Thursday 23 October 2014

பாரம்பரிய மருத்துவம் டி.என்.ஏ இரட்டைச் சுருளி வடிவம் உடையது




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931

நான்மைச சுருளி டி.என்.ஏ. கண்டுபிடிப்பு
மரபியல் தகவல்களைக் கடத்தும் டி.என்.ஏ இரு இழை அமைப்பான இரட்டைச் சுருளி வடிவத்தை மட்டும் கொண்டது என்றே இதுவரையில் அறியப்பட்டு வந்தது, ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வில் ஈடுபட்டதன் பயனாக, கேம்பிரிட்சு பல்கலைக்கழக அறிவியலாளர்கள் புற்றுநோய் உயிரணுவில் நான்கு இழை அமைப்பான நான்மைச் சுருளி டி.என்.ஏ உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.

    டி.என்.ஏ  (DNA) என்பது பெரும்பான்மை உயிரினங்களினது தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். ஒரு உயிரினத்தின் உயிரணுவில் அமைந்துள்ள டிஎன்ஏ அந்த உயிரணுவில் எவ்வகையான புரதம் தொகுக்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. தொகுக்கப்படும் புரதங்கள் அந்த உயிரணுவின் தொழிற்பாட்டைத் தீர்மானிக்கின்றது. பெற்றோர் உயிரிகளில் இருந்து சந்ததிக்கு டி.என்.ஏ கடத்தப்படுகின்றது.

டி.என்.ஏ இரட்டைச் சுருளி வடிவம் உடையது எனும் அறிக்கை சேம்சு வாட்சன் மற்றும் பிரான்சிசு கிரிக் என்பவர்களால் 1953இல் நேச்சர் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. இது ஏணி ஒன்றைச் சுருட்டி விட்டாற்போல் அமைந்திருக்கும் வடிவமாகும். இவ்வறிக்கை வெளியாகி 60 ஆண்டுகள் கடந்த இந்நாட்களில் இங்கிலாந்து கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சங்கர் பாலசுப்பிரமணியன் அவர்களின் செய்முறைச்சாலையில் நான்கு இழைகளைக் கொண்ட நான்மைச் சுருளி அமைப்புடைய டி.என்.ஏ புற்றுநோய்க் கலங்களில் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கண்டுபிடிப்பு புற்றுநோய்கள் பற்றிய ஆய்வில் புதிய தீர்வுகள் தரவல்ல ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. புற்றுநோயை முளையிலேயே கிள்ளி எறிதல்இப்புதிய கண்டுபிடிப்பின் மூலம் சாத்தியமாகலாம்.
ஒரு உயிரணு குறிப்பிட்ட மரபணுவமைப்பை அல்லது தொழிற்பாடற்ற நிலையைக் கொண்டிருக்கையில் இந்த டி.என்.ஏ அமைப்புகள் தோன்றியிருக்கலாம்என பேராசிரியர் சங்கர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இவற்றைக் கட்டுப்படுத்துவது நோய்களை எதிர்கொள்வதற்கு ஒரு புதிய பாதையை உருவாக்கலாம் என்றும் அறிவியலாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
G-quadruplex என அழைக்கப்படும் இந்த நான்மைச்சுருளி டி.என்.ஏ குவானின் எனும் இணைதாங்கி மூலக்கூறை முதன்மையாகக் கொண்டது. ஒரு டி.என்.ஏயில் நான்குவகை இணைதாங்கி மூலக்கூறுகள் உள்ளன. இரட்டைச் சுருளி வடிவத்தில் குவானின் சைட்டோசினுடனும் அடினின் தைமினுடனுமாக (guanine-cytosine and adenine-thymine) சோடி சேர்ந்து காணப்படுகின்றன.

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com




No comments:

Post a Comment