புத்தாண்டு தினத்தன்று இதனைச் சேர்க்கத் தொடங்குவர் பூவைப் பச்சையாகவும் காய்ந்ததாகவும் உபயோகிக்கலாம். காய்ந்த பூ நாட்பட வைத்திருக்கக் கூடியதே. பச்சையான பூவை வறுத்தும் காய்ந்ததை நெய்யிலும் எண்ணெயிலும் பொரித்தும் சேர்ப்பர் சுவையில் கசப்பானாலும் மற்றவற்றைச் சுவைத்து உண்ணச் செய்யும். அருசி அன்னத்வேஷம், எதுக்களிப்பு, வாந்தி, பித்தத்தால் தலைசுற்றுதல், எண்ணெய் அஜீர்ணத்தால் ஏற்படும் தலைசுற்றல், ஏப்பம் இவற்றை வேப்பம்பூ தணிக்கும் நெய் அல்லது எண்ணெயில் பொரித்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். கீரிப்பூச்சி, ஆஸனவாய் அரிப்பு, முதலியவற்றில் மிகவும் ஏற்றது.
காய்ந்த பூவை நெய்விட்டு வதக்கி உப்பு, சுட்டபழம்புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவை சேர்த்துத் துவையலாக்கிச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். துவரம் பருப்பை வறுத்து வேதவைத்து வடித்த நீரில், சுட்ட புளியோ, எலுமிச்சம் பழச்சாறோ சேர்த்து மிளகோ மிளகாயோ கூட்டி ரஸம் வைத்துப் பொரித்த வேப்பம்பூவை அதில் கலக்கிச் சாப்பிட வாய் இலைத்துப்போதல், அருசி, வாந்தி ஏப்பம் முதலியவை நீங்கும் கடும் நோய் நீங்கியபின் இரைப்பை சுறுசுறுப்படைய ஏற்றவை.
பத்திய உணவு  - பச்சையாகச் சேகரித்து லேசாக வறுத்துப் பொடித்து ஜலத்தில் வெல்லத்துடன் வேகவைத்துப் பச்சடி செய்து சாப்பிட ஜீர்ணத்திற்கும் வயிற்றுப் புண்ணை ஆற்றவும் ஏற்றது.
விதைகள் கசப்பானவை. சூட்டைக் கிளப்பும். உள்ளுக்குச் சாப்பிட்டால் பேதியாகும் இதுவொரு நல்ல வலிநிவாரணீ. காசநோயை குணப்படுத்தக் கூடியது. புண்ணை ஆற்றும் கருப்பையை தூண்டிவிட்டு குழந்தை பிறப்பை எளிதாக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உள்ளுக்குச் சாப்பிடுவது குணம் தரும்.
வேப்பெண்ணெய் கசப்புச் சுவையுடையது. குடல் கிருமிகளை வெளியேற்றும். சூடாக்கி மேல் தேய்க்க உடல் வலியை குணப்படுத்தும்.வாததோஷத்தின் சீற்றத்தை அடக்கும். தோல் உபாதைகளுக்கு நல்லது. தொடை இடுக்கில் ஏற்படும் அரிப்பை அகற்றும். கடுமையான மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும். குஷ்டநோய்க்கு நல்லதொரு நிவாரணியாக இருக்கும்

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

.

No comments:

Post a Comment