Friday 17 October 2014

பாரம்பரிய மருத்துவம் பலாப்பழத்தின் வேர்கள், இலைகள், பழங்கள், விதைகள்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


கோடைக்கு உகந்த பலாப்பழம்
பலாப்பழத்தின் வேர்கள், இலைகள், பழங்கள், விதைகள், மரக்கட்டை மற்றும் வடியும் பால் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. வேர்கள் பேதியை நிறுத்தும் தன்மையுடையவை. இலைகள், ஜ்வரம், கட்டிகள், புண்கள், தோல் வியாதிகள், பித்த வாயுவின் சீற்றத்திலும் பயன்தருபவை. இதன் பிஞ்சுக்காய் வேக வைத்து கறிகாயாக சமைத்து உண்டால் நாவற்சி நீங்கி, பித்தத்தையும் குறைக்கும். அதிக அளவில் சாப்பிட பசி மந்தித்து வயிற்று வலி உண்டாகும். முற்றிய காய் ஜீரணமாக மிகவும் தாமதமாகும். உடலுக்கு சோர்வும் பெருமூச்சும் ஏற்படுத்தும். பழுத்த பழம் இனிப்பானது. குளிர்ச்சி தருபவை. மலமிளக்கி, புஷ்டி தருபவை. வாத பித்த சீற்றங்களிலும், வயிற்று புண்களிலும் பழம் பலன் தருபவை. கொட்டை இனிப்பானதும், சிறுநீரை அதிகப்படுத்தும். மலச்சிக்கலை ஏற்படுத்தும். மரக்கட்டை நரம்புகளுக்கு மந்தித்த உணர்வை ஏற்படுத்துவதால் இழுப்பு நோய்களில் பயன்படுகிறது. பால் கண் நோய்களிலும், உணவுக் குழாய் தொந்திரவுகளிலும் பயன்தருபவை. குண :-குணம்-ஜீர்ணமாவதில் தாமதிப்பவை, பிசுபிசுப்புத்தன்மை. சுவை-இனிப்பு மற்றும் துவர்ப்பு ஜீர்ணத்தின் இறுதியில்-இனிப்பாக மாறிவிடும். வீர்யம்-குளிர்ச்சியானது. செயல்க:-தோஷங்களில் - பிஞ்சுக்காய் துவர்ப்பு, இனிப்புச் சுவையாலும் குளிர்ச்சி, பிசுபிசுப்பினாலும் கபவாதங்களை அதிகரித்து பித்தத்தைச் சாந்தியுறச் செய்யும். பழுத்த பழம் வாதபித்தங்களைக் கண்டிக்கக்கூடியது. வெளிப்புற பூச்சுகளில்: -மரத்திலிருந்து கசியும் பால் சிறுகட்டியுடன் கூடிய வீக்கங்களிலும், புண்ணை பழுக்கச் செய்து ஆற்றும் தன்மை கொம்டவை. ஜீர்ண உறுப்புகளி -பழுத்த பலாப்பழத்தை சுற்றியிருக்கும் கோதுகளை நீக்கி சுளையை மட்டும் சாப்பிட நல்ல மணமும் ருசியும் பெறுகிறோம். ஜீர்ணயிப்பது எளிதல்ல என்பதால் உணவின் நடுவே சேர்த்துக் கொள்வது, நெய், தேன் சேர்த்து சாப்பிடுவது, சர்க்கரை வெல்லம் சேர்த்து சக்கபிரதமன், சர்க்கரை பாகில் போட்டு வைப்பது போன்ற முறைகளில் அளவுடன் மிதமாய், நெய், தேன், சர்க்கரை சேர்த்து உணவின் நடுவே ஜீர்ண சக்தி நன்றாக இருக்கும் வேளையில், சாப்பிடுவது நல்லது. இலைகளை கஷாயமாக காய்ச்சி குடிப்பதால் பேதி நின்று விடுகிறது.
சுவாஸ கோஸத்தில்:- மூச்சிக் குழாயில் கபம் நீர்த்தும், வயிற்றில் மந்தமும் இருக்கும் போது பலாச்சுளைகள் நல்லதல்ல. சுவாஸாசயம் வரண்டு வரட்டிருமல் பாதிக்கும் வேளைகளிலும், கக்குவான் இருமலில் கக்குவானின் வேகத்தைக் குறைக்க இதன் சுளைகளை நெய் தேன் கலந்து கொடுப்பது மிகுந்த பயனைத்தரும். சுளைகளை அதிக ஆர்வத்தினால் அளவுக்கு eP சாப்பிட்டு அதனால் ஏற்படும் அஜீரணம் வாந்தி பேதியில் சுளையைச் சுற்றியுள்ள கோதுகளை அனலில் கருக்கி அந்தக் கரியை தேன் விட்டுக் குழப்பி சாப்பிட உடன் குணம் தரும். ரத்தக் குழாய்களில்:-ரத்த பித்தம் எனும் ரத்த வாந்தி, ரத்த பேதி, வாய் மற்றும் ஆஸன வாய் வழியாக ரத்தப் பெருக்கிலும் நோயாளியின் ஜீரண சக்தியை அறிந்து பலாப்பழத்தை சாப்பிடத் தருவதால் நோயை கட்டுப்படுத்தலாம்.
பிறப்புறுப்புகளில்

பழம் இனிப்பு மற்றும் பிசுபிசுப்புத்தன்மை உடையதால் ஆண்மை அதிகரிக்கும் தன்மையை உடையது.
தோலில்

இலை மற்றும் வைர்க்கஷாயம் 50 IL முதல் 100 IL வரை காலை, மாலை வெறும் வயிற்றில் பருக தோலில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு, எரிச்சல், ஆகியவை குணமடைந்து விடும். இலைக்கஷாயம் விஷத்தை முறிக்கும் சக்தியுடையவை.
பநஸம் சீதளம் பக்வம் ஸ்நிக்தம் பித்தாநிலாபஹம் தர்ப்பணம் ப்ரும்ஹணம் ஸ்வாது மாம்ஸலம் ச்லேஷ்மலம் ப்ருசம் பல்யம் சுக்ரப்ரதம் ஹந்தி ரக்த பித்த க்ஷதவ்ரணாந் ஆமம் ததேவ விஷ்டம்பி வாதலம் துவரம் குரு பனஸோத்பவபீஜாநி வ்ருஷ்யாணி மதுராணிச குரூணி பத்தவிட்கானி ஸ்ருஷ்டமூத்ராணி ஸம்வதேத் விசேஷாத் பனஸோ வர்ஜ்யோகுல்மிபிர் மந்தவாந்ஹிபி: -பாவப்ரகாசம். 

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

 


No comments:

Post a Comment