Friday 17 October 2014

பாரம்பரிய மருத்துவம் செம்பருத்தி இலை விட, பூவின் மொட்டுக்கு சக்தி அதிகம்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


செம்பருத்தி


இதன் வேர், இலை மற்றும் பூக்கள் பயன்பாட்டிற்கான பகுதிகளாகும். இலைகள் குளிர்ச்சியானவை. தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து காலை மாலை வெறும் வயிற்றில் சிறிய அளவு சாப்பிட்டு வர, மலமிளகி வெளியேறும். சிலருக்கு இரண்டு மூன்று முறை பேதியாகவும் கூடும். குடலை மிருதுவாக்கி அதன் வேலைத்திறனை மேம்படுத்தும். இரத்தத்திலுள்ள பெருவாரியான கப பித்த தோழங்களினால் ஏற்படும் உபாதைகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. உடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும். கல்லீரல் உபாதைகளை நீக்கி, சுறுசுறுப்படையச் செய்யும். உடல் தளர்ச்சியை நீக்கி, உற்சாகப்படுத்தும். உட்புறப்பகுதிகளில் ஏற்படும் சீழ்க்கட்டிகளை உடைத்து வெளியேற்றும். இலைகளை அரைத்துத் தோலில் பூசித் தேய்த்துக்குளிக்க படை, சொறி, சிரங்குகளை அகற்றி விடும்.
செம்பருத்தி இலைகளை விட, பூவின் மொட்டுகளுக்கு சக்தி அதிகம். நறுமணத்துடன் கூடிய அதை வாயில் போட்டு மென்றால் கசப்பாக இருக்கும். குளிர்ச்சியானது. சிறுநீரக எரிச்சலை போக்கக் கூடியது. மூல உபத்திரவத்திற்கு மிகவும் நல்லது. கருப்பை மற்றும் மாதவிடாய் உபாதைகளுக்கு நல்ல தீர்வைத் தரக் கூடியது.
செம்பருத்திப்பூ சுவையில் துவர்ப்பும், இனிப்பும் கலந்த்து. குளிர்ச்சி தரக் கூடியது. எளிதில் ஜீரணமாகக்  கூடியது. வறட்சி நீக்கி உடலுக்கு எண்ணெய் படையைத் தரக் கூடியது. குடல், கருப்பை, தொண்டை இவற்றில் புண்கள் ஏற்பட்டால் 1 -3 பூக்களை அரைத்துப் பாலில் கலக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் புண்கள் ஆறிவிடும்.
மலத்துடன் ரத்தம் கலந்து செல்லுதல், ரத்த மூலம், மாதவிடாய் காலத்திற்குப் பின் தொடர்ந்து சில நாட்களுக்கு காணும் ரத்தப் பெருக்கு, தொண்டை மற்றும் மூக்கு வழியாக ரத்தக்கசிவு ஏற்பட்டு, எச்சில் துப்பும் போதும் மூக்கைச் சிந்தும் போதும் ரத்தம் காணுதல் போன்ற நிலைமைகளை குணப்படுத்த பூவின் மொட்டைப் பாலில் அரைத்துச் சாப்பிடுவது நல்லது 

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

.

No comments:

Post a Comment